செய்தி

எனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது..

Monday, 9 July 2018

தினமணி- திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் நூலின் மதிப்புரை

தினமணி செய்தி தாள் 09-07-2018 அன்று வந்த 'திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள்' என்ற எனது நூலின் மதிப்புரை


திருக்குறள்

Wednesday, 9 May 2018

திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் நூல் வெளியீட்டு விழா

திருக்குறள்


திருக்குறள்

09-05-2018 அன்று புதன் கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத் துறை, 
மெரினா வளாகம் பவளவிழாக் கலையரங்கத்தில் 
இரா. பஞ்சவர்ணம் எழுதிய 
திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 
வெளியிட்டு விழாவில் சென்னை வருமான வரித்துறை துணை ஆணையர் 
எஸ்.பி. சக்ரப்போர்த்தி IRS, 
நூலாசிரியர் இரா. பஞ்சவர்ணம்
முன்னால் அரசு செயலாளர் கி. தனவேல் IAS பணி ஓய்வு, 
தமிழ் வளர்ச்சித் துறை, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் 
மாஃபா. க. பாண்டியராசன், 
சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் பேராசிரியர் 
இராம சீனுவாசன், 
தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலக தமிழ் வளர்ச்சி நிறுவன இயக்குநர்   
முனைவர்.கோ. விசயராகவன், 
திருக்குறள் ஆய்வு மைய உதவி பேராசிரியர் முனைவர் 
வ. இரகுராமன், 
சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறை தலைவர் பேராசிரியர்
ஒப்பிலா மதிவாணன்.


திருக்குறள்திருக்குறள்

Tuesday, 1 May 2018

09-05-2018 புதன் கிழமை அன்று இரா. பஞ்சவர்ணம் அவர்களின் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் என்னும் நூல் வெளியீடு

திருக்குறள் தாவரங்கள் 

இரா. பஞ்சவர்ணம்


சிறுதானியத் தாவரங்கள் நூலுக்கு தமிழக அரசு பரிசளிப்பு
2015  ஆண்டு தமிழக அரசு சிறந்த நூல் பரிசளிப்பு திட்டத்தில் வேளாண்மை பிரிவின் சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்ட
  'சிறுதானியத் தாவரங்கள்' என்னும் நூலுக்கு பரிசஅளிப்பு.
பரிசை தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மான்புமிகு மாஃபா. க. பாண்டியராஜன் அவர்கள் அளிக்க நூலாசிரியர் இரா. பஞ்சவர்ணம் பெற்றுக்கொண்டார்.
உடன் சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் ஒப்பிலா மதிவாணன் , கலைப்பண்பாட்டுத் துறை இரா. குணசேகரன், உலகத் திருக்குறள் பேரவை முனைவர் வி.ஜி. சந்தோஷம், அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு. இரா. வெங்கடேசன், இ.ஆ.ப.,  மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குர் (பொ), தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள்.

Monday, 23 April 2018

சிறுதானியத் தாவரங்கள் - தமிழக அரசின் சிறந்த நூல்


எனது நூல் 'சிறுதானியத் தாவரங்கள்' 2015-ஆம் ஆண்டின் தமிழக அரசின் சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதன் விழா 29-4-2018 அன்று காலை 10.30 மணிக்கு தரமணி உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற உள்ளது.சிறுதானியத் தாவரங்கள் 
தமிழக அரசின் சிறந்த நூல்

உலக புத்த தினத்தில் (23-04-2018) எனது நூல்

உலக புத்த தினத்தில் (23-04-2018) எனது நூல்
திருக்குறளில் இடம் பெற்றுள்ள தாவரங்கள், தாவரப் பாகங்கள், திருக்குறளில் தாவரவியல்,
(திருக்குறள் மூலம், பிரித்தாளுதல், நுண்ணுரை, தடை(வினா) விடையுடன்) 400 - பக்கம்


திருக்குறள்

திருக்குறள்

Sunday, 11 February 2018

பழந்தமிழர் வாழ்வியல் ஆய்விருக்கை
உலக தமிழாராய்ச்சி நிறுவனபழந்தமிழர் வாழ்வியல் ஆய்விருக்கை தொடக்கவிழா
உலக தமிழாராய்ச்சி  நிறுவன பழந்தமிழர் வாழ்வியல்  ஆய்விருக்கை 

பஞ்சவர்ணம்


11-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று உலக தமிழாராய்ச்சி நிறுவன பழந்தமிழர் வாழ்வியல் ஆய்விருக்கை தொடக்கவிழாவில் இரா. பஞ்சவர்ணம் அவர்களுக்கு தன்வந்திரி விருது வழங்கப்பட்டது. 

ஆய்விருக்கை பொருப்பாளர் மருத்துவர் சி. ஜெயந்திரன் அவர்கள்,
இந்திய ஆயுஷ் டைரெக்டர் ஜெனரல், பேராசிரியர் டாக்டர் ஆர்.எஸ்.இராமசுவாமி அவர்கள்,
அண்ணா பல்களைக் கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் ஏ.கலாநிதி அவர்கள்
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு நீதியரசர் 
துரைசாமி ராஜு அவர்கள்,
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் பேரா. முனைவர் கோ. விசயராகவன் அவர்கள்
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன திருமூலர் ஆய்விருக்கை நிறுவனர்                                       பேராசிரியர் முனைவர்  தி. மகாலட்சுமி அவர்களுடன் 
தன்வந்திரி விருது பெரும் இரா. பஞ்சவர்ணம்.

Thursday, 18 January 2018

பனை பாடும் பாடல் நூல் வெளியீட்டு விழா

பனைமரம்

பனை பாடும் பாடல்

17-01-2018 கோவை பேரூர் ஆதினம்
கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற
பனை உலகப் பொருளாதார மாநாட்டில்
இரா. பஞ்சவர்ணம் எழுதிய பனை பாடும் பாடல் ன்ற நூல் வெளியீடு
வனம் இந்திய அறக்கட்டளை பொருளாளர் - பி.எம்.ஆர். சுந்தரமூர்த்தி அவர்கள்
சேனாதிபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிறுவனர்
கார்த்திகேயன் சிவசேனாதிபதி அவர்கள்
தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள்
தவத்திரு சாந்தலிங்க அடிகளார், கலை அறிவியல் தமிழ்கல்லூரி முதல்வர்
முனைவர் மருதாசல அடிகளார் அவர்கள்
சுதேசிய இயக்க தலைவர் அறிவுடை நம்பி அவர்கள்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கப் பேரவை செயலாளர்

என்..கோன் அவர்கள், இவர்களுடன் நூலாசிரியர் இரா. பஞ்சவர்ணம்.

Wednesday, 10 January 2018

பனை பாடும் பாடல் நூல் வெளியீடு

பனை

பனை பாடும் பாடல்


எனது நூல் "பனை பாடும் பாடல்" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் 

நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியீடப்படவுள்ளது

Sunday, 11 June 2017

Taimes of india -பனை செய்தி11-06-2017 தேதி  Taimes of india வில்-பனை பற்றிய செய்திபஞ்சவர்ணம்

Monday, 1 May 2017

எனது பார்வையில் இரா. பஞ்சவர்ணத்தின் பனைமரம் - பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா

பஞ்சவர்ணம்
பனைமரம்

சிவலிங்கராஜாபேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
யாழ் பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர் (ஓய்வு)
யாழ்ப்பாணம்

எனது பார்வையில்
இரா. பஞ்சவர்ணத்தின் பனைமரம்
இரா. பஞ்சவர்ணம் எழுதிய பனைமரம் என்னும் பாரிய நூலைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. இவர் பற்றிய தகவல்களை நண்பர் விருபா குமரேசன் தந்தார்கள்.
பஞ்சவர்ணம் உழைப்பையும் ஊக்கத்தையும் இந்நூலைப் பார்க்கும் சிறுவர்கள்கூட உணர்ந்துகொள்வர்.
ஆசிரியர் பஞ்சவர்ணம், நூல் பச்சை வண்ணம். முன்னால் ஒரு தனிப்பனை. பின்னால் ஒருபனங்கூடல் (எமது நாட்டிலே பனைகள் கூட்டமாக நிற்பதைப் பனங்கூடல்என்றே அழைப்பார்கள்.) அட்டைப்படம் அழகாக இருக்கிறது.
பல்வேறு வேலைப்பளுவுக்கு மத்தியிலும் இந்த நூலைப் படித்தேன். எங்கள் ஊரிலே பனங்காய்ப்பாரதம் என்று ஒரு நூல் இருந்தது. ஆனால் இது பனைமரப்பாரதம் என்று எண்ணிக்கொண்டேன். பாரதம் ஒருநாளில் படித்து முடிக்கக் கூடியதல்லவே.
பனை பற்றி இனித் தேடமுடியாது என்ற அளவுக்குப் பஞ்சவர்ணம் பனை பற்றிய செய்திகளைத் தொகுத்துத் தந்திருக்கின்றார். தமிழ்மக்களின் வாழ்வியலோடு ஒன்றிப்போன தாவரம் பனை. சங்க இலக்கியங்களில் இருந்து சமகால இலக்கியங்கள் வரை பனை முக்கிய இடத்தைப் பெற்று வந்துள்ளது - பெற்று வருகின்றது.
இலக்கியங்களில் மாத்திரமன்றிப் பண்டைய தமிழ் இலக்கண நூல்களிலும் பனை இடம்பெற்றுள்ளது. இவற்றையெல்லாம் பஞ்சவர்ணம் இந்நூலிலே தந்துள்ளார்.
நவீன இலக்கியங்களான நாவல், சிறுகதைகளிலும் பனை முக்கிய இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஈழநாட்டிலே பனையைத் தலைப்பாகக் கொண்டும், பனைசார் தொழிலாளர்களை மையமாகக் கொண்டும் புனைகதைகள் பல தோன்றியுள்ளன. உ+ம் : செங்கையாழியானின் முற்றத்து ஒற்றைப்பனை.
செந்நெறி இலக்கியங்களில் மாத்திரமன்றி நாட்டார் இலக்கியங்களிலும் பனை முதன்மை பெற்று வந்துள்ளது. குறிப்பாகப் பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள் முதலியவற்றிலேயும் பனை பிரதான இடத்தைப் பெற்று வந்துள்ளது.
பனைமரம் என்ற இந்த நூல் இலக்கியம், வரலாறு, சமூகம், அரசியல், மருத்துவம், நாட்டார் வழக்காறு, உணவு, உறையுள் முதலான பல்வேறு விடயங்களையும் உள்வாங்கியுள்ளமை பாராட்டிற்குரியது. ஆசிரியரின் குன்றா உழைப்புக்கும் குறையா ஊக்கத்திற்கும் இவை சான்றாகும். இவை ஒவ்வொன்றையும் விரித்து எழுதுவதானால், இன்னொரு பனங்காய்ப்பாரதம் தோன்றிவிடும். விரிவஞ்சி விடுத்தோம்.
பனைமரம் என்ற இந்த நூலைப் பார்த்ததும் இரண்டு விடயங்கள் எமது எண்ணத்தில் ஆழமாக வேரோடின. ஒன்று, எமது கல்விப் பாரம்பரியமும் பனையும். இரண்டு, ஈழத்துக் குறிப்பாக வடபுலத்து மக்களின் வாழ்வியலிலே பனை பெற்ற முக்கியத்துவம்.
எமது கல்விப் பாரம்பரியத்தைக் கட்டிக்காத்துப் பேணியும் பதிவு செய்தும் வைத்த பெருமை பனைமரத்திற்கே உரியது. இனிவரும் இடங்களிலே பனைமரத்தைப் பனை என்றே குறிப்பிடுவோம். பனை என்பதே போதுமானது. பனை ஓலையிலே (ஓரளவுக்கு முற்றிய சார்வு) தான் ஏடுசெய்யப்பட்டது. ஏடு செய்வதையே பிரதான தொழிலாகக் கொண்டு வாழ்ந்த குடும்பங்களும் இங்கே இருந்தன. அனைத்து இலக்கிய இலக்கணங்களையும் ஏட்டிலேயே எழுதினர். பனை ஓலையிலே எழுதப்பட்டதால் ஆவணங்களுக்கே ஓலைஎன்று பெயர். உதாரணமாகப் பெரியபுராணத்தில் வரும் மூல ஓலை, படி ஓலைஎன்ற தொடரையும், திருவெங்கைக் கலம்பகத்திலே வரும் ஓலை காற்றில் உருட்டடாஎன்ற தொடரையும் சுட்டிக்காட்டலாம். தென் இலங்கையிலே தளப்பத்துஎன்கின்ற (பனை போன்ற ஒரு தாவரம்) தாவரத்தின் ஓலையையே ஏடுஆகப் பாவித்தனர் என்று கூறுகின்றனர்.
பனை இல்லையேல் பழந்தமிழ் இலக்கியங்களை இன்று நாம் பெற்றிருக்க முடியாது. ஏடு எடுக்கும் போது ஓரம் சொரிகின்றது……” எனத் தொடங்கும் சி.வை.தா.வின் உருக்கமான தொடரும், ‘ஏடு காத்த கிழவர்என உ.வே.சா.வைக் குறிப்பிடும் பொழுதும் எம் மனக்கண் முன் பனையே விஸ்வரூபமாக நிமிர்ந்து நிற்கிறது.
வாழ்வியலோடு ஒன்றிய கருப் பொருளாகிய பனைக்குத் தமிழ் இலக்கியங்கள் முக்கிய இடத்தைக் கொடுத்திருக்கின்றன. நேரடியாக, மறைமுகமான, உவமையாகப் பனையும் பனம் பண்டங்களும் இலக்கியங்களிலே பதிவாகியுள்ளன. காவியங்கள், புராணங்கள், பக்தி இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் முதலானவை பனை பற்றி நிறையவே பேசுகின்றன. பஞ்சவர்ணம் இவை பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறார்.
பனையின் பயன்பாட்டினைப் பல தளங்களிலே நோக்கியுள்ள ஆசிரியர், பல தகவல்களையும் புள்ளி விபர அடிப்படையிலே விஞ்ஞான ரீதியாக விளக்கியுள்ளார். பனங்கள்ளினையும் நவீன பானங்களையும் ஒப்பீட்டு அடிப்படையிலே காட்டியுள்ளமையைச் சான்றாகச் சுட்டிக்காட்டலாம்.
பனையில் இருந்து பெறும் பொருள்களைக் கொண்டு பனம் பண்டங்களைத் (பனையிலிருந்து பெறும் உணவுப் பொருட்களைப் பனம் பண்டம் என்று வழங்கும் வழக்காறு யாழ்ப்பாணத்திலே உண்டு) தயாரிக்கும் முறைகளை மனையியல்பாட விளக்கம் போல ஆசிரியர் தருகின்றார்.
அழகான படங்கள் (நறுக்கு ஓவியம் உட்பட) இந்நூலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. பனை பற்றிய ஆங்கிலக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புக்கள், உதாரணப் பாடல்கள் எனப் பல விடயங்கள் இந்நூலுக்குப் பெருமை சேர்க்கின்றன.
ஈழநாட்டிலே பனையின் பயன்பாடு பற்றிய இலக்கியங்களையும் செய்திகளையும் (பனை அபிவிருத்திச் சபை உட்பட) தந்துள்ள பஞ்சவர்ணம் தமக்குக் கிடைத்த தகவல்களையே பதிவுசெய்துள்ளார். இன்னும் இடம்பெற வேண்டிய விடயங்கள் நிறையவே உள்ளன.
பனை பற்றியும் பனையின் பயன்பாடு பற்றியும் ஈழத்து அறிஞர்கள் பலர் பதிவு செய்துள்ளனர். இவர்களிலே பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை வியந்து குறிப்பிடப்பட வேண்டியவர். இவர் எழுதிய காதலியாற்றுப் படையிலே பனை மிக முக்கிய இடம் பெறுகின்றது. காதலியாற்றுப்படைத் தலைவகைக் கரு நெடும்பனங்காடு கிழவோனேஎன்று கூறியே ஆற்றுப்படையை நிறைவுசெய்கின்றார்.
இலங்கையில் நடந்த யுத்தகாலங்களிலே பனையின் பயன்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவை விரிவாகப் பேசவேண்டியவை.
இந்நூல் ஒரு புதிய பெரிய முயற்சி. நீண்டநாள் உழைப்பின் அறுவடை. எமது பண்பாட்டின் அடையாளங்களில் ஒன்றான பனையின் விஸ்வரூபத்தைக் காட்டும் அரியதோர் ஆவணம். அறிஞர் இரா.பஞ்சவர்ணத்திற்கு எம் பாராட்டுக்கள்.

Tuesday, 4 April 2017

பெருந்தலைவர் காமராஜருடன் பஞ்சவர்ணம்

1972-ஆம் வருடம் காங்ரஸ் கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்வு பெற்று வாழ்த்து பெற சென்ற போது பெருந்தலைவர் காமராஜருடன்  - பண்ருட்டி பஞ்சவர்ணம்


Sunday, 5 March 2017

தினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை'பனைமரம்' நூலின் திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டதுசிறப்பாக வெளியிடப்பட்ட தினமலர் நாளிதழிற்கும், மதிப்புரை எழுதிய பன்னிரு கைவடிவேலன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


பனைமரம்Thursday, 16 February 2017

பனைமரம் நூல் மதிப்புரை

டாக்டர் இரா. பஞ்சவர்ணம் அவர்கள் எழுதிய பனைமரம் நூல் மதிப்புரை ஹிக்கிம்பாதம்(HIGGINBOTHAMS) நடத்தும் செய்தி மடலான தி மெயிலில்(The mail)


பனைமரம்

பஞ்சவர்ணம்

Thursday, 12 January 2017

அருட்பாத் தாவரங்கள் நூல் மதிப்புரை அரிமா நோக்கு.

இரா. பஞ்சவர்ணம் அவர்கள் எழுதிய வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் மதிப்புரை அரிமா நோக்கு.
பலாமரம் நூல் மதிப்புரை

இரா. பஞ்சவர்ணம் அவர்கள் எழுதிய பலாமரம் நூல் மதிப்புரை ஹிக்கிம்பாதம்(HIGGINBOTHAMS) நடத்தும் செய்தி மடலான தி மெயிலில்(The mail)


பலாமரம்


Friday, 23 December 2016

பனைமரம் நூல் வெளியீட்டு விழா

பனைமரம்
பனைமரம் - panai maram
மொழி - தமிழ்
ISBN NUMBER - 9788192377193
மொத்த பக்கம் - 756
விலை - ரூ. 800
வெளியீட்டு தேதி - 21-12-16
எடை - 900 கிராம்
நூல் அளவு  அகலம் 14 செமீ; நீளம் 22 செமீ; மையம்: 3.5 செமீ

பனைமரம்

நூல் வெளியீடு
இலக்கியச் செல்வர் தமிழ்த்திரு குமரி அனந்தன் அவர்கள் வெளியிட
சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
பேராசிரியர் டாக்டர் பொற்கோ அவர்கள் பெற்றுக்கொண்டார்.

உடன் - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர்,
பேராசிரியர் முனைவர் ஒப்பிலா மதிவாணன்,
சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாக இயக்குநர்,
 பேராசிரியர் டாக்டர் அ. பாலு,
சென்னைத் தொலைக்காட்சி இயக்குநர்,
முனைவர் பால. இரமணி இ.ஒ.ப,
கவிஞரேறு தமிழ்த்திரு கி. தனவேல் இ.ஆ.ப,
நூல் ஆசிரியர் டாக்டர் இரா.பஞ்சவர்ணம் மற்றும்
சென்னைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட
ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஸ்ரீ. பாஸ்கரன்.

ஒப்பிலா மதிவாணன்
பேராசிரியர் ஒப்பிலா மதிவாணன் நோக்க உரை

பொற்கோ
பேராசிரியர் டாக்டர் பொற்கோ தலைமை உரை


கி. தனவேல் இ.ஆ.ப
கவிஞரேறு தமித்திரு கி. தனவேல் இ.ஆ.ப நூல் அறிமுக உரை

குமரி அனந்தன்
இலக்கியச் செல்வர் தமிழ்த்திரு குமரி அனந்தன் நூல் வெளியீட்டு உரை

பால. இரமணி 
சென்னை தொலைக்காட்சி இயக்குநர், முனைவர் பால. இரமணி சிறப்புரை


ஸ்ரீ. பாஸ்கரன்
நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஸ்ரீ. பாஸ்கரன் சிறப்புரை

அ. பாலு
மெரின வளாக இயக்குநர் பேராசிரியர் டாக்டர் அ. பாலு சிறப்புரை

பஞ்சவர்ணம்
நூல் ஆசிரியர் டாக்டர் இரா. பஞ்சவர்ணம் எற்புரை