செய்தி

2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

Thursday 25 April 2013

5.அசோகு -Asokam

ங் இலக்கியத் தாவரங்கள்

5.அசோகு
                 
     அசோகு, பிண்டி, செயலை இம்மூன்றும் உரையாசிரியர்களும், திறனாய்வாளர்களும், ஒன்றென கொண்டனர். ஆனால் இம்மூன்றும் ஒரே தாவரம் அல்ல.
    அசோகு சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகைத் தொகுப்பில் கலித்தொகையில் குறிஞ்சிக் கலிபாடலில் கபிலரை ஆசிரியராக குறிப்பிடப்பட்டுள்ளது.
              ‘பொழி பெயல் வண்மையான் அசோகம் என்று
அசோகம் இளமாவின் தளிர் போன்றது என்று மட்டுமே கபிலரால் குறிப்பிடப்பட்டுள்ளது
ஆகையால் இம்மூன்றும் வெவ்வேறான தாவரங்கள் என்ற கண்ணோட்டத்தில் சங்கஇலக்கியம்,,காப்பியங்கள்,
பக்திஇலக்கியம் பிற்காலஇலக்கியங்கள்  ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

அசோகு சங்க இலக்கியங்கம், பதினென் கீழ்கணக்கு நூல்களிள் கலித்தொகை தவிர மற்ற எதிலும் இடம் பெறவில்லை. எட்டுத்தொகைத் தொகுப்பில் கலித்தொகையில் குறிஞ்சிக் கலிபாடலில் கபிலரால் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பு உள்ளதால் சங்க இலக்கிய தொகுப்பில் தவறு இறுக்கலாம். கால நிர்ணய ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்

இலக்கியங்கள்
     சங்க இலக்கியம்
                                     எட்டுத்தொகை

பொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவினுள்
கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய்! அதன் தலை
சென்றாள் அறிவைக் கவர்ந்து! 57(21):12,13
                                              - கலித்தொகை - குறிஞ்சிக் கலி - கபிலர்.
இலக்கண நூல்கள்
                               நன்னூல்.
               .
பூமலி அசோகின்புனைநிழல் அமர்ந்த
நான்முகற் றொழுதுநன் கியம்புவன் எழுத்தே 56
                                               - கடவுள் வணக்கம் -எழுத்தியல்- எழுத்ததிகாரம் 
                                     
இதிகாசங்கள்
           கம்பராமாயணம்
 ‘அருந்ததி அனையாளே! அமுதினும் இனியாளே!
செருந்தியின் மலர் தாங்கும் செறி இதழின் அசோகம்,
பொருந்திய களி வண்டில் பொதிவன, பொன் ஊதும்
இருந்தையின் எழு தீ ஒத்து எழுவது ஒர் இயல் பாராய். - 2095:8.
- அயோத்தியா காண்டம் - வனம் புகு படலம்.
வரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க,
அரும்பு நாள் மலர் அசோகங்கள் அலர் விளக்கு எடுப்ப,
நரம்பின் நான்ற தேன் தாரை கொள் நறுமலர் யாழில்
சுரும்பு பாண் செயத், தோகை நின்று ஆடுவ சோலை      - 541:64.
- விதேகநாட்டுச் சோலைகளின் சிறப்பு.
- அகலிகைப் படலம், பாலகாண்டம்.
ஐம்பெருங் காப்பியம்
                            சிலப்பதிகாரம்
செந்தாமரை விரிய தேமாம் கொழுந்து ஒழுக
மைந்தார் அசோகம்மடல்அவிழ-கொந்து ஆர்
இளவேனில் வந்ததால் என் ஆம்கொல் இன்று
வளவேல் நல் கண்ணி மனம்.
- புகார்க்காண்டம்.
- வேனில் காதை.
- இளங்கோவடிகள்

                           மணிமேகலை
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்
திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்துஅலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முடமுள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும்-3:160-165
                                                      -மலர்வனம் புக்க காதை..
   ஐஞ்சிறு காப்பியம்
                                  சூளாமணி
புல்லிவண்ட மர்ந்துகங்கு பூந்தழைப்பொ தும்பிடை
மல்லிகை  க்கொ டிக்கலந்து மெளவல்சூட வெளவுநீர்
வல்லிமண்ட பங்கள்சென்று மாதவிக் கொழுந்தணி
அல்லிமண்ட பத்தயல சோகமாங்க ணெய்தினார்
- தூதுவிடு சருக்கம்

            உதயன குமார காவியம்

பொன்னெயில் நடுவண் ஓங்கும் பூநிறை அசோக நீழல்
இன்னியல் ஆலயத்துள் ஏந்தரி ஆசனத்தின்
மன்னிய வாமன் பாதம் வந்தனை செய்து வாழ்த்தி
உன்னத மகிமை மிக்கான் உதயணன் கதை விரிப்பாம்.
- கடவுள் வாழ்த்து - உஞ்சைக் காண்டம்
பக்தி இலக்கியம்
               கந்தபுராணம்
சந்தம் அகில் பலவும் தேமாச் சரளமே திலகம் தேக்குக்
கொந்து அவிழ் அசோகு புன்கு குரவொடு நாளி கேரம்
நந்திய கதலி கன்னல் நாகு இளம் பூகம் வன்னி
முந்து உயர் காஞ்சி வேங்கை முதலிய வேலி கோலி-2928
- அசுர காண்டம் - இந்திரன் கரந்து உறைபடலம்.
            
              கல்லாடம்
செம்பஞ்சு, அரத்தம், திலகம், உலோத்திரம்,
முயலின் சோரி, சிந்துரம், குன்றி,   கவிர் அலர்
என்னக் கவர் நிறம் எட்டும
குருவிந் தத்தில் குறித்தன நிறமும
அசோகப் பல்லவம், அலரி, செம்பஞ்சு -31-35  
                                    - மெலிவு கண்டு செவிலி கூறல

               திருவிளையாடற் புராணம்
தமிழ் முதல் பதினெண் தேத்து மகளிரும் தாரு நாட்டின்
அமிழ்த மன்னவரும் முல்லை அம்புயம் குமுதம் நீலம்
குமிழ் நறும் கோங்கு காந்தள் கோழ் இணர் அசோகம் வாசம்
உமிழ் தர மலர்ந்த நந்த வனம் என ஒருங்கு மொய்த்தார். -716:117.
                                         - மதுரைக் காண்டம் - திருமணப் படலம்.
                       
களி தரு சௌகந்திகத்தின் இற இலவம் போது குயில் கண் அசோகம்
தளிர் அவிர் பொன் செம்பஞ்சியை வண்ணம் என ஆறு தகுதோ வாங்க
ஒளி குரவு குசும்பை மலர் செங்கல் கொவ்வைக் கனி என ஒருநான்குஅந்தமிளிர் பதும ராகத்தைப் பொதுமையினால் சோதிக்க வேண்டும்எல்ல-1234:40.
                                             -மதுரைக் காண்டம் - மாணிக்கம் விற்ற படலம்.

                பெருங்காதை
இமையோர் இறைவனை எதிர்கொண் டோம்பும்
அமையா தீட்டிய அருந்தவ முனிவரின்
வியலக வேந்தனை இயல்புளி எதிர்கொண்(டு)
அணித்தகு பள்ளி அசோகத் தணிநிழல்
மணித்தார் மார்பனை மணன்மிசை அடுத்த  - 35
                                   - இலாவாண காண்டம் - 13. குறிக்கோள் கேட்டது

திருவாய்மொழி நூற்றந்தாதி
வளைத்துவைத் தேனினிப் போகலொட் டேனுன்ற னிந்திர ஞாலங்களால்
ஒளித்திடில் நின்திரு வானைகண் டாய்நீ யொருவர்க்கும் மெய்யன்னல்லை
அளித்தெங்கும் நாடு நகரமும் தம்முடைத் தீவினை தீர்க்கலுற்று
தெளித்து வலஞ்செய்யும் தீர்த்த முடைத்திரு மாலிருஞ் சோலை யெந்தாய்!
                                                     - பெரியாழ்வார் பாடிய திருமொழி.

              பன்னிரு திருமுறை
அந்தண் மாதவி புன்னை நல்ல அசோக மும்மர விந்தம் மல்லிகை
பைந்தண் ஞாழல்கள் சூழ்புறவார் பனங்காட்டூர்
எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன் என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர்
சந்தம் ஆயவனே தவத்தார்க் கருளாயே.
                                                 -2-ஆம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)
பள்ளிகள் மேலும் மாடு பயில்அமண் பாழி மேலும்
ஒள்ளிதழ் அசோகின் மேலும் உணவுசெய் கவளங் கையில்
கொள்ளும்மண் டபங்கள் மேலும் கூகையோ டாந்தை தீய
புள்ளின மான தம்மில் பூசலிட் டழிவு சாற்றும்.
-                                             2-ஆம் திருமுறை - தேவாரம் (திருஞானசம்பந்தர்)

சீர்மலி அசோகு தன்கீழ் இருந்தநந் தேவர் மேலே
வேரொடு சாய்ந்து வீழக் கண்டனம் அதன்பின் னாக
ஏர்கொள்முக் குடையுந் தாமும் எழுந்துகை நாற்றிப் போக
ஊருளோர் ஓடிக் காணக் கண்டனம் என்று ரைப்பார்
-                                 12-ம் திருமுறை - திருத்தொண்டர் புராணம்(சேக்கிழார்)

             திருநெறி

வாச மாமலர் அசோகு பேணிமறை நீதி யோடுமலை யுந்தவத்(து)
ஆசை யாலுடை அகன்று மாசினை அடைந்தில் வாழ்தரும் அறத்தினில்
பாச மானது தவிர்ந்து பண்டிபட வுண்டு பாயினோடு பீலிமேல்
நேச மாயவை தரித்துள்ளோர் களின் நிகண்ட வாதியை நிகழ்த்துவாம்.
                                                  - பரபக்கம் - நிகண்டவாதி மதம்
                                                - சிவஞான சித்தியார்
             வில்லி பாரதம்
பைந் தடந் தாளால் முன்னம் பருகிய புனலை மீளச்
செந் தழல் ஆக்கி அம் தண் சினைதொறும் காட்டும் சீரால்
முந்திய அசோகு சூதம் முதலிய தருக்கள் எல்லாம்
இந்திரசாலம் வல்லோர் இயற்கையின் இயற்றுமாலோ
                                       - சம்பவச் சருக்கம்

கோத்திரங்களின் கவானிடைக் கதுமெனக் கொளுந்தி உற்று எரிகின்ற
தீத் திறங்கள் செங் காந்தளும் அசோகமும் செங் குறிஞ்சியும் சேரப்
பூத்த ஒத்தன அன்றியும் குலிக நீர் பொழி அருவியும் போன்ற
பார்த்த கண்கள் விட்டு ஏகலா வகை நிறம் பரந்த தாதுவும் போன்ற.
                                          - காண்டவ தகனச் சருக்கம்
           நிகண்டுகள்
அசோக மெனும்பெய ரசோகின் தருவும்
இன்பமும் எனவே இயம்பப் பெறுமே. - 141
                                                          - வட மலை நிகண்டு.

               விருட்ச ஆயுர்வேதம்
முருங்கை, வில்வம், ஏழிலைப்பாலை, நொச்சி,
அசோகம், வன்னி, கரிஆல்
கார்கந்து, மகிழம், வேம்பு, தேக்கு ஆகியவை
வறண்ட நிலத்தில் வளர்வன.   - 42:1-4
                                                         - 4. நிலமும் மண்ணும்  சுரபாலர்.

பாலினி (வெற்றிலைப் பட்டை) அசோகம்,
புன்னை, வாகை, வேம்பு என்ற ஐந்தும்
தெய்வீகமானவை; நோய் தீர்ப்பவை;
உயிர் காப்பவை; அவற்றை முதலில் நடுக.   - 92:1-4
                                 - 6. மரநடவும் வன அமைப்பு நுட்பங்களும்.
                               - சுரபாலர்.

அசோகைப் பற்றிய இலக்கிய அடைமொழிகள்

மடல்அவிழ் அசோகம்     இளங்கோவடிகள்
செறிஇதழ் அசோகம்        கம்பர்
கொழுங்கால் அசோகு     சீத்தலைச் சாத்தனார்
கோழ்இணர் அசோகம்     பரஞ்சோதி முனிவர்
கொந்துஅவிழ் அசோகு    கச்சியப்பர்
வாசமாமலர் அசோகு      சிவஞான சித்தியார்
ஒள்ளிதழ் அசோகம்         சேக்கிழார்
பூநிறை அசோகம்               காண்டியர்

அசோகின் பூவைப் பற்றிக் கூறுமிடத்து

பூநிறை                    :  பூக்கள் நிறைந்திருக்கின்ற
வாச மாமலர்                    :   வாசனையுடைய மலர்
கொத்து அவிழ்                 :  கொத்தான மலர்கள்
மடல் அவிழ்                     :  இதழ் விரிந்து
ஒள் இதழ்                :  ஒளி பொருந்திய வண்ண மலர்

இலைகளைப் பற்றிக் குறிப்பிடாமல் மலர்களை பற்றி மட்டுமே கூறப்படுகின்றது 
கூறப்படும் விளக்கம் எல்லாம் Saraca asoca என்ற தாவரத்திற்கு 
பொருத்தமாக உள்ளது.

அசோகு
Saraca asoca 

தாவரவிளக்கம்

Classification
Name
வகைபாடு
தாவரத் தகவல் மையப் பெயர்
Kingdom
PLANTAE
உலகம்
தாவரம்
Division
DICOTYLEDONAE
தலை முறை
இரு வித்திலை
Order
FABALES
தலைக் கட்டு
ஒரு மைய சூலகத் தாவரம்
Family
CAESALPINIACEAE R.Br.
குடி
கொன்றை குடி
Genus
Saraca Linn.
Old Genus - Jonesia
பிறவி
அசோகு
Species epithet
asoca (Roxb.) Wilde
பெயர் வழி
நாட்டு
Botanical Name
Saraca asoca (Roxb.) Wilde
தாவரவியல் பெயர்
பூநிறை அசோகம் காண்டியர்
Synonym
4 - Synonyms
Jonesia asoca Roxb.
Jonesia confusa Hassk.
Jonesia pinnata Willd.
Saraca confusa (Hassk.) Backer
வேறு பெயர்கள்
Habit
Tree
வளரியல்பு
மரம்

மரத்தின் பண்புகள்
வளரியல்பு : சிறிய மரம் சுமார் 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
மரத்தண்டு: தண்டில் கழலைகள் காணப்படும்.
மரப்பட்டை :பட்டை பட்டைத்துளைகள் (Lenticellate) கொண்டது, மரத்தின் பட்டை மெலிதான வெடிப்புகளுடையது; உள்பட்டை கரும் ஊதா நிறமானது.
சிறிய நுனிக்கிளைகள் :குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : கூட்டிலைகள், இரட்டைபடை சிறகுவடிவக்கூட்டிலை (Paripinnate), மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (Distichous); இலையடிச்செதில்கள் உதிரக்கூடியது; இலைக்காம்பு (Rachis) சுமார் 7-30 செ.மீ. நீளமானது; சிற்றிலைக்காம்பு சுமார் 0.1-0.6 செ.மீ. நீளமானது; சிற்றிலைகள் எதிரானவை, 4-6 (-12) ஜோடிகள், இலைப்பகுதி சுமார் 6-31 X 1.5-9 செ.மீ. நீளமானது, குறுகிய நீள்வட்டம் அல்லது நீள்சதுரமானது அல்லது ஈட்டி வடிவமானது, நுனி அதிக கூர்மையானது, தளம் கூர்மையானது முதல் வட்டமானது அல்லது சிறு இதய (Subcardate) வடிவானது, மிருதுவானது கீழ்பரப்பு உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 11 ஜோடிகள், வளைவானது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.
மஞ்சரி: மஞ்சரி அடர்ந்த மட்ட நுனிப்பூந்துணர் (corymb),வகையைச் சேர்ந்தது.
மலர்கள்:மஞ்சள் வண்ண மலர்கள் சிலவற்றில் வெள்ளை நிறத்துடன் காணப்படும்; மலர்கள் நறுமணம் கொண்டது.
கனிகள்: இருபுற வெடிகனி (Pod), அவரைப்போன்றது, தட்டையானது, நீள்சதுர வடிவமுடையது, சுமார் 15 X 4.5 செ.மீ. வரை நீளமானது, முட்டை வடிவமானது.
விதைகள்:வட்டமான விதைகளையுடையது.
வாழியல்வு : கீழ்மட்ட அடுக்கு (Understorey) மரமாக, கடல் மட்டத்திலிருந்து 600 மீ. உயரம் வரையுள்ள பசுமைமாறாக்காடுகள் முதல் பகுதி பசுமைமாறாக்காடுகளில் உள்ள சிற்றோடைகளின் ஓரத்தில் காணப்படும்.
காணப்படும் இடம் : இந்தியா, ஸ்ரீலங்கா, பங்களாதேசம், மியான்மார்; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - தெற்கு, மத்திய மற்றும் தென்மஹாராஷ்ட்ரா பகுதிகளை கொண்ட சயாத்திரி பகுதிகளில் காணப்படும்.
தற்போதைய நிலை : பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவை.

பிற்கால,இலக்கியங்களில் அசோகம் மரத்தை அடையாளம் காட்டும் போது கொத்தான மலர் என்றும், வாசனை பொருந்திய மலர் என்றும்
ஒளி பொருந்திய மலர் என்றும் கூறப்படுகிறது.
           சங்க இலக்கியங்களில் பிண்டியைப் பற்றிக் கூறும்போது ஒண் தளிர் என்றும், அணி மலர் மாலையைப் போன்று நீண்ட அடுக்கு கொண்ட பல மலர்களைக் கொண்டது எனக் கூறப்படுகிறது.
                  செயலை தாவரத்தை பொருத்தமட்டில் முழுக்க முழுக்க இளந்தளிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செவ்வரை, ஒண் தளிர்
அம் குழை, அம் தளிர் எனக் கூறப்பட்டுள்ளது.

மேற்சொன்ன மூன்று தாவரங்களும் CAESALPINIACEAE என்ற ஓரே குடியைச் சார்தவை. ஒரே இயற்கைச் சூழலில் வளருபவை. குறிஞ்சி நிலத்தில் மலைப் பிரதேசத்தில் ஆற்று ஓரங்களில் காணப்படுபவை என்பதைத் தவிர வேறு தொடர்பு இல்லை. ஆகையால் இவை மூன்றும் வெவ்வேறு பிறவியை (Genus) சாரந்தத் தாரவரங்கள் என்பதில் சந்தேகமில்லை. 
            ஆகையால் இம்மூன்றும் வெவ்வேறான தாவரங்கள் என்றகண்ணோட்டத்தில் 
சங்க இலக்கியம்,,காப்பியங்கள்,பக்திஇலக்கியம்
பிற்காலஇலக்கியங்கள்  ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
     இதன் அடிப்படையில் இம்மூன்றும் வெவ்வேறானவை எனக்கருத  இடமுண்டு.
                  இம்மூன்றும் ஒன்றென்று இதுகாறும் அடையாளம்  காணப்பட்டது தவறென்றும்அவைகள் வெவ்வேறானவையே என்பதையும் சந்தேகத்திற்கு இடமின்றி இதன் மூலம் அறிந்து கொண்டு தெளிவடைய வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

                              இரா. பஞ்சவர்ணம்
மேனாள் தலைவர், பண்ருட்டி நகராட்சி,
பண்ருட்டி.

No comments:

Post a Comment