செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

Sunday 9 June 2013

9.அதவம் - athavam



ங் இலக்கியத் தாவரங்கள்


           9.அதவம் 
                    அதவமே அத்தி
     அதவம் என குறிப்பிடப்படும் தாவரம், சங்க இலக்கியங்களில் குறுந்தொகை மற்றும் நற்றிணையில் மட்டுமே காணப்படுகின்றது. இது தற்போது அத்தி என கூறப்படும் மரத்தைக் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. அத்தி என்றப் பெயர் சங்க இலக்கியங்களில் இடம் பெறவில்லை, பிற்கால இலக்கியங்களான பக்தி இலக்கியம், சித்தர் இலக்கியம், ஐஞ்சிறுங் காப்பியத்தில் நீலகேசி, உதயன குமாரக் காவியம் விவேக சிந்தாமணி போன்றவற்றில் இடம்பெற்றுள்ளது. இவைகளில் கூறப்படும் அத்திதான் சங்க இலக்கியங்களில் அதவம் என கூறப்பட்டுள்ளது.
     சங்க இலக்கிய கூற்றான, வெண்கோட்டு அதவம் என்பதும், சிவந்த குரங்கு குட்டியின் முகத்தை ஒத்த அதவத்தின் தீம் கனி என்பதும், அத்திக்கு பொருந்தி வருகின்றது ஆகவே, அத்தியும், அதவமும் ஒன்றுதான் என்பது கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.



      சங்கஇலக்கியங்களிள் தாவர பெயர் வரும் பாடலடிகள்


  இலக்கியங்கள்
   
                              சங்க லக்கியம்

                எட்டுத்தொகை

      குறுந்தொகை

  Ø  ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து – 24:3

      நற்றிணை

  Ø  அதவத் தீம் கனி அன்ன செம் முகத் – 95:3


அதவத்தைப் பற்றிய இலக்கிய அடைமொழிகள்


வெண் கோட்டு அதவத்து பரணர்
அதவத் தீம் கனி கொட்டம்பலவனார்
        
    கருங்கால் வேம்பின் ஒண் பூ யாணர்
என்னை இன்றியும் கழிவதுகொல்லோ
                  ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து
      எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக்
  முல்ல குழையக் கொடியோர் நாவே
    காதலர் அகலக் கல்லென்றவ்வே.. 24
                         -பரணர்.-குறுந்தொகை

     கரிய அடிமரத்தையுடைய வேப்பமரத்தினது புதிய ஒளி பொருந்திய பூக்களைப் போன்ற  என்னுடையத் தலைவன் என்னை நீங்கி செல்வதுவோ?, ஆற்றங்கரையில் உள்ள வெண்மையானக் கிளைகளை உடைய அத்தி மரத்திலிருந்து விழுந்த ஒற்றைப் பழத்தை,  உண்ண விரும்பி, அங்கு குவிந்த நண்டுகளால் பழம் மிதிக்கப்பட்டுக் குழைவது போல, காதலர் நீங்கிச் செல்வதால் நான் உள்ளங்குழைந்து வருந்தும் படி 'கல்லென்று' அலர் தூற்றுகிறது.
           
      அதவம் மரம் வெண்மையானக் கிளைகளை 
உடையது என்று கூறுகின்றார்.

         கழை பாடு இரங்க, பல் இயம் கறங்க,
        ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று,
        அதவத் தீம் கனி அன்ன செம் முகத்
         துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க,
       கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து, 
             குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக்
         சீறூரோளே, நாறு மயிர்க் கொடிச்சி; 
              குன்றகத்ததுவே, குழு மிளைச் சீறூர்; 
              கொடிச்சி கையகத்ததுவே, பிறர்
          விடுத்தற்கு ஆகாது பிணித்தஎன் நெஞ்சே. 95:1-10. 
                                                                 நற்றிணை
                                                          குறிஞ்சி.  
                                                          கொட்டம்பலவனார்.



     புல்லாங்குழல்  ஒலிக்க,  பல இசைக் கருவிகள் இசைக்க, முறுக்கிய புரிகளால் ஆன வலிமையான கயிற்றில், கழையேறி  விளையாடினாள். அதை  அத்திப்பழம் போன்ற சிவந்த முகத்தையுடைய குரங்குக்குட்டி பார்த்துக் கொண்டிருந்தது; மெல்லிய தலையையுடைய வலிமையானபெண்குரங்கின்  அக்குட்டி அக்கயிற்றில் தொங்கி விளையாடியது. அதனைப் பார்த்த மலைவாழ் குறவரின் சிறுவர்கள் நறிய சிறுகுன்றிலுள்ள மூங்கில் கணுக்களில் ஏறி விரைவாக எழுந்து தாளம் கொட்டினர். அக்குன்றே கூட்டத்தார் காக்கும் சீறூர். அச்சீறூரில் வாழ்பவள் நறிய கூந்தலையுடைய கொடிச்சி. அவளால் பிணிக்கப்பட்ட என் நெஞ்சு அக்கொடிச்சியின் கையில்  உள்ளது. அதனைப் பிறர் எவரும் விடுவிக்க முடியாது.என்றுக் கூறும் இப்பாடலில் சிவந்த அத்திப் பழத்தினை, குரங்கு குட்டியின் சிவந்த முகத்திற்கு ஒப்பிட்டுக் கூறுக்கின்றார்.
     
     
இதர இலக்கியங்களிள் தாவர பெயர் வரும் பாடலடிகள்

ஐஞ்சிறு காப்பியம்
                   அத்தி காயங்க ளளவைக ளாலளந் தறிவான் 
                                         -நீலகேசி

செத்தநற்தேவி தன்னைத் திருப்பவு மீட்கலாமென்று
அத்திசை முன்னிநல்ல வருவழிப்பட்டுச் செல்ல 
அத்தியும் பிணையுமேக வாண்மயிலாடக் கண்டு 
                                          - - உதயன குமார காவியம் 

திருநெறி

முத்தி முதற்கொடி மோகக் கொடிபடர்ந்(து)
அத்தி பழுத்ததென் றுந்தீபற 
அப்பழ முண்ணாதே யுந்தீபற. 
                                         -திருவுந்தியார் – 

வில்லி பாரதம் 

அத்தியின் பலகை நவமணி அழுத்தி ஆடகத்து அமைத்து 
                                                       -அரி முகத்தால்- 
கந்தபுராணம்


தத்தமது அருள் குரவர் தாவில் வளம் நீங்கி
அத்தி இடை ஆழ் கெனினும் அன்பினது செய்கை—1-2:2037 - 

அத்தியின் அரசு பேர ஆலமும் தெரிக்கில் ஏங்க 1:-7761-கந்தபுராணம்

      பத்தாம் திருமுறை. 

       அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும் 
கொத்தி உலைப் பெய்து கூழ் அட்டு வைத்தனர் 
அத்திப் பழத்தை அறைக் கீரை வித்து உண்ணக் 
கத்தி எடுத்தவர் காடுபுக்காரே-2:18.
 -யாக்கை நிலையாமை. 
                               - திருமந்திரம். -முதல் தந்திரம். 
                                  

அரசுடன் ஆல்அத்தி ஆகும் அக்காரம்
விரவு கனலில் வியன் உரு மாறி 
நிரவயன் நின்மலன் தாள் பெற்ற நீதர் 
உருவம் பிரமன் உயர் குலம் ஆகுமே. -திருநீறு. 10:3 
                        -திருமந்திரம்.- ஆறாம் தந்திரம். 
                               

வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றி
நிறுக்கின்ற வாறும் அந் நீள்வரை ஒட்டிப் 
பொறிக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை 
அறுக்கின்ற நாள்வரும் அத்திப் பழமே.- 21:34.விந்து ஜயம் 
                                           -திருமந்திரம்.-ஏழாம் தந்திரம். 
                                         
பதினொன்ராந் திருமுறை
என்னை நினைந்தடிமை கொண்டேன் இடர்கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் புன்னை 
விரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண் 
அரசுமகிழ் -அத்திமுகத் தான். 1002., 
                                     - நம்பியாண்டார் நம்பிகள்
                                          - 
விவேக சிந்தாமணி
அத்தியின் மலரும் வெள்ளை யாக்கைகொள் காக்கைதானும்
பித்தர்தம் மனமும் நீரில் பிறந்த மீன் பாதம் தானும் 
அத்தன் மால் பிரம்ம தேவனால் அளவிடப் பட்டாலும் 
சித்திர விழியார் நெஞ்சம் தெரிந்தவர் இல்லை கண்டீர். 44. 
        
           என ஐஞ்சிறு காப்பியம், விவேக சிந்தாமணி, திருமந்திரம், கந்தபுராணம், திருநெறி, திருமுறை போன்றவற்றில் அத்தி இடம் பெருகின்றன
                                           - 

அதவம் - அத்தி


Ficus racemosa



தாவர வகைப்பாட்டியல் 

Classification
Name
வகைபாடு
தாவரத் தகவல் மையப் பெயர்
Kingdom
PLANTAE
உலகம்
தாவரம்
Family
MORACEAE Link. 
Old Family - URTICACEAE 
குடி
ஆலம் குடி
Genus
Ficus Linn. 
Old Genus - Covellia
பிறவி
Species epithet
racemosa L.
பெயர்வழி
அத்தி
Botanical Name
Ficus racemosa L. 
தாவரவியல் பெயர்
அத்தி ஆலம். தா.த.மை
Synonym
Covellia glomerata (Roxb.) Miq.
வேறு பெயர்கள்
Habit
Tree
வளரியல்பு
மரம்


தாவர விளக்கம்


வளரியல்பு : அத்தி மரம் 12 முதல் 20 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. மரத்தின் விட்டம் 3.45 மீட்டர், பசுமைமாரா அல்லது எப்பொழுதாவது இலையுதிர் மரம்.
வேர் : படர்ந்த அடிப்பகுதி அல்லது வெளிப்புறம் வேர்கள் காணப்படும்.
தண்டு : 3 மீட்டர் சுற்றளவு உடையது.
மரப்பட்டை : வெள்ளை கலந்த மற்றும் இளஞ்சிவப்பு கலந்த அல்லது பழுப்பு நிறம் போன்றது, வழவழப்பானது.
சிறுகிளைகள் : சிறுகிளை நீண்ட இளங் கிளைகள் நுண்ணிய வெண்மையான உரோமங்கள் உடையவை. வழு வழுப்பானவை, உரோமமில்லாவையாகவும் காணப்படும்.
இலைகள் : இலை தலைகீழ் ஈட்டி வடிவானவை. சுமார் 9-20 * 3-6 செ.மீ. நீளமுடையது. காம்புகள் இணைப்பற்றவை. சுரப்பிகள் அடிப்புற நரம்பு கோணங்களில் காணப்படும். சுமார் 3-5 செ.மீ. நீளமானவை. இலைத்தாள் முட்டை வடிவமான-நெடுவேல்/ஈட்டி நுனி வடிவம் போன்றது. கிட்டத்தட்ட நீள்வட்ட வடிவம் போன்று 6-18 (- 20) செ.மீ. நீளமுடையது, 3-10 (-l.2) செ.மீ. அகலமானது, 3 அகலமானவை மற்றும் மிகச் சிறு அளவில் காணப்படும். ஆப்பு வடிவம், கிட்டத்தட்ட அடித்தளம் சாய்வானவை, கிட்டத்தட்ட நுனி மழுங்கியவை, கூர்மையானது, வழு வழுப்பானவை, இரண்டும் பக்கங்களும் உரோமமில்லாதவை; பக்கவாட்டு கிளை நரம்புகள் 4-7 (-8) இரட்டைகளானவை, கீழ்ப்பகுதியில் புடைத்தவை, இணைநரம்புரகள் தெரியும்; இலையடிச் செதில்கள் மூக்கோண-முட்டை வடிவமானது, சுமார் 12-15 மி.மீ. நீளமுடையது, 4-5 மி.மீ. அகலமுடையது, முனை கூர்மையானது, பழுப்பு நிறமுடையது, நிலையானது; கீழ்ப்பகுதி பளிங்குபோன்று தெரியும்.
மகரந்தம் : மகரந்தத்தாள்கள் 2,
சூல்பை : பழுப்பு நிறமுடையவை, சூல்தண்டு உரோமம் அற்றவையாகவும் தனித்தனியானவையாகவும் காணப்படும்.
கனி : அத்திகள் ஓரகம் கொண்டவை. அடிமரத்தில் வளர்பவை, அத்தி சுவர் கெட்டியானது, மென்மையானது, முதிரும்போது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். வெடியா உலர்கனி இருகுவிவுடையவை. உருண்டை அல்லது பேரிக்காய் வடிவம் போன்றது, குறுக்களவு சுமார் 2.54 செ.மீ. அளவுடையது.
விதைகள் : இருபுறம் குவியுடையவை, சுமார் 1 மி.மீ. நீளமுடையது.
பூக்கும் பருவம் : மலர்கள் மார்ச் முதல் மே வரை பூக்கும்.
காய்க்கும் பருவம் : கனிகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை காய்க்கும்.
வாழ்விடம் : சமவெளிகள், 1500 மீட்டர் உயரமானப் பகுதிகளிலும் வளரக்கூடியவை.
பரவியிருக்குமிடம் : இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், தென் சீனா-நியூகினியா, குவின்ஸ்லாந்து போன்ற இடங்களில் காண்படும்.

மேனாள்  தலைவர், பண்ருட்டி நகராட்சி,
நிறுவனர், தாவரத் தகவல் மையம், பண்ருட்டி.
















No comments:

Post a Comment