செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

Saturday 13 April 2013

கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள் - நூல் வெளியீடு



கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள் - நூல் வெளியீடு

 புத்தக ISBN – 978-81-923771-1-7



8.7.2012 அன்று நெய்வேலி நடைப்பெற்ற 15-வது புத்தக் கண்காட்சியில் கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்என்னும் நூலை சிறந்த நூலாக தேர்வு செய்து சென்னை உயர் நீதி மன்ற முன்னால் நீதிபதியும், இந்திய இரயில்வே கட்டண விகித தீர்ப்பாய தலைவருமான, நீதிஅரசர் திரு.அ. குலசேகரன் அவர்கள் வெளியிட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன அதிபர் மற்றும் மேலாண்மை இயக்குநர்

திரு.பி. சுரேந்தர் மோகன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நெய்வெலி பழுப்பு நிலக்கரி நிறுவன மனிதவள இயக்குநர், ச.கு. ஆச்சார்யா, பேராசிரியர் டாக்டர் K.A. குணசேகரன் மணிவாசகம் பதிப்பகம் உரிமையாளர் மீனாட்சி சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.



சங்க இலக்கியத் தாவரங்களை தொகுக்கும் பணியில் முதற் கட்டமாக குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்களைப் புத்தகமாக வெளியிட முடிவெடுக்கப் பட்டுக் குறிஞ்சிப் பாட்டில் கபிலரால் பட்டியலிடப் பட்டுள்ள 112 தாவரங்களை தாவரவியல் விளக்கங்கள் மற்றும் ஒளிப் படங்களுடன் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்படுகிறது. இதை முதன்மையாக வெளியிட்டதின் நோக்கம் சங்க இலக்கியங்களில் அறியப்பட்ட 240-க்கும் மேற்பட்ட தாவரங்களில் 112 தாவரங்கள் கபிலரால் குறிஞ்சிப் பாட்டுப் பாடலில் ஒரே பாட்டில் (261-வரிகளில்) 112 தாவரங்களின் பெயர்களை பயன்படுத்தியதுடன் 35 தாவரங்களை அடைமொழியுடன் இருசொற் பெயரை பயன்படுத்தி உள்ளதால் (குறிப்பாக 33 வரிகளில் 102 பூக்கள்) இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பிய இலக்கணத்தின் அடிப்படையில் சங்க காலத்தில் பெயர்கள் அமைந்துள்ளதையும். 2 முதல் 5-ம் நூற்றாண்டுகளில் (2000-ஆண்டுகளுக்கு முன்பாக) மாநாடு கூட்டாமல், சட்டங்கள் வகுக்காமல் தமிழில் புறத்தோற்றப் பண்புகளை (Morphology character) வைத்து இரட்டைப் பெயரை பயன்படுத்தி உள்ளது தெரிய வந்ததையும். கபிலர் தனது குறிஞ்சிப் பாட்டில் பயன்படுத்திய 112 தாவரங்களில் 35 தாவரங்களுக்கு புறத்தோற்ற பண்புகளை அடைமொழியாக வைத்து இருசொற் பெயரை வழங்கி உலகிற்கு முன்னோடியாக இருந்ததையும் இந்த புத்தகம் உலகிற்கு உணர்த்துகிறது.





08.07.2012 அன்று நடைபெற்ற 15-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில்
திரு இரா. பஞ்சவர்ணம் எழுதிய கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் புத்தக வெளியீட்டு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிஅரசரும்இந்திய இரயில்வே கட்டண விகித தீர்ப்பாய தலைவருமான திரு அ. குலசேகரன் அவர்கள் வெளியிட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன அதிபர் மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு பி. சுரேந்திரமோகன் அவர்கள் பெற்றுக் கொண்டார். உடன் என்.எல்.சி மனிதவள இயக்குனர் ச.கு. ஆச்சார்யா பேராசிரியர் டாக்டர் K.A. குணசேகரன் மற்றும் மணிவாசகம் பதிப்பக உரிமையாளர்

சிறந்த நூல்





கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் மதிப்புரைகள்
    
அரிமாநோக்கு


குங்குமம்



தினமணி





No comments:

Post a Comment