செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

Thursday 11 April 2013

2. காந்தள் - Kaandhal


  

ங் இலக்கியத் தாவரங்கள்


  காந்தள்



காந்தள் சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகையில் அனைத்துப் நூல்களிலும் 64 இடங்களில் இடம் பெற்றுள்ளது. பத்துப்பாட்டில், மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு, நெடுநெல்வாடை நீங்களாக மற்ற 7 நூல்களிலும் 12 இடங்களிலும் இடம் பெற்றுள்ளது.
செங்காந்தள் அல்லது காந்தள் ஜிம்பாவ்வே நாட்டின் தேசிய மலராகும். தமிழ்நாட்டின் அரசு மலராகவும் இது ஏற்கப்பட்டுள்ளது.
கண்களைப் பறிக்கும் பிரகாசமான வண்ணங்களை இக்கொடியின் மலர்கள் பெற்றிருப்பதால் இத்தாவரத்தை கண்வலிப்பூ என அழைக்கின்றனர்.
மேலும் இக்கொடியின் வேர்ப் பாகம் கலப்பையைப் போன்றிருப்பதால் இதை கலப்பைக் கிழங்கு எனவும் அழைக்கின்றனர்..
இத்தாவரத்தின் கிழங்கினை கார்த்திகை மாதங்களில் 
   தோண்டி எடுப்பதால் இதனை கார்த்திகைக் கிழங்கு 
   எனவும் அழைப்பார்கள்.
இலக்கித்தில் காந்தளை அடையாளம் காட்ட  கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது :
வளை உடைந்தன்ன வள் இதழ்க் காந்தள்
தீயின் அன்ன ஒண் செங் காந்தள்
செழுங் குலைக் காந்தள் கை விரல் பூப்பவும்
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள்
கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள்
உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்

ங் இலக்கிய ஆசிரியர்கள்  காந்தள் தாவரத்தை அடைமொழியுடன் இருசொல் பெயரில் பதிவு செய்துள்ள பெயர்ள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
ஒண்செங் காந்தள்        கபிலர்
கமழ்பூங் காந்தள்         கபிலர்
நறவுகுலை காந்தள்      கபிலர்.
நாறுகுலைக் காந்தள்     கபிலர்
போது அவிழ் காந்தள்     மருதனார்.
அலங்குகுலைக் காந்தள்  தங்காற் பொற் கொல்லனார்
சினைஒண் காந்தள்        மதுரைக் கணக்காயனார்
சுடர்ப்பூங் காந்தள்          நக்கீரர்
முகைஅவிழ்ந்த காந்தள்   கம்பூர் கிழான்
வள்இதழ்க் காந்தள்         பெருங்கௌசிகனார்
தண்நறுங் காந்தள்          பரணர்
                            
ங்க இலக்கியங்களில் காந்தள் பெயர் உள்ள  பாடல் அடிகள்
பத்துப்பாட்டு
குறிஞ்சிப் பாட்டு
ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம் - 62
விண் பொரும் சென்னிக் கிளைஇய காந்தள் - 196
பட்டினப்பாலை
காந்தள் அம் துடுப்பின் கவிகுலை அன்ன - 153
மலைபடுகடாம்
தீயின் அன்ன ஒண் செங் காந்தள் - 145
காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஒச்சி - 336
வளை உடைந்தன்ன வள் இதழ்க் காந்தள் – 519
பெரும்பாணாற்றுப்படை
நாடு பல கழிந்த பின்றை நீடுகுலைக்
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்குப் - 371,371
திருமுருகாற்றுப்படை
சுரும்பும் மூசாச் சுடர்பூங் காந்தட் – 143
சிறுபாணாற்றுப்படை
செழுங் குலைக் காந்தள் கை விரல் பூப்பவும் – 167
பொருநராற்றுப்படை
நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல் - 33
கொழுங் காந்தள் மலர் நாகத்து - 209

எட்டுத்தொகை
அகநானூறு
நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தள் -4-15
பழம் தூங்கு நளிப்பின் காந்தள்அம் பொதும்பில் -18-15
முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள் -78-8
ஒண் செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண் -92-9
வேங்கை விரிஇணர் ஊதி காந்தள் -132:11
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள்        - 108:15
திருமணி உமிழ்ந்த நாகம் காந்தட் -138-17
கடவுட் காந்தளுள்ளும், பலஉடன் -152-17
போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள் -238-17
காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது -312-5
சினையொண் காந்தள் நாறும் நறு நுதல்- 338:7
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலைக் - 368:8
ஐங்குறுநூறு
நறுந்தண் சிலம்பின் நாறுகுலைக் காந்தள் - 226:2
நறும்புகை சூழ்ந்து காந்தள் நாறும் -25:2
மலர்ந்த காந்தள் நாறிக் -259:5
சிலம்பு கமழ் காந்தள் நறுங்குலை அன்ன - 293:1
கலித்தொகை
காந்தள் கடி கமழும், கண் வாங்கு, இருஞ் சிலம்பின் -39(3):15
எடுத்த நறவின் குலை அலங்காந்தள்  - 40(4):11
தகையவர் கைச் செறித்த தாள்போல் காந்தள்  - 43(7):8
கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை- 45(9):2
உயர் முகை நறுங் காந்தள் நாள்தோறும் புதிது ஈன - 53(17):5
அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர்  - 59(23):3
குறுந்தொகை
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே  - 1.-4
காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச் - 76-1
வேங்கையும் காந்தளும் நாறி - 84-4
காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தெனக் - 100-3
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் - 167:1
கொண்டலின் தொலைந்த ஒண் செங் காந்தள் - 185:6
சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள் - 239:3
அருவி ஆர்ந்த தண் நறுங் காந்தள்  -  259:2
காந்தள்அம்  கொழு முகை, காவல்செல்லாது - 265:1
ஒண் செங் காந்தள் அவிழும் நாடன்    - 284:3
காலை வந்த முழுமுதற் காந்தள் - 361:4
காந்தள் அம் சிறுகுடிக் கமழும் - 373:7
நற்றிணை
மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல் - 14:7
காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி - 17:10
நின்ற வேனில் உலந்த காந்தள் - 29:1
பறியாக் குவளை மலரொடு காந்தள் 34-2
காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும் - 85:10
காந்தள் வள் இதழ் கவிகுளம்பு அறுப்ப - 161-7
மலைச் செங் காந்தட் கண்ணி தந்தும் - 173:2
போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள் - 176:6
அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து - 185:8
மெல் விரல் மோசை போல, காந்தள் - 188 -4
செம் புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள் - 294:7
யாங்கு ஆகுவம்கொல்?-தோழி!-காந்தள்
   கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல் - 313:6,7
முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட்
   குலைவாய் தோயும் கொழு மடல் வாழை - 355:2,3
அலங்கு குலைக் காந்தள் தீண்டி, தாது உக - 359:2
காந்தள்அம் கொழு முகை போன்றன சிவந்தே - 379:13
குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தன்  - 399:2
பதிற்றுப்பத்து
சிவந்த காந்தள் முதல்சிதை மூதில் - 15:11
அலங்கிய காந்தள் இலங்குநீரழுவத்து - 21:36
காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர் - 30:9
மலர்ந்த காந்தள் மாறாதூதிய - 67:19
காந்தளங்கண்ணிச் செழுங்குடிச் செல்வர் - 81:22
பரிபாடல்
மன்றல மலர மலர் காந்தள் வாய் நாற - 8:26
சினை வளர் வேங்கை கணவிரி காந்தள் - 11:20
நீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள் - 14:13
போர் தோற்றுக் கட்டுண்டார் கை போல்வ--கார் தோற்றும்
    காந்தள் செறிந்த -18:34-35
கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள் - 19:76
புறநானுறு
உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள் - 90:1
யாம்தன் தொழுதனம் வினவக் காந்தள் - 144:8
கறிவளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் - 168:2

     எனக்கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட காந்தள் Gloriosa superba என்னும் தாவரவியல் பெயரைக் கொண்டதாக மிகச் சரியாகக் கண்டறியப் பட்டுள்ளது.

Gloriosa superba தாவர விளக்கம்

ஆங்கிலத்தில்
தமிழில்
Classification
Name
வகைபாடு
தாவரத் தகவல் மையப் பெயர்
Kingdom
PLANTAE
உலகம்
தாவரம்
Phyllum
ANGIOSPERM
இனம்
பூக்கும் தாவரம்
Order
LILIALES
தலைக் கட்டு
ஈரடுக்கு இதழ்வட்ட மூன்றங்க கீழ்ச்சூலக மலர்த் தாவரம்
Family
COLCHICACEAE DC. Old Family - LILIACEAE
குடி
காந்தள் குடி
Genus
Gloriosa Linn.
Old Genus - Clinostylis, Eugone, Methonica
பிறவி
காந்தள்
Species epithet
superba L.
பெயர் வழி
ஒண்செங்
Botanical Name
Gloriosa superba L.
தாவரவியல் பெயர்
ஒண்செங் காந்தள். கபிலர்
Synonym
Clinostylis speciosa Hochst.
Eugone superb (L.)Salisb.
Methonica gloriosa Salisb
வேறு பெயர்கள்
Habit
Climber
வளரியல்பு
கொடி


செடிகளின் பண்புகள்
வளரியல்பு : ஏறுகொடி, 4 முதல் 6 மீட்டர் உயரம் வரை படர்ந்து வளர்க்கூடியவை.
வேர் : தண்டுகள் மருந்தாகச் சேகக்கப்படுகின்றன. வேர்த்தண்டுக் கிழங்கு உருளைவடிவத்தில் இருக்கம், இரு கவையாக கலப்பை வடிவத்திலும், வழக்கமாக அகண்டய-வடிவத்தில் உறுப்பின் இரண்டு முனைகளும் சமமாக அல்லது சமமற்ற நீளத்தில், முடிவில் கூரிய முனையுடன் 12 அங்குல நீளத்தில் 1.5 அங்குலம் குறுக்களவுடையவை.
இலைகள் : மாற்றடுக்கமானவை, எதிர் அல்லது வட்ட அடுக்கமானவை, நீண்டு உருண்ட ஈட்டி போன்ற வடிவானவை, கிட்டத்தட்ட 5-12.5*1-3.5 செ.மீ. பரப்பளவுடையது. தட்டையானவை, நுனியில் பற்றுக்கம்பியுடையவை.
மஞ்சரி : ஒன்றுக்கும் மேற்பட்ட சமமட்ட மஞ்சரிகள் கிளைகளின் நுனியில் அமைந்தவை.
மலர்கள் : மலர்களின் குறுக்களவு சுமார் 8-10 செ.மீ. இலைக்கோணமானவை, மலரிதழ்களின் மடல்கள் 6 வரை இருக்கும், நீண்டு உருண்ட ஈட்டி வடிவம் போன்றது, சுமார் 6*1 செ.மீ. நீளமானது, (மொட்டு 2 செ.மீ. நீளமானவை.) பின்னோக்கி வளைந்தவை, சமமானவை, அதன் விளிம்பு சுருள் போன்று அலை அலையானவை.
மகரந்தங்கள் : ஆறு, மகரந்தப்பைகள் மையத்தில் அமைந்தவை.
சூல்பை : மூன்று அறைகள் கொண்டது.
விதைகனி : மேற்புறத்தில் ஒருவாறு அழுந்தப்பட்டவை. கரணைகள் உள்ளவை. வெடிவுலர்கனி நீள்வட்டம் நீண்டு உருண்ட வடிவானவை. சற்றேறக்குறைய 3-5.5*1-2.5 செ.மீ. நீளமானது. புடைப்புகள் உள்ளவை.
விதைகள் : விதைகள் கணக்கற்றவை, கோளவடிவானவை, 4 மி.மீ. நீளமானது.
பூக்கும் பருவம் : மலர்கள் அக்டோபர் மாதம் பூக்கம்.
காய்க்கும் பருவம் : கனிகள் ஆண்டு முழுவதும் காய்த்துக் கொண்டிருக்கும்.
வாழ்விடம் : கீழ்மட்ட காடுகள், கடற்கரைகள், மற்றும் மலைகளில் 500-1000 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளிலும், சமவெளிகள் புதர்களிலும் வளர்பவை.
பரவியிருக்குமிடம் : இந்தியா, வெப்பமண்டலப் பகுதி மற்றும் தென் ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், கிழக்கு ஆசியா, மலேசியா போன்ற இடங்களில் காணப்படும்.
தாவரத்தின் பண்புகள்
வளரியல்பு : ஏறுகொடி, 4 முதல் 6 மீட்டர் உயரம் 
வரை படர்ந்து வளர்க்கூடியவை.

வேர் : தண்டுகள் மருந்தாகச் சேகக்கப்படுகின்றன.
வேர்த்தண்டுக் கிழங்கு    உருளைவடிவத்தில் இருக்கம்,
இரு கவையாக கலப்பை வடிவத்திலும்,
வழக்கமாக அகண்டய-வடிவத்தில் உறுப்பின்
இரண்டு முனைகளும் சமமாக அல்லது சமமற்ற நீளத்தில்,
முடிவில் கூரிய முனையுடன் 12 அங்குல 
நீளத்தில் 1.5 அங்குலம் குறுக்களவுடையவை.

இலைகள் : மாற்றடுக்கமானவை, எதிர் அல்லது
 வட்ட அடுக்கமானவை,
நீண்டு உருண்ட ஈட்டி போன்ற வடிவானவை
கிட்டத்தட்ட 5-12.5*1-3.5 செ.மீ.
பரப்பளவுடையது. தட்டையானவை
நுனியில் பற்றுக்கம்பியுடையவை.

மஞ்சரி : ஒன்றுக்கும் மேற்பட்ட சமமட்ட 
மஞ்சரிகள் கிளைகளின் நுனியில் அமைந்தவை.

மலர்கள் : மலர்களின் குறுக்களவு 
சுமார் 8-10 செ.மீ. இலைக்கோணமானவை,
மலரிதழ்களின் மடல்கள் 6 வரை இருக்கும்
நீண்டு உருண்ட ஈட்டி வடிவம் போன்றது,
சுமார் 6*1 செ.மீ. நீளமானது, (மொட்டு 2 செ.மீ. நீளமானவை.)
பின்னோக்கி வளைந்தவை, சமமானவை, அதன் விளிம்பு
சுருள் போன்று அலை அலையானவை.

மகரந்தங்கள் : ஆறு, மகரந்தப்பைகள் 
மையத்தில் அமைந்தவை.

சூல்பை : மூன்று அறைகள் கொண்டது.

விதைகனி : மேற்புறத்தில் ஒருவாறு அழுந்தப்பட்டவை.
கரணைகள் உள்ளவை. வெடிவுலர்கனி நீள்வட்டம் நீண்டு
உருண்ட வடிவானவை. சற்றேறக்குறைய 3-5.5*1-2.5 
செ.மீ. நீளமானது. புடைப்புகள் உள்ளவை.

விதைகள் : விதைகள் கணக்கற்றவை, கோளவடிவானவை
4 மி.மீ. நீளமானது.

பூக்கும் பருவம் : மலர்கள் அக்டோபர் மாதம் பூக்கம்.

காய்க்கும் பருவம் : கனிகள் ஆண்டு முழுவதும் 
காய்த்துக் கொண்டிருக்கும்.

வாழ்விடம் : கீழ்மட்ட காடுகள், கடற்கரைகள், மற்றும்
மலைகளில் 500-1000 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளிலும்,
சமவெளிகள் புதர்களிலும் வளர்பவை.

பரவியிருக்குமிடம் : இந்தியா, வெப்பமண்டலப் பகுதி மற்றும்
தென் ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், கிழக்கு ஆசியா, மலேசியா
போன்ற இடங்களில் காணப்படும். 

காந்தளை பற்றிய சங்க இலக்கிய புலவர்கள்
      கமழ் குலைக் காந்தள், காந்தள் வாய் நாற, கமழ் பூங் காந்தன், காந்தள் கமழ் குலை அவிழ்ந்த, காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி, காந்தள் அம் சிறுகுடிக் கமழும், தண் நறுங் காந்தள், கமழும் அலங்கு குலைக் காந்தள், அடுக்கம் நாறு அலர் காந்தள், நறவின் குலை அலங்காந்தள், கமழ் காந்தள் நறுங்குலை, காந்தள் நாறும், காந்தள் நாறும் நறு நுதல், சுரும்பும் மூசாச் சுடர்பூங் காந்தட்,காந்தள் துடுப்பின் கமழ் மடல் என காந்தள் பற்றிய இலக்கிய வரிகளில் காந்தள் வாசனை உள்ளது எனவும், வண்டு தும்பி மொய்க்கும் எனப் பொருள்படக் கூறப்பட்டுள்ளனர்.
    
     ஆனால் நாம் அடையாளம் காட்டும் Gloriosa superba புறத்தோற்ற பண்புகளின்படி மிக சரியாக உள்ளது ஆனால் வாசனை அற்றதாகும். ஆகையால் வாசனை உடைய Gloriosa உள்ளதா என பார்க்கும் இடத்து இந்தியாவில் ஒரு Gloriosa மட்டுமே உள்ளது என தெரியவருகின்றது. தமிழகத்தில் வாசனையே இல்லாத மலரை காக்கட்டான் மல்லிகை (Jasminum cuspidatum) என்று கூறப்படுவது போல் காந்தளை நறுங்காந்தள் என கூறியிருக்கலாம். ஒருவேளை வாசனை மலர்களைக் கொண்ட காந்தள் இருந்து அழிந்திருக்கலாம். அல்லது காந்தள் மலர் போன்ற புறத்தோற்றத்தையுடைய வேறு வாசனை மலர் இருந்திருக்கலாம்.
     மேலும் காந்தள் மஞ்சரியை வண்டுகளும், தேனீக்களும் மொய்க்கும் என்பது சங்க புலவர்களின் கூற்று மிகைக் கூற்றாக இருக்கக்கூடம். அதே சமயத்தில், சிறு எறும்புகளும், ஈக்களும் இம்மஞ்சரிகளிலுள்ள சுரப்பிகளின் சாற்றை விரும்பி உண்பதைக் காணலாம். இதைப் பற்றி மேலும் ஆராய்ந்து கருத்துக்களைப் பறிமாற ஆராய்ச்சியாளர்களும், தமிழ் அறிஞர்களும் முன்வர வேண்டும்.

மேனால் தலைவர், பண்ருட்டி நகராட்சி,
நிறுவனர், 
முனைவர் திரு. . இரவிக்குமார் Ph.D.,
துணை இயக்குநர் FRLHT, பெங்ளூரு.





No comments:

Post a Comment