சங்க இலக்கியத் தாவரங்கள்
8.அடும்பு
கடற்கரையை ஒட்டிய வறண்ட பகுதிகளில் நிலம் படற்ந்து மண்டிக் கிடக்கும் ஒரு தாவரம்,
மலர்கள் மணி போன்ற வடிவத்தில், பல வண்ணங்களில் காணப்படும். அதன் இலைகளை சங்க இலக்கியங்களில் குறிப்பிடும்போது
‘மானடியன்ன கவட்டிலை அடும்பு’ எனவும்,
சித்தர் இலக்கியங்களில்-
‘ஆட்டுக்கால் அடும்பு’ எனவும்,
விலங்கினங்களின் குளம்பு வடிவில் இலைகள் இருப்பதைக் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக மானின் குளம்பும், ஆட்டுக் காலின் குளம்பும் பொருத்திக் கவட்டிலை அடும்பு எனகுறிக்கப்படுவது மிகவும் பொருத்தமானதாகும்.
சங்க இலக்கியங்களில் தாவரங்களை சரியாக அடையாளம் காணும் விதத்தில் பார்த்தவுடன் தெரிந்துக்கொள்ளும் வகையில் புறத்தோற்றத்தின் பண்புகளைக் குறிப்பிடும் வழக்கம் இருந்துள்ளது. இதுதான் பிற்காலத்தில் ஆங்கில தாவரயில் பெயர் சூட்டுவதற்கு அடிப்படையாக இருந்துள்ளது என நாம் பெருமையுடன் உலகிற்கு எடுத்துக் கூறலாம்.
இந்த அடும்பு தாவரத்தைக் குறிப்பிடப் பயன்படுத்திய இருசொற் பெயரை ‘மான் அடி அன்ன கவட்டிலை அடும்பின்’, ‘ஆட்டுக்கால் அடும்பு’ என்பது தான் தாவரவியல் பெயராக எடுத்துக் கொண்டு,
Ipomoea pes-caprae – என வழங்கப்பட்டுள்ளது.
இதில் pes-caprae- என்பது விலங்கினங்களின் குளம்பு என பொருட்படக்
கூறப்பட்டுள்ளது, இது பொதுவாக விளங்கினங்களின் குளம்பு என பொருள் கொள்ள
வேண்டியுள்ளது. ஆனால் குறிப்பாகக் குளம்பின் அளவை இலையின் அளவாகக் கருத்தில்
கொள்ளும் போது மானின் குளம்பும், ஆட்டின் குளம்பும் மிகவும் பொருந்துவதால் தொல்காப்பியர்
கூற்றான
“இயற்கைப் பொருளை இற்று எனக் கிளத்தல்”. – 19 கிளவியாக்கம்.
என்ற பாடல் வரிக்கு ஏற்ப அமைந்துள்ள சங்கால இலக்கியப் பெயர்தான், நூறு சதவீதம் பொருந்துவதாக உள்ளது.
அடும்பின் அடைமொழி சங்கால புலவர்களின் கூறிய பார்வைக்கு சரியான எடுத்துக்காட்டுதலுக்கு - எடுத்து காட்டாகவும், தாவர இருசொற் பெயரீட்டு (Binomial Namenclature) முறைக்கு உலகிற்கு முன்னோடியாக உள்ளது, என்பது கருத்தில் கொள்ள வோண்டிய ஒனறாகும்
“இயற்கைப் பொருளை இற்று எனக் கிளத்தல்”. – 19 கிளவியாக்கம்.
என்ற பாடல் வரிக்கு ஏற்ப அமைந்துள்ள சங்கால இலக்கியப் பெயர்தான், நூறு சதவீதம் பொருந்துவதாக உள்ளது.
அடும்பின் அடைமொழி சங்கால புலவர்களின் கூறிய பார்வைக்கு சரியான எடுத்துக்காட்டுதலுக்கு - எடுத்து காட்டாகவும், தாவர இருசொற் பெயரீட்டு (Binomial Namenclature) முறைக்கு உலகிற்கு முன்னோடியாக உள்ளது, என்பது கருத்தில் கொள்ள வோண்டிய ஒனறாகும்
சங்க இலக்கியம்
எட்டுத்தொகை
அகநானூறு
- Ø ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின் – 80:8
- Ø அடும்புகொடி சிதைய வாங்கி, கொடுங்கழிக் – 160:3
- Ø அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும் – 320:9
- ஆய் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு – 330:14
கலித்தொகை
- Ø கரை அமல் அடும்பு அளித்தாஅங்கு – 127. (10):20
- Ø அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ, 'மணந்தக்கால் – 132. (15):16
- Ø ஆய் பூ அடும்பின் அலர்கொண்டு உதுக் காண், எ–144. (27):30
குறுந்தொகை
- Ø மான் அடி அன்ன கவட்டிலை அடும்பின் – 243-1
- Ø அடும்பு இவர் மணற் கோடு ஊர நெடும் பனை – 248:5
- Ø 'அடும்பு அவிழ் மணி மலர் சிதைஇ மீன் அருந்தும் – 349:1
- Ø அடும்பின் ஆய் மலர் விரைஇ, நெய்தல் – 401-1
நற்றிணை
- Ø மாக் கொடி அடும்பின் மா இதழ் அலரி – 145-2
- Ø குன்று ஓங்குவெண் மணற் கொடி அடும்பு கொய்தும், – 254:2
- Ø பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை – 272:3
- Ø அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து, அவர் – 338:2
- Ø கொடுங் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும் – 349:2
பதிற்றுப்பத்து
- Ø தாழ்அடும்பு மலைந்த புணா வளை ஞரல – 30:6
- Ø அடும்பமல் அடைகரை அலவனாடிய – 51:7
ஐங்குறுநூறு
- Ø ஏர் கொடிப் பாசடும்பு பரியவூர்பு இழிபு – 101:2
பத்துப்பாட்டு
குறிஞ்சிப் பாட்டு
- Ø அடும்பு, அமர்ஆத்தி, நெடுங்கொடி அவரை - 87
பட்டினப்பாலை
- Ø வறள் அடும்பின் மலர் மலைந்தும் – 65
பொருநராற்றுப்படை
- Ø வறள் அடும்பின் இவர் பகன்றைத் – 195
இலக்கியங்களின் தாவரயியல் அடைமொழி பெயர்
- வறள் அடும்பு உருத்திரங்கண்ணனார்
- கரைஅமல் அடும்பு நல்லந்துவனார்
- கவட்டிலை அடும்பு பெருங்கண்ணனார்
- பொம்மல் அடும்பு நல்வெள்ளையார்
- கவட்டிலை அடும்பு நம்பி குட்டுவனார்
- ஆய் மலர் அடும்பு அம்மூவனார்.
- மாக்கொடி அடும்பு நம்பி குட்டுவன்
- மணற் கொடி அடும்பு உலோச்சனார்
- ஆய் பூ அடும்பு நல்லந்துவனார்
- வறள் அடும்பு முடத்தாமக் கண்ணியார்
- அடைகரைதாழ் அடும்பு பாலைக் கெளதமனார்.
தாவர வகைப்பாட்டியல்
Classification
|
Name
|
வகைபாடு
|
PIC Name
|
Kingdom
|
PLANTAE
|
உலகம்
|
தாவரம்
|
Phyllum
|
ANGIOSPERM
|
இனம்
|
பூக்கும் தாவரம்
|
Division
|
DICOTYLEDONAE
|
தலைமுறை
|
இரு வித்திலை
|
Class
|
GAMOPETALAE
|
வகுப்பு
|
இணை இதழ் தாவரம்
|
Sub Class
|
BICARPELLATAE
|
குலம்
|
இருசூலக இலைகள்
|
Order
|
POLEMONIALES
|
தலைக்கட்டு
|
|
Family
|
CONVOLVULACEAE Willis.
|
குடி
|
கூதளங் குடி
|
Genus
|
Ipomoea Linn. Old
Genus - Convolvulus
|
பிறவி
|
|
Species
|
pes-caprae (L.) R.Br.
|
பெயர்வழி
|
அடும்பு
|
Botanical Name
|
Ipomoea pes-caprae (L.)
R.Br.
|
தாவரவியல் பெயர்
|
அடும்புக் கூதளம்
|
Synonym
|
Convolvulus
pes-caprae
Ipomoea biloba
Forsk,
Ipomoea
maritima R.Br.
|
வேறு பெயர்கள்
|
|
Habit
|
Herb
|
வளரியல்பு
|
சிறு செடி
|
அடும்பு
Ipomoea pes-caprae
தாவர விளக்கம்
கொடிகளின் பண்புகள்
வளரியல்பு : நிலம்படிந்து வளரக்கூடியவை.
இலைகள் : 2-மடல்களானவை, ஏறக்குறைய 2-3 * 5-6 செமீ பரப்பளவுடையது, இணைநரம்புகள் உள்ளவை.
மஞ்சரி : மலர்க்கொத்து (Panicle), தண்டு சுமார் 6 செமீ. நீளமானவை
மலர்கள் : 1 தெளிவானவை, புல்லி-மடல்கள் சமமானவை. அல்லிகள் இளஞ்சிவப்பு நிறமுடையது, குறுக்களவு சுமார் 5 செ.மீ. நீளம், புனல் போன்ற வடிவானவை.
மகரந்தம் : மகரந்தத்தாள்கள் கீழ் நீள் உரோமங்கள் காணப்படும்.
கனி : வெடிவுலர்க்கனி (Capsule) குறுக்களவு சுமார் 1.5 செ.மீ. நீளமானது.
விதை : பெரிதானவை, அடர்ந்த பழுப்பு, கம்பளம் போன்ற மென்-உரோமங்கள் உடையவை.
பூக்கும் பருவம் : நவம்பர் முதல் பிப்ரவரி வரை பூக்கும்.
காய்க்கும் பருவம் : கனிகள் ஜனவரியில் காய்க்கும்.
வாழ்விடம் : சமவெளிகள், கடற்கரையோரங்கள் போன்ற இடங்களில் வளரக்கூடியவை. கடற்கரைகளின் பிரதான தாவரங்களில் ஒன்றாகக் கருதலாம். பாலக்காட்டிலும் ஓரளவு காணப்படும்.
பரவியிருக்குமிடம் : வெப்பமண்ட நாடுகளில் காண்படும்.
மேனாள் தலைவர், பண்ருட்டி நகராட்சி,
நிறுவனர், தாவரத் தகவல் மையம், பண்ருட்டி.
வாழ்த்துகள் ஐயா!
ReplyDeleteதங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும்.