தமிழிலக்கியங்களும் தாவரப் பெயரீட்டு முறையும்
பெயரிடுதலின் தேவை
இனம்காணப்பட்டதும்-காணப்படாததுமாக எண்ணற்ற தாவரங்கள் உலகெங்கும் பரவிக்கிடக்கின்றன. அவ்வகைத் தாவரங்களைத் தொகுத்தறிதலும், இனங்காணப்படாத தாவரங்களை இனங்காணுதலும், இனங்கண்ட தாவரங்களுக்கு அறிவியற் பெயரிடுதலும் நுட்பமான இன்றியமையாத ஆய்வுப்பணியாகும். ஒருதாவரத்தை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்தி அறிய ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட தாவரங்கள் இருத்தல் கூடாது; இருந்தால் குழப்பமேமிஞ்சும். எனவே, தாவரவியல் பற்றிய ஆய்வில் வகைதொகைப் படுத்திப் பெயரிடல் (Taxonomic naming) என்பது ஓர் இன்றியமையா இடத்தைப் பெறுகிறது எனலாம்.
சங்க இலக்கியங்களில் பெயரிடுதல்
தாவரத்தின்இயல்பு/பண்பு/தன்மை/குணம்அடிப்படையில் ‘இருசொற்பெயரீடு’ தமிழில் அமைந்தது தெரியவருகின்றது சங்ககாலங்களில். இந்த அடிப்படையே அல்லாமல் மருத்துவப்பயன்பாடு, மறைபொருள். புறத்தோற்றம்-போன்றவற்றின் அடிப்படையிலும் தமிழில் தாவரங்கள் இருசொற்பெயரீட்டைப் பெறுகின்றன. இதுகாறும் கண்டவற்றால், தாவரங்களின் இருசொற்பெயரீட்டுமுறை சங்ககாலத்திலேயே இருந்தது என்பதைத் தெளிவாக அறிகிறோம். சென்ற நூற்றாண்டில்தான் உலகெங்கும் இருசொற்பெயரீட்டுமுறை தரப்படுத்தப்பட்டு நிலைபெற்றது, தமிழிலோ இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே இருந்ததென்பது, நம்முன்னோர்களின்/புலவர்களின் அறிவாற்றலையும், அறிவியலாற்றலையும், இயற்கையில் அவர்களுகிருந்த நாட்டத்தையும் காட்டுவதாக அமைந்து நம் மைவியப்பில் ஆழ்த்துகின்றது. தாவரவியல் அறிஞர்களின் மாநாட்டினை நடத்தாமல், பெயரீட்டுவிதித் தொகுதிகளை வடிவமைக்காமல் இருசொற்பெயரீட்டு முறையைப் பண்டைத் தமிழர்கள்/புலவர்கள் கையாண்டுள்ளனர் என்பது வியத்தற்குரிய ஓர் அரிய செய்தியாகும்; புலவர்கள் தாவரங்களின் புறத்தோற்றப்பண்புகளின் (morphology characters) அடிப்படையில், இத்தகைய இருசொற்பெயரீட்டு முறையைக் கையாண்டுள்ளனர்.
இருசொற்பெயரீட்டுமுறை உலகளவில் ஆங்கிலத்தில் இருபதாம் நூற்றாண்டிலேயே முழு அளவில் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், சற்றேறக்குறைய 2000 ஆண்டுகட்கு முன்பே சங்க இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது. குறிப்பாக கபிலர் இந்தமுறையைக்கையாண்டு தாவரங்களுக்குப் பெயர்சூட்டியுள்ளார் என்பது நம்பமுடியாத உண்மையாகும்.
உலகதாவர இருசொற் பெயரீட்டுமுறை Binomial Namenclature
தாவரங்களை அறிவியலின் அடிப்படையில் பெயரிடும்முறை தாவர பெயரீட்டுமுறை எனப்படும். தாவரங்களின் இனம் அடையாளம் காணக்கூடிய பண்பு மற்றும் அவற்றிற்கிடையேயுள்ள வேறுபாடு பற்றி அறிய தாவர பெயரிடுமுறை அவசியமாகிறது, பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தாவரங்களை இனம்காண பலசொற்கள் உள்ளடக்கிய பெயரால் இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளால் அழைக்கப்பட்டன இதற்குப் பலசொற் பெயரீட்டுமுறை (Polynomial) என்று பெயர். அதாவது இப்பெயர்கள், கிட்டத்தட்ட தாவரத்தின் இருப்பிடம், வளரிடம் மற்றும் முக்கிய பண்புகளையும் விளக்கும் வகையில் பல வார்த்தைகளைக் கொண்டிருந்தன.
எடுத்துக்காட்டாக;
1. ‘கேரியோஃபில்லம்’ என்ற தாவரம் கேரியோஃபில்லம் சாக்சாடிலிஸ் ஃபோலிஸ் கிராமினியஸ் அம்பெல்லேட்டிஸ் கோரிம்பிஸ்
எடுத்துக்காட்டாக;
1. ‘கேரியோஃபில்லம்’ என்ற தாவரம் கேரியோஃபில்லம் சாக்சாடிலிஸ் ஃபோலிஸ் கிராமினியஸ் அம்பெல்லேட்டிஸ் கோரிம்பிஸ்
(Caryophyllum saxatilis folis gramineus umbellatis corymbis) என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அதாவது,
கேரியோஃபில்லம் ‘மலையின் மீது வளரும்’ சாக்சாடிலிஸ் ஃபோலிஸ் ‘புற்களைப் போன்ற இலைகளையுடைய’ அம்பேல்லேட் கோரிம்போஸ் ‘மஞ்சரியுடைய தாவரம்’ என்னும் பொருள்பட பெயரிடப்பட்டது.
2. சைடாகார்டி ஃபோலியா (Sidacordi foliaL.) (துத்தி) என்னும் தாவரம் ‘அல்தேயா மதராஸ்பட்டணா, சப்ரொட்டன்டோ ஃபோலியோ, மொல்லி&கிர்சூட்டோ, மல்ட்டிபிளிஸ்’ (“Althaea maderaspattana, subrotunda folio, molli&hirsuto, mulitipilis”) என்று புளூக்நெட் by Plukenet (1692) என்பவரால் பெயர் சூட்டப்பட்டது. அதாவது “அல்தேயா-அல்தேயா என்னும் தாவரம் மதராஸ்பட்டணா - சென்னை மாகாணத்தில் எடுக்கப்பட்டு, சப்ரொட்டன்டோ ஃபோலியோ - இலைகள் குறைவட்ட உருவடிவினில், மொல்லி&கிர்சூட்டோ - மென்சுனை மற்றும் வன்சுனை, மல்டிபிளிஸ் - அடர்ந்த’ (அடர்ந்த வன்சுனை மற்றும் மென்சுனை கொண்டது)” என்கிற பொருளையும் கண்டறியப்பட்ட இடத்தையும் உள்ளடக்கி பெயர்சூட்டப்பட்டது.
2. சைடாகார்டி ஃபோலியா (Sidacordi foliaL.) (துத்தி) என்னும் தாவரம் ‘அல்தேயா மதராஸ்பட்டணா, சப்ரொட்டன்டோ ஃபோலியோ, மொல்லி&கிர்சூட்டோ, மல்ட்டிபிளிஸ்’ (“Althaea maderaspattana, subrotunda folio, molli&hirsuto, mulitipilis”) என்று புளூக்நெட் by Plukenet (1692) என்பவரால் பெயர் சூட்டப்பட்டது. அதாவது “அல்தேயா-அல்தேயா என்னும் தாவரம் மதராஸ்பட்டணா - சென்னை மாகாணத்தில் எடுக்கப்பட்டு, சப்ரொட்டன்டோ ஃபோலியோ - இலைகள் குறைவட்ட உருவடிவினில், மொல்லி&கிர்சூட்டோ - மென்சுனை மற்றும் வன்சுனை, மல்டிபிளிஸ் - அடர்ந்த’ (அடர்ந்த வன்சுனை மற்றும் மென்சுனை கொண்டது)” என்கிற பொருளையும் கண்டறியப்பட்ட இடத்தையும் உள்ளடக்கி பெயர்சூட்டப்பட்டது.
நீளமான பெயர்களை நினைவில் வைத்துக் கொள்வதிலும் பட்டியல் இடுவதிலும், பயன்படுத்துவதிலும் நடைமுறை சிரமங்கள் உள்ளதால், தாவரங்களின் பெயரினை சுருக்கமாக பெயரிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதன்முதலில் இருசொற் பெயரிட்டு முறையினை 1623 - ம் ஆண்டு காஸ்பர்டு பாஹின் (Gaspard Bauhin) என்ற அறிஞர் அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு சுவீடன் தேசத்து அறிஞரான கரோலஸ் லின்னேயஸ் (Carolus Linnaeus) இருசொற் பெயர்களை பயன்படுத்தி (Binomial system) முதன் முறையாக பெயர் சூட்டினார். லின்னேயஸ் 1753-ல் எழுதிய தனது நூலான ஸ்பீஸிஸ் பிளாண்டாரத்தில் (Species Plantarum) இருசொற் பெயரீட்டுமுறையை சரியான முறையில் கையாண்டுள்ளார். சூட்டப்படும் இரண்டு சொற்களும் ஒன்று சேர்ந்து தாவரத்தின் முழுப்பெயராக அமையும். இவ்வாறு சூட்டப்படும் இருசொற் பெயரீட்டுமுறை இரண்டு சொற்களைக் கொண்டது. அதனால் லின்னேயஸ் காலத்திற்குப் பிறகு, இரண்டு வெவ்வேறு தாவரங்கள், ஒரே பிறவி (genus) பெயரையும் ஒரே பிறவியில் இரண்டு பெயர்வழி (species) பெயரையும் பெற்றிருப்பதில்லை.
அகில உலகத் தாவரவியல் பெயரீட்டுச் சட்டம்
லின்னேயஸ் நடைமுறைக்கு பிறகு
1867-ல் பாரீஸ்கோடு,
1872ல்- ரோச்சஸ்டர்கோடு,
1906-ல்வியன்னாகோடு,
லின்னேயஸ் நடைமுறைக்கு பிறகு
1867-ல் பாரீஸ்கோடு,
1872ல்- ரோச்சஸ்டர்கோடு,
1906-ல்வியன்னாகோடு,
1907-ல்அமெரிக்கன்கோடு,
1912-ல்பிரேசில்ஸ்கோடு,
1935-ம்ஆண்டில்
ஐந்தாவது அகில உலகத் தாவரவியல் கூட்டம் இங்கிலாந்து நாட்டில் கேம்ப்ரிட்ஜ் என்னுமிடத்தில், தாவரங்களின் பெயரிட்டு முறையின் அடிப்படை விதிமுறைகளை விவாதிக்கக்கூடியது. இந்தமுறை கேம்ப்ரிட்ஜ் கோடு எனப்பட்டது.
1947-ல்ஆம்ஸ்டர்டாம்கோடு,
1952-ல்ஸ்டாக்கோலம்கோடு,
1956-ல்பாரிஸ்கோடு,
1961-ல்மோன்ரியல்கோடு,
1966-ல்எடின்பரோகோடு,
1972-ல்சியேட்டில்கோடு, அதன் பிறகு 12-வது அகில உலக தாவரவியல் கூட்டம் ஜூலை
1975-ல் சோவியத் ரஷியாவிலுள்ள லெனின் கிராட் என்னுமிடத்தில் கூடியது. அங்கு எடுக்கப்பட்ட முடிவு லெனின் கிராட்கோடு எனப்பட்டது. இக்கூட்டத்தில் விவாதிக்கப் பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தற்போதைய அகில உலகத் தாவரவியல் பெயர் சூட்டுச் சட்டம் (International Code of Botanical Nomenclature - ICBN) 1978-முதல் நடைமுறைக்கு வந்தது.
இதன் பிறகு
1981 - சிட்னிகோடு,
1987 - பெர்லின்கோடு,
1993 - டோக்கியோகோடு,
1999 - செயின்ட்லூயஸ்கோடு,
2005 - வியன்னாகோடு,
2011 - இறுதியானஆஸ்திரேலிய,
மெல்பெர்ன் கோட்டின்படி புதுத்தாவரத்தின் ‘முக்கிய வேறுபாடுகள்’ அடங்கிய பண்புகள், ஆங்கிலத்தில் இருந்தாலே போதுமானதென முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெயரீட்டு முறையை ஓழுங்கு படுத்துவது இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
1912-ல்பிரேசில்ஸ்கோடு,
1935-ம்ஆண்டில்
ஐந்தாவது அகில உலகத் தாவரவியல் கூட்டம் இங்கிலாந்து நாட்டில் கேம்ப்ரிட்ஜ் என்னுமிடத்தில், தாவரங்களின் பெயரிட்டு முறையின் அடிப்படை விதிமுறைகளை விவாதிக்கக்கூடியது. இந்தமுறை கேம்ப்ரிட்ஜ் கோடு எனப்பட்டது.
1947-ல்ஆம்ஸ்டர்டாம்கோடு,
1952-ல்ஸ்டாக்கோலம்கோடு,
1956-ல்பாரிஸ்கோடு,
1961-ல்மோன்ரியல்கோடு,
1966-ல்எடின்பரோகோடு,
1972-ல்சியேட்டில்கோடு, அதன் பிறகு 12-வது அகில உலக தாவரவியல் கூட்டம் ஜூலை
1975-ல் சோவியத் ரஷியாவிலுள்ள லெனின் கிராட் என்னுமிடத்தில் கூடியது. அங்கு எடுக்கப்பட்ட முடிவு லெனின் கிராட்கோடு எனப்பட்டது. இக்கூட்டத்தில் விவாதிக்கப் பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தற்போதைய அகில உலகத் தாவரவியல் பெயர் சூட்டுச் சட்டம் (International Code of Botanical Nomenclature - ICBN) 1978-முதல் நடைமுறைக்கு வந்தது.
இதன் பிறகு
1981 - சிட்னிகோடு,
1987 - பெர்லின்கோடு,
1993 - டோக்கியோகோடு,
1999 - செயின்ட்லூயஸ்கோடு,
2005 - வியன்னாகோடு,
2011 - இறுதியானஆஸ்திரேலிய,
மெல்பெர்ன் கோட்டின்படி புதுத்தாவரத்தின் ‘முக்கிய வேறுபாடுகள்’ அடங்கிய பண்புகள், ஆங்கிலத்தில் இருந்தாலே போதுமானதென முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெயரீட்டு முறையை ஓழுங்கு படுத்துவது இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அகில உலகத் தாவரவியல் பெயரீட்டுமுறைச் சட்டத்தின் சில முக்கிய அம்சங்களாவன :
1. பிறவியின் (genus) பெயர் ஒற்றை பெயர்ச் சொல்லாகும். ஆங்கிலத்தில் எழுதும்போது, பெயரின் முதல் எழுத்து பெரிய எழுத்துக்களில் எழுதப்பட வேண்டும். பெயர்வழி (species) பெயர் ஒரு பண்புச் சொல்லாகும். இதனை ஆங்கிலத்தில் எழுதும்போது, முதல் எழுத்தை சிறிய எழுத்துக்களில் எழுதப்பட வேண்டும். இது பல மூலங்களிலிருந்து பெறப்பட்டதாகவும் ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளைக் கொண்டதாகவும் இருக்கும்.
எ.கா.
1. ஃபில்லான்தஸ்எம்பிலிக்கா (Phyllanthusemblica L.)
2. நிக்டான்தஸ்ஆர்பார்
- டிரிஸ்டிஸ் (Nyctanthesarbor-tristis L.)
2. பெயர் சிறிய வார்த்தையாகவும்,
துல்லியமாகவும் எளிதில் வாசிக்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
3. இருசொற் பெயர்களை அச்சிடும் போது சாய்வாக (italic) அச்சிட வேண்டும். அல்லது அடிக்கோடிட்டு காட்ட வேண்டும்.
எ.கா. Justicia adhatoda L.ஜஸ்டீசியா ஆடாதோடா எல். அல்லது Justicia adhatoda L. ஜஸ்டீசியா ஆடாதோடா எல்.
எ.கா. Justicia adhatoda L.ஜஸ்டீசியா ஆடாதோடா எல். அல்லது Justicia adhatoda L. ஜஸ்டீசியா ஆடாதோடா எல்.
4. ஒரு தாவரத்திற்குப் புதிய பெயரினைச் சூட்டும் போது, அத்தாவரத்தின் ஹெர்பேரியம் தயார் செய்யப்பட்டு, ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஹெர்பேரிய நிறுவனத்தில், அதன் விளக்கத்துடன் சேமித்து வைக்கப்பட வேண்டும். இவ்வாறு சேமித்து வைக்கப்படும் தாவரப்பகுதி, மூல உலர் தாவர மாதிரி (Type specimen) எனப்படும். இது ஹெர்பேரிய அட்டையில் ஒட்டப்பட வேண்டும்.
5. எந்த ஒரு நபர் ஒரு தாவரத்திற்கு முதன் முறையாக பெயர்சூட்டி, அத்தாவரத்தின் விளக்கத்தை அளிக்கிறாரோ அல்லது ஒரு தாவரத்திற்குப் புதிய பெயர் சூட்டுகிறாரோ, அந்நபர் அத்தாவரத்துக்கான ஆசிரியர் எனக் கருதப்படுகிறார். ஒரு தாவரத்தின் இருசொற்பெயரில், பெயர்வழி (species) பெயரின் இறுதியில்,
அத்தாவரத்திற்கு முதன்முதலில் விளக்கமளித்த ஆசிரியரின் (Author) பெயர்ச் சுருக்கம் எழுதப்படும். இதற்கு ஆசிரியர் பெயர் குறித்தல் என்று பெயர்.
எ.கா. லின்னேயஸ் (Linnaeus) என்ற பெயர் லி. அல்லது லின். (L. or Linn.) எனவும்,
ராபர்ட் பிரௌன் (Robert Brown) என்ற பெயர் ரா. பி. (R. Br.) எனவும்,
சர் ஜோசப் டால்டன் ஹூக்கர் (Sir Joseph Dalton Hooker) என்ற பெயர் ஹூக். எஃப் (Hook. f.) எனவும்
கலியமூர்த்தி இரவிக்குமார் (Kaliamoorthy Ravikumar) என்ற பெயர் கே. ரவிக். (K.Ravik.) எனவும்
இரண்டு ஆசிரியர் இணைந்து பெயர்சூட்டும் தாவரத்தை கூறும் போது
அனிசோசிலஸ் ஹென்றியீ கே.ரவிக். & வி.லக்ஷ்ம். - Anisochilus henryi K.Ravik. &V.Lakshm. எனவும் ஆசிரியர் பெயர்கள் உலகளவில் பெயர் சுருக்கம் செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட வேண்டும்.
ராபர்ட் பிரௌன் (Robert Brown) என்ற பெயர் ரா. பி. (R. Br.) எனவும்,
சர் ஜோசப் டால்டன் ஹூக்கர் (Sir Joseph Dalton Hooker) என்ற பெயர் ஹூக். எஃப் (Hook. f.) எனவும்
கலியமூர்த்தி இரவிக்குமார் (Kaliamoorthy Ravikumar) என்ற பெயர் கே. ரவிக். (K.Ravik.) எனவும்
இரண்டு ஆசிரியர் இணைந்து பெயர்சூட்டும் தாவரத்தை கூறும் போது
அனிசோசிலஸ் ஹென்றியீ கே.ரவிக். & வி.லக்ஷ்ம். - Anisochilus henryi K.Ravik. &V.Lakshm. எனவும் ஆசிரியர் பெயர்கள் உலகளவில் பெயர் சுருக்கம் செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட வேண்டும்.
6. பெயர் சூட்டப்பட்டத் தாவரத்தின் முதன்மையான விளக்கம் இலத்தின் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
7. தவறான மூலத்திலிருந்து ஒரு தாவரம் பெயர் சூட்டப்பட்டிருந்தால், அப்பெயர், தவறானப் பெயர் (Ambiguous name) எனக் கருதப்படும். இது நாமென் அம்பிகுவம் (Nomen ambigum) என்று அழைக்கப்படும். இத்தகைய பெயர் உபயோகத்திலிருந்து முழுமையாக நிராகரிக்கப்படும்.
8. ஒரு தாவரத்தின் பிறவி (genus) சொல்லும், பெயர்வழி (species) சொல்லும் ஒரே மாதிரியாக இருக்குமேயானால், அத்தகைய பெயர் டாட்டோனிம் (Tautonym) எனப்படும்.
எ.கா. சாசாஃப்ரஸ் சாசஃப்ரஸ். தாவரப் பெயர் சூட்டு முறையில் இது போன்ற பெயர்கள் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை.
எ.கா. சாசாஃப்ரஸ் சாசஃப்ரஸ். தாவரப் பெயர் சூட்டு முறையில் இது போன்ற பெயர்கள் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை.
இதன் அடிப்படையில் இலத்தீன் வார்த்தையில் உச்சரிக்கப்படும் தாவரயியல் பெயர்கள் பெயர் குழப்பம் தீர்க்க ஆங்கிலத்தில் இருசொற் பெயரிட்டும் முறை 18-ஆம் நூற்றாண்டில் துவங்கி 20-ஆம் நூற்றாண்டில் தான் சட்டபூர்வ நடைமுறைக்கு வந்தது.
தமிழில் சங்ககாலங்களில் தாவரங்களுக்கு (இயற்கையான பொருள்களுக்கு) பெயரிட்டு அழைப்பதற்கு தொல்காப்பியர் இலக்கணம் வகுத்து கொடுத்துள்ளார்.
“இனச்சுட்டு இல்லாப் பண்புகொள் பெயர்கொடை
வழக்குஆறு அல்லசெய்யுள்ஆறே” - 18
கிளவியாக்கம்
கிளவியாக்கம்
சொல்லதிகாரம்
தொல்காப்பியம்
ஒரு பொருளுக்கு இனச்சுட்டில்லாத பண்புகொள் பெயரைக் கொடுத்தல் வழக்கு நெறியல்ல: செய்யுள் நெறி என கூறியுள்ளார்.
செய்யுள் நெறி (எழுத்து வடிவம்) படி தாவர இனத்தை அடையாளம் காட்ட பொருட் பெயருக்கு அடைமொழி கொடுப்பது அதனை பொதுவினின்று பிரித்து உணர்த்துவதற்காகும்
(உம்) செந்தாமரை என அடைமொழிக் கொடுப்பது வெண்தாமரையில் இருந்து பிரித்து உணர்த்துவதற்காகும் - இது இனஞ்சுட்டும் பண்புகொள் பெயராகும்.
(உம்) செந்தாமரை என அடைமொழிக் கொடுப்பது வெண்தாமரையில் இருந்து பிரித்து உணர்த்துவதற்காகும் - இது இனஞ்சுட்டும் பண்புகொள் பெயராகும்.
“இயற்கைப் பொருளை இற்றுஎனக் கிளத்தல்” - 19
கிளவியாக்கம்
சொல்லதிகாரம்
தொல்காப்பியம்
“இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல்” - 404
மரபுவழுவமைதி
நன்னூல்.
இயற்கையான பொருளை இத்தகைய தன்மையுடையது என்று கூற வேண்டும் என தொல்காப்பியம் மற்றும் நன்னூலிலும் கூறப்பட்டுள்ளது. தன்னுடைய இயல்பில் மாறாமலும் பிறிதொன்றால் திரிக்கப்படாமலும் தத்தம் இயல்போடு நிற்க இயற்கையான பொருளை இத்தகைய தன்மையுடையது என்று கூற வேண்டும் என தமிழில் இலக்கணம் வகுத்து கூறியுள்ளனர்.
சங்ககாலத்தில்தாவரங்களின்பெயர்கள்:
தொல்காப்பிய இலக்கணத்தின் அடிப்படையில் சங்ககாலத்தில் உள்ள பெயர்கள் அமைந்துள்ளன. 2முதல் 5-ஆம் நுற்றாண்டுகளில் (1600- ஆண்டுகளுக்கு முன்பாக) மாநாடு கூட்டாமல், சட்டங்கள் வகுக்காமல் தமிழில் தாவரத்தின் பெயரை செய்யுள் நெறியில் குறிப்பிடும் போது புறத்தோற்றப் பண்புகளை (Morphology character) வைத்து இரட்டைப் பெயரை பயன்படுத்தி உள்ளது தெரியவருகிறது.
குறிஞ்சிப்பாட்டில் உள்ள தாவரப் பெயர்கள்
குறிப்பாக கபிலர் தனது குறிஞ்சிப் பாட்டில் பயன்படுத்திய 112 தாவரங்களில் 35 தாவரங்களுக்கு புறத்தோற்ற பண்புகளை அடைமொழியாக வைத்து இருசொற் பெயரை வழங்கி உள்ளார்.
உம் : Cassia fistula தாவரத்தின் தமிழ் பெயராக - தூங்கிணர் கொன்றை - என்று இரண்டாம் நூற்றாண்டுகளில் கபிலர் வழங்கி உள்ளார்.
உம் : Cassia fistula தாவரத்தின் தமிழ் பெயராக - தூங்கிணர் கொன்றை - என்று இரண்டாம் நூற்றாண்டுகளில் கபிலர் வழங்கி உள்ளார்.
1. ஒண்செங் காந்தள் 19. முட்தாட் தாமரை
2. தன்கய குவளை 20. நறுந்தன் கொகுடி
3. அவிழ்கொத்து உந்தூழ் 21. கொங்குமுதிர் நறுவழை
4. எரிபுரைஎறுழம் 22. சிறு செங்குரலி
5. வான்பூங் குடசம் 23. கள்கமழ் நெய்தல்
6. மணிப்பூ ங்கருவிளை 24. பல்பூந் தணக்கம்
7. பல்இணர் குரவம் 25. தூங்குஇணர் கொன்றை
8. பல்இணர் காயா 26. நெடுங்கொடி அவரை
9. விரிமலர் ஆவிரை 27. பல்பூம் பிண்டி
10. குறிஇப் பூளை 28. சூடர்பூந் தோன்றி
11. குறுநறுங் கண்ணி 29. நறும் புன்னாகம்
12. விரிப்பூங் கோங்கம் 30. பைங் குருக்கத்தி
13. தேங்கமழ் பாதிரி 31. கடியிறும் புன்னை
14. பெருந்தண் சண்பகம் 32. நல்இருள் நாறி
15. கடிகமழ் கலிலிமா 33. மாயிருங் குரந்து
16. கள்இவர் முல்லை 34. சிறு தினை
17. சிறு மாரோடம் 35. நெல்கொள்நெடு வெதிர்.
18. நீள்நறு நெய்தல்
இக்கால அறிவியல் அறிஞர்கள் தாவரங்களுக்கு சூட்டுகின்ற இருசொற் பெயரினை சங்க காலங்களிலேயே அடைமொழியுடன் கூடிய இருசொற் பெயராகத் தாவரங்களுக்கு வழங்கி உள்ளனர். ஆங்கில அறிவியல் பெயரில் பண்பைக் குறிக்கும் சொல், தாவரப் பெயர் சொல்லுக்கு அடுத்து வருமாறு அமைந்துள்ளது.
எ.கா. Oryzasativa
Oryza - நெல்
sativa - பயிரிடக்கூடியது -
வயல்நெல்-சங்கஇலக்கியம்
வயல்நெல்-சங்கஇலக்கியம்
Ipomoea biloba- கவட்டிலைஅடும்பு
Ipomoea pes-caprae- ஆட்டுக்கால்அடும்பு
Ipomoea -அடும்பு
Ipomoea -அடும்பு
biloba - கவட்டிலை
pes-caprae - ஆட்டுக்கால், (மிருகத்தின் குளம்பு)
-மானடியன்ன - கவட்டிலை - சங்க இலக்கியம்
-மானடியன்ன - கவட்டிலை - சங்க இலக்கியம்
ஆங்கில பெயர்களில் இருந்து வேறுபட்டு தமிழில், பண்புப் பெயர், தாவரத்தின் பெயர்ச் சொல்லுக்கு முன்பாக மிக நேர்த்தியாக பண்பினை முன்னிலை படுத்தி அடையாளம் காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
எ.கா. விரிமலர் ஆவிரை- Senna auriculata
எ.கா. விரிமலர் ஆவிரை- Senna auriculata
ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு, பக்தி இலக்கிய காலங்களிலும், சித்தர் இலக்கிய காலங்களிலும், வாய்மொழி இலக்கியங்களிலும், மற்றும் பிற்காலங்களிலும், சங்ககாலத்தில் தாவரங்களை அடையாளம் காட்டி பெயரிட்ட முறை முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு விட்டது.
பக்தி இலக்கியங்கள்
பக்தி இலக்கியங்களில் கடவுளின் கற்பனை வடிவங்களுக்கு தாவரங்களை உவமைகளாகவும், தாம் விரும்பும் கடவுளுக்கு தாவரங்களை உதாரணமாகவும் காட்டினர். பூக்களை தெய்வத்தின் முகம், கண், கை, பாதம், கொங்கை, வண்ணம் இவைகளோடு ஒப்பிட்டனர்.
உதாரணம்:
Cassia fistula L.
தூங்கிணர் கொன்றை. கபிலர். என்ற சங்க இலக்கிய பெயர்
கொங்கிட்ட கொன்றைச்சடையும். திருவருட்பா.
தார்க்கொன்றைப் புரிசடை. திருவருட்பா.
கொன்றையஞ் செஞ்சடையாய். திருவாய்மொழி எனவும்.
Nelumbo nucifera Gaertn.
முட்தாட் தாமரை கபிலர். என்ற சங்க இலக்கிய பெயர்
தாமரை முகம். வில்லிபாரதம்
செங்கமலக் கரம். சேக்கிழார்.
முட்தாட் தாமரை கபிலர். என்ற சங்க இலக்கிய பெயர்
தாமரை முகம். வில்லிபாரதம்
செங்கமலக் கரம். சேக்கிழார்.
தாமரை பாதம். சுந்தரர்.
Memecylon scutellatum(Lour.)Hook.&Arn.பல் இணர்க்காயா கபிலர். என்ற சங்க இலக்கிய பெயர் காயாம்பூ மேனி. நா.தி.பிரபந்தம் எனவும் அழைக்கப் பட்டுள்ளது.
சித்தர் இலக்கியங்கள்:
சித்தர் இலக்கிய காலங்களில் மருத்துவப் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டும், மறை பொருளாகவும் மருத்துவச் செடிகளை இனம்காணும் முறையை பயன்படுத்தி வந்தனர்.
மருத்துவப் பயன்பாட்டு பெயர்:
வாதநாராயணி - Delonixelata(L.) Gamble- வாத நாராயணன் தா.த.மையம்
வாதம்கொல்லி - Gendarussa vulgarisNees- வாத சிந்துவாரம் தா.த.மையம்
வாதாதி
- Justicia adhatodaL.- ஆடுதொடா பூநாகம் தா.த.மையம்
வாதாசனி - OphiorrhizamungosL.- கீரி திருவிளம் தா.த.மையம்
வாதிகம் - Pimpinella anisumL. - நற் சோகி தா.த.மையம்
வாதநாசினி - Piper nigrumL.- மிளகு திப்பிலி தா.த.மையம்
வாதபேதம் - Thespesia populnea (L.) Soland ex Correa- பூவரசு பீரம் தா.த.மையம்
வாதாமடக்கி - Rotheca serrata(L.) Steane&Mabb.- கண்டுமூலவிளாத்தி தா.த.மையம்
மறைபொருள்:
இருகுரங்கின் கை - Mukia maderaspatana(L.) M.Roem. - முசு முசுக்கை தா.த.மையம்
திருடி
(கள்ளி)
- Euphorbia
antiquorumL.- சதுரக் கள்ளி தா.த.மையம்
நாய்க்கடிச்சான் பட்டை - Guidonia esculenta (Roxb.) Baill.- கரும் கடிச்சை தா.த.மையம்
பூனை வணங்கி, மேனி - Acalypha indicaL.- குப்பை மேனி தா.த.மையம்
பிற்காலங்களின் பயன்பாட்டுப் பெயர்
பயன்பாட்டுப் பெயர்கள்:
பல் விளக்கி - Achyranthes aspera L. - வெண் நாயுருவி தா.த.மையம்
பல்வலி பூண்டு - Acmella paniculata (Wall. ex DC.) R.K.Jansen - சன்னி நாயகம் தா.த.மையம்
நேத்திர மூலி - Blepharis maderaspatensis (L.) B.Heyne ex Roth- சென்னை குறுமான் தா.த.மையம்
நேத்திர நாசி - Alternanthera sessilis (L.) R.Br. ex DC.- கண்ணி கொடுப்பை தா.த.மையம்
முடக்கற்றான் - Cardiospermum halicacabum L. - பேரிலை முடக்கற்றான் தா.த.மையம்
இரத்த முடக்கி, கண்வலிப்பூ - Argyreia cuneata (Willd.)
Ker-Gawl.- கண்வலி உணான் தா.த.மையம்
புறத்தோற்ற பண்புகளை பெயராக பயன்படுத்திய வழக்கு பெயர்
பிற்காலங்களில் சங்ககால பெயரிடுமுறை முற்றிலுமாக புறந்தள்ளப்பட்டு தாவரங்களின் புறத்தோற்ற பண்புகளை அடிப்படையாகக் கொண்டு பெயரிடப்பட்டன.
பார்வையில் உணர்தல்:
ஏழிலைப் பாலை - Alstonia scholaris (L.) R.Br. - ஏழிலை சாத்தான் தா.த.மையம்
ஓரிலை
- Desmodium gangeticum (L.) DC.- ஓரிலை புள்ளடி தா.த.மையம்
மூவிலை, மூவிலை பச்சிலை - Pseudarthria viscida (L.)
Wight &Arn.- மூவிலை குருத்து தா.த.மையம்
ஓரிதழ் தாமரை - Hybanthus enneaspermus (L.) F.V.Muell.- ஓரிதழ் இரத்தினம் தா.த.மையம்
தேள் கொடுக்கி, கருட மூக்கு - Martynia annua L.
- மணிப்பூ புலிநகம் தா.த.மையம்
கவிழ் தும்பை - Trichodesma indicum (L.) R.Br. - நாட்டு அறாமை தா.த.மையம்
ஓரிலை தாமரை, ஓரிலை மலர் - Nervilia aragoana Gaudich.- ஓரிலை அற்கி தா.த.மையம்
நாலிலை நாகம் - Blepharis maderaspatensis (L.) B.Heyne ex Roth - சென்னை நாலிலை தா.த.மையம்
ஆனை அடி
- Elephantopus scaber L.- முரட்டிலை யானை. தா.த.மையம்
நாசியால் உணர்தல்:
பீநாறி
- Sterculia foetida- குதிரைபிடுக்கன் காவளம் தா.த.மையம்
பீநாறிச் சங்காய் - Paederia foetida. - பீநாறி பிடரி. தா.த.மையம்
வாசனை நெய்தல் - Nymphae aodorata. - கள்கமழ் நெய்தல். கபிலர்
என அழைக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. மேலே கூறிப்பிட்டுள்ள தாவரங்களுக்கான (சரியான) உத்தேச பெயர்கள் தா.த.மையம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் உலக இருசொற் பெயரிட்டு முறைக்கு முன்னோடியாக இருந்து பயன்பாட்டில் இருந்த பெயர்களை மீண்டும் நிலைநாட்ட வேண்டும்.
மேலும் இரட்டை பெயர் இல்லாத தாவரங்களுக்கு சரியான முறையில், மிகவும் பொறுப்போடு இரட்டை பெயர் சூட்டி நடைமுறை படுத்த வேண்டிய அவசியத்தில் நாம் உள்ளோம்.
மேலும் இரட்டை பெயர் இல்லாத தாவரங்களுக்கு சரியான முறையில், மிகவும் பொறுப்போடு இரட்டை பெயர் சூட்டி நடைமுறை படுத்த வேண்டிய அவசியத்தில் நாம் உள்ளோம்.
இப்பெயர்கள் சங்க இலக்கியத்தில் கூறியுள்ளது போல் இரண்டு சொற்களை கொண்டுள்ளதாகவும் முதல் சொல் பெயர்வழி பெயர் சொல்லாகவும் (அத்தாவரத்தின் பண்பை குறிப்பதாகவும்) இரண்டாம் சொல் பிறவி பெயராகவும் பண்பை முன்னிலை படுத்தி அமைய வேண்டும்.
ஆங்கிலத்தில் தாவரபெயர் சாய்வு எழுத்தால் (Italic) குறிப்பிடப் படுவது போல், தமிழிலும் சாய்வு எழுத்தால்அல்லது அடிக்கோடிட்டு வடிவமைக்கலாம். பெயர் சூட்டியவர், சூட்டுபவர்கள் பெயரை இணைத்து எழுத்தின் அளவை குறைத்து சாதாரன எழுத்தில் மேலே குறிப்பிட்டுஉள்ளவாறு சங்ககால பெயர்கள் பொருந்துமானால் சங்ககால புலவர்களின் பெயரை ஆசிரியராக குறிப்பிட வேண்டும்.
வெளியீடுகள் :
கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள் 8-7-2012
அரிமா நோக்கு ஆகஸ்ட் 2012.
இரா. பஞ்சவர்ணம்
மேனால் தலைவர், பண்ருட்டி நகராட்சி,
நிறுவனர், தாவரத் தகவல் மையம்,
வெளியீடுகள் :
கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள் 8-7-2012
அரிமா நோக்கு ஆகஸ்ட் 2012.
இரா. பஞ்சவர்ணம்
மேனால் தலைவர், பண்ருட்டி நகராட்சி,
நிறுவனர், தாவரத் தகவல் மையம்,
பண்ருட்டி
No comments:
Post a Comment