செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

சுய விபரம்


பஞ்சவர்ணம்
தாவரவியல் அறிஞர்
பண்ருட்டி இரா. பஞ்சவர்ணம்
வாணாட்டரவு(Bio-Data)
       I.          நகர்மன்றத்தலைமை– நிர்வாகப் பொறுப்பு
     II.          தாவரவியல் ஆய்வு                                        
    III.          ஆய்வு நூல்களின் ஆசிரியர்
    IV.          நூல்கள் பற்றிய மதிப்பீடுகள்
     V.          கலந்துகொண்ட கருத்தரங்குகள்
    VI.          பரிசும் பாராட்டும்
  VII.          ஒளிப்படங்களும் இதழ்ச்செய்திகளும்
1)      ஒளிப்படங்கள் (சில மட்டும்)
2)      இதழ்ச்செய்திகள் (சில மட்டும்)
VIII.          தன்விவரக் குறிப்பு (Personal details)தாவரவியல் அறிஞர்
பண்ருட்டி இரா. பஞ்சவர்ணம்
வாணட்டரவு
       I.          நகர்மன்றத்தலைவராக – நிர்வாகியாக ….
1996-2001, 2001-2006 – ஆகிய காலங்களில் தொடர்ந்து இருமுறை பெருவாரியான வாக்குகள் முன்னணிபெற்று – மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பண்ருட்டி நகர்மன்றத்தலைவராகப் பத்தாண்டுக்காலம் பணியாற்றியவர். இந்தக் காலகட்டத்தில் இவர் புரிந்த சாதனைகளுள் சில :-

மின்னாளுகை(e-governance)
à  இந்தியாவிலேயே முதன்முறையாக மின்னாளுகையைப் பண்ருட்டி நகர்மன்ற நிர்வாகத்தில் அறிமுகப்படுத்தி, அரசின் பாராட்டையும் மக்களின் ஆதரவையும் பெற்றவர்.

à  இந்த மின்னாளுகையின் மூலம் வெளிப்படையான நிர்வாகமும் விரைவான பொதுச்சேவையும் உறுதிசெய்யப்பட்டன.

à  கையூட்டோ, முறைகேடோ, இடைத்தரகர்களோ இல்லாமல், கட்டட ஒப்புதல், குடிநீர் இணைப்பு, தொழில் உரிமம் – போன்றவை ஏழே(7) நாட்களில் கிடைத்திட வழிவகை செய்யப்பட்டது; பிறப்பு – இறப்புச் சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டன.

à  அலுவலகச்செயற்பாடுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டன; அலுவலக ஊழியர்கள் அனைவர்க்கும் பணியிடைக் கணினிப்பயிற்சி வழங்கப்பட்டு, இணையதள வசதியும் செய்துதரப்பட்டது.


à  தொடுதிரைக்கு மாற்றாகத் தேடுதிரைதமிழகத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு, அதன்மூலம் ஒரு குடிமகன் தான் கட்டவேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர்க்கட்டணம், கடை வாடகை – போன்ற விவரங்கள், தான் தந்துள்ள குறைதீர் விண்ணப்பத்தின் அவ்வப்போதைய நிலை, நில அளவை – வரைபடம் பற்றிய தகவல்கள், பிறப்பு – இறப்பு பற்றிய விவரங்கள் – போன்றவற்றை உடனுக்குடன் அறிய வழிவகை செய்யப்பட்டது.

à  குறைதீர்விண்ணப்பங்கள் மக்களிடமிருந்து பெறப்படும்போதே, அவற்றுக்கு வரிசையெண் உருவாக்கப்பட்டு, கோப்பு நகர்வைக் கண்காணிக்கவும், விண்ணப்பம் கொடுத்தோர் விண்ணப்பத்தின் நிலையினை அறிந்துகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டது. மக்கள்சேவை தொடர்பான செய்திகள் அனைத்தும் தொடர்புடைய மக்களுக்குக் குறுஞ்செய்திகள் (SMS) மூலமாகவும் தெரிவிக்கப்பட்டன.

à  அலுவலகச்செயற்பாடுகள் அனைத்தும் வெளிப்படையாகவும், நம்பகத்தன்மை மிக்கதாகவும், ஊழல் முறைகேடு அற்றதாகவும் மாற்றப்பட்டன. அலுவலகத்தில் யாரும் கையூட்டு பெறமுடியாத நிலையும், மக்களுள் யாரும் கையூட்டு தரவேண்டாத நிலையும் உறுதிசெய்யப்பட்டன.

à  மக்களிடமிருந்து பெறப்பட்ட குறைதீர் விண்ணப்பங்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முற்றிலுமாகக் குறைதீர்த்து வைக்கப்பட்ட விண்ணப்பங்கள், நிலுவையிலுள்ள விண்ணப்பங்கள் – போன்ற விவரங்கள் நாள்தோறும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.
à  அமெரிக்காவின் சிகாகோ மாலித்திலுள்ள புகழ்பெற்ற மேலாண்மைக் கல்வி நிறுவனமான கெலாக் (Kelogg School of management) தமது ஆய்வாளர்கள் குழுவை நேரடியாகப் பண்ருட்டிக்கு அனுப்பி, அங்குச் செயல்படுத்தப்பட்ட மின்னாளுகையை ஆராய்ந்து, வெகுவாகப் பாராட்டிச்சென்றது.
பசுமைப் பண்ருட்டி
சுற்றுச்சூழல், உயிர்வளி, நீர்நிலை மாசற்று இருக்கவும், காலத்தே மழை தவறாமல் பெய்யவும், தூய்மையான காற்றைப் பொதுமக்கள் சுவாசிக்கவும் பண்ருட்டி நகர் முழுவதும் மரக்கன்று நட்டு வளர்த்திடும் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. சாலைகளின் மருங்கிலும், நீர்நிலைகளைச் சுற்றிலும், வீட்டுத்தோட்டங்களிலும், பள்ளி-கோவில் வளாகங்களிலும், சமூகக்கூடங்களிலும், விளையாட்டுத்திடல் ஓரங்களிலும் பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு, முறையாகப் பராமரிக்கப்பட்டு, முழுமையாக வளர்க்கப்பட்டுப் பண்ருட்டியைப் பசுமையாக்கும் முயற்சிகள் வெற்றிகரமாகச்செயல்படுத்தப்பட்டன. நகராட்சித்தோட்டத்தில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, ஐம்பதினாயிரத்திற்கும் (50,000) மேற்பட்ட மரக்கன்றுகள் விலையில்லாமல் மக்களுக்கு வழங்கப்பட்டன.
மழைநீர்ச் சேகரிப்பு
மழைநீர்ச் சேகரிப்புத்திட்டம் நூறு விழுக்காடு செயல்படுத்தப்பட்டது. கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள், திரையரங்குகள், சமூக நலக்கூடங்கள், அரசுக்கட்டடங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றில் மட்டுமல்லாமல், ஒவ்வொரு வீட்டிலும் இத்திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டது; மக்களும் முழுமனத்தோடு தங்கள் ஆதரவினை நல்கினர். இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற பணிகள்
à  மக்கும் - மக்காக் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, வீடுகள்தோறும் சென்று அவற்றைப் பெற்றுவர, நடமாடும் குப்பை வண்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

à  நகராட்சி அலுவலகத்திற்குத் தங்கள் பணிகளை முடித்துக்கொள்வதற்காக மக்கள் அலைய வேண்டிய தேவை இல்லாமல், கணினி வசதியுடன் கூடிய ஒரு நடமாடும் அலுவலகம் பணியில் முடுக்கிவிடப்பட்டது. அது ஒவ்வொரு பகுதியாக மக்களின் வீடுகளைத் தேடிச்செல்லும். பிறப்பு – இறப்புச்சான்றிதழ் பெறுதல், வரிசெலுத்துதல், கடை வாடகை கட்டுதல், குறைதீர்விண்ணப்பம் அளித்தல் – உள்ளிட்ட பல்வேறு சேவைகளை மக்கள் வீடுகளிலிருந்தவாறே பெற்றிட, இந்த நடமாடும் அலுவலகம் மக்களுக்குப் பெரிதும் பயன்பட்டது.

à  வெளிப்படையான நிர்வாகம், ஊழலற்ற நிர்வாகம், விரைவான சேவை, மக்கள் சார்ந்த நிர்வாகம்  - போன்றவை மக்கள் மனம் நிறைவுறும் வகையில் உறுதி செய்யப்பட்டன.

     II.          தாவரவியல் ஆய்வு
à  தாவரங்கள் பற்றிய முழுமையான தரவுகளைத் தொகுப்பதற்கும், ஆய்வதற்கும், அத்தகைய ஆய்வினை மேற்கொள்வோர்க்குத் தேவையான தகவல்களை அளிப்பதற்கும் வாய்ப்பாகத் தாவரத் தகவல் மையம்ஒன்றினைப் பண்ருட்டியில் தொடங்கி ஆய்வு செய்துவருகிறார்.

à  தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் உள்ளிட்ட நீதி இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், கம்பராமாயணம், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்இலக்கியங்கள், திருவருட்பா, தலபுராணங்கள், வாய்மொழி இலக்கியங்கள் – போன்ற தமிழிலக்கியங்களிலுள்ள தாவரங்கள் கண்டறியப்பட்டு, அவை பற்றிய தகவல்கள் அனைத்தும் இம்மையத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.

à  தமிழகக்கோவில்களிலுள்ள தலமரங்கள் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டுப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
à  தமிழகத்திலுள்ள 5,776 தாவரங்களும் கண்டறியப்பட்டு, வகைப்படுத்தப்பட்டு, படங்களுடன் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

à  இந்தியா முழுவதுமுள்ள 15,508 தாவரங்கள் பற்றிய விவரங்களையும் இந்தத் தகவல் மையத்திலிருந்து பெறலாம்.

à  மரக்கன்றுகளை நட்டு வளர்த்துப் பராமரிக்கும் பழக்கத்தை மக்களிடம் ஊக்குவிப்பதற்காகச் சோதிடத் தாவரங்கள் என்னும் கருத்துருவாக்கமும் இந்த ஆய்வு மையத்தால் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது, அவரவர்கள் தத்தமக்கான நட்சத்திரம், இராசி, கோள்கள் – இவற்றுக்கான மரத்தை வளர்த்துப் பராமரித்து, தத்தம் நம்பிக்கையின் அடிப்படையில் தோஷ நிவரத்தி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

à  இந்தத் தாவரங்கள் பற்றிய விவரங்களை

à  http:panrutipanchavarnam.blogspot.in மற்றும் http:plantinformaticcentre.blogspot.in ஆகிய இணையதளங்களில் பெற வழிவகை செய்யப்பட்டுவருகிறது. நட்சத்திரம், இராசி, கோள் – இவற்றின் பெயரால் தேடினால், அவற்றுக்குரிய தாவரங்கள் பற்றிய விவரங்கள் கிடைக்கும்.
தாவரப்பெயர், தாவரவியல் பெயர், குடும்பப்பெயர் (family),பிறவிப் பெயர் (genus), தாவர ஆசிரியர் பெயர், தமிழ்ப்பெயர், பிரமொழிப்பெயர் (குறிப்பிட்ட சில மொழிகள்), ஆங்கிலப்பெயர், வளரியல்பு, பரவும்தன்மை, மலர்வண்ணம், மலரும் பருவம், காய்க்கும் பருவம், மருத்துவப்பயன்பாடு – போன்றவற்றுள் ஏதாவது ஒன்று தெரிந்தால் போதும், அதைக்கொண்டு தொடர்புடைய தாவரங்கள் பற்றிய முழுத்தகவல்களையும் பெற்றுவிடமுடியும்.


III.          ஆய்வு நூல்களின் ஆசிரிர்
தாவரங்கள், தமிழிலக்கியங்கள், ஆன்மீகம் – ஆகிய மூன்றையும் தொடர்புறுத்தி, பல ஆய்வுகளை நிகழ்த்தி தமிழ்கூறுநல்லுலகத்திற்குப் பல நூல்களை இவர் தந்துள்ளார். அவ்வகையில்,

1.     பிரபஞ்சமும் தாவரங்களும்
பிரபஞ்சமும் தாவரங்களும்

2.      கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தவரங்கள்

குறிஞ்சிப்பாட்டுத் தவரங்கள்

3.      தொல்காப்பியரின்தொல்காப்பியத் தாவரங்கள்

தொல்காப்பியத் தாவரங்கள்

 


4.      திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள்

திருமந்திரத் தாவரங்கள்
 


5.      வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள்
அருட்பாத் தாவரங்கள்


6.      திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள்
திருக்குறள் தாவரங்கள்
7.      கம்பரின் கம்பராமாயணத் தாவரங்கள்

கம்பராமாயணத் தாவரங்கள்


பொது நூல்கள்
உணவு வகைகள்
சிறுதானிய உணவு வகைகள்

சிறுதானிய உணவு


கவிதை நூல்
பனைபாடும் பாடல்        
பனைபாடும் பாடல்
                                     

என்னும் நூல்கள் குறிப்பிடத்தக்கன. மேலும், ஒரு தாவரத்திற்கு ஒரு நூல் என்னும் அடிப்படையில்,
1.      அரசமரம்
அரசமரம்
2.      கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, சாமை, சோளம், தினை, பனிவரகு, வரகு – ஆகிய எட்டு சிறுதானியத்தாவரங்களை உள்ளடக்கிய
 3. சிறுதானியத்தாவரங்கள்
சிறுதானியத்தாவரங்கள்

       

4.      பலாமரம்

பலாமரம்
5.      பனைமரம்
பனைமரம்என்னும் நூல்கள் இதுகாறும் வெளியிடப்பட்டுள்ளன. இப்பொழுது
1.      கரும்பு
பதினெண் மேற்கணக்கு நூல்கள்
1.      சங்க இலக்கியத் தாவரங்கள்
பத்துப்பாட்டு நூல்கள்
1.    சிறுபாணாற்றுப்படைத் தாவரங்கள்
2.      திருமுருகாற்றுப்படைத் தாவரங்கள்
3.      நெடுநல்வாடைத் தாவரங்கள்

4.    பட்டினப்பாலைத் தாவரங்கள்
5.    பெரும்பாணாற்றுப்படைத் தாவரங்கள்
6.    பொருநராற்றுப்படைத் தாவரங்கள்
7.    மதுரைக்காஞ்சி தாவரங்கள்
8.    மலைபடுகடாம் தாவரங்கள்
9.      முல்லைப்பாட்டுத் தாவரங்கள்
எட்டுத்தொகை நூல்கள்
1.      அகநானூறு
2.      ஐங்குறுநூறு
3.      கலித்தொகை
4.      குறுந்தொகை
5.      நற்றிணை
6.      பதிற்றுப்பத்து
7.      பரிபாடல்
8.      புறநானூறு

3.      சிலப்பதிகாரத் தாவரங்கள்
4.      மணிமேகலைத் தாவரங்கள்
7.      காரிநாயனாரின் கணக்கதிகாரம்
8.      பஞ்சாங்கம், ஜோதிடம், வாஸ்து, திசை
ஆகிய நூல்கள் அச்சில் உள்ளன. கீழ்க்காணும்

1.      அகத்தியரின் குணபாடம்
2.      கோவில் தலமரங்கள்
3.      இராசி - நட்சத்திர – திசை – கோள் தாவரங்கள்
போன்ற நூல்கள் வெகுவிரைவில் அச்சுக்கு செல்லவுள்ளன.

   IV.          நூல்கள் பற்றிய மதிப்பீடுகள்
இவர் இதுகாறும் எழுதி வெளியிட்டுள்ள நூல்கள் பற்றிய அறிஞர்களின் பாராட்டுரைகள், திறனாய்வுகள், நூல் மதிப்புரைகள் போன்றவற்றிலிருந்து ஒரு சில பகுதிகள் மட்டும் தொகுக்கப்பட்டுக் கீழே தரப்படுகின்றன.
பிரபஞ்சமும் தாவரங்களும் (2011)
நெய்வேலியில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சியில் இந்த நூல் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நூலாசிரியருக்குச் சிறந்த நூலாசிரியர் விருதும், பொற்கிழியும் வழங்கப்பட்டன. தாவரங்களின் பெயர்களால் வழங்கும் ஊர்கள், கோவில்களிலுள்ள தலமரங்கள், நட்சத்திரங்கள், ராசிகள், கோள்கள், திசைகளுக்குரிய தாவரங்கள் – என அனைத்தையும் அறிவியல் பார்வையோடு விளக்கியுள்ள ஆசிரியர் நமது பாராட்டுக்குரியர் ஆகிறார்.
 - திரு சக்தி, செப்டம்பர், 2011
கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் (2012)
கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் காணப்படும் 112 தாவரங்களை அடையாளங்கண்டு காட்டியிருப்பதோடு, 102 பூக்களையும் வண்ணப்படங்களுடன் அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். இத்தாவரங்கள் அனைத்திற்குமான தாவரத் தகவல்களை முழுதுமாகத் தொகுத்தும் பகுத்தும் வகுத்தும் தந்துள்ள ஆசிரியரின் முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது.
 - தினமணி, 04-02-2013

தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்
அரை முதலாக வேல் ஈறாகத் தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டுள்ள 55 தாவரங்களைப் பட்டியலிட்டு, அவற்றை நிலத்திணைகளைக் குறிப்பவை, போர் முறைகளைக் குறிப்பவை, வழிபாட்டுப் பயன்பாட்டுக்குரியவை, மருத்துவப்பயன்பாட்டுக்குரியவை, கூத்து வகைகளைக் குறிப்பவை – என்று வகைதொகைப்படுத்திப் பகுத்துக்காட்டியுள்ள ஆசிரியரின் நுட்பம் பாராட்டுதற்குரியது. ஒவ்வொரு தாவரத்திற்கும் வகைப்பாடு, உலகம், குடி, பிறவி, பெயர்வழி, தாவரவியல் பெயர், மாற்றுப்பெயர், வளரியல்பு – போன்றவற்றைக் குறிப்பிட்டு விளக்கமாகவும் விரிவாகவும் ஆராய்ந்துள்ளார் ஆசிரியர்.
 - அரிமா நோக்கு, ஜூலை, 2013
அரசமரம் (2014)
அரசரம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய ஆய்வுக்களஞ்சியமாக இந்நூல் வெளிவந்துள்ளது. அரசமரத்தின் மருத்துவப்பயன்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன; அரசமரம் இடம்பெற்றுள்ள தமிழ் இலக்கியங்கள் சுட்டப்பட்டுள்ளன; அரசமரத்தைத் தலமரமாகக் கொண்ட கோவில்கள், பெயராகக் கொண்ட ஊர்கள்என அரசமரம் பற்றிய அனைத்துத் தகவல்களும் இதில் உள்ளன.
 - தினமலர், 21-12-2014
திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் (2015)
தாவரநூலா,தத்துவநூலாஎனப்பிரித்தறிய முடியாதபடி உங்கள் நூல் 

பெரும்வீச்சுடன் உச்சத்தில் உள்ளது. தங்களின் இந்தப் படைப்பு 

சித்தமருத்துவ உலகில்மாபெரும் மைல்கல்; தத்துவ உலகிற்குப் 

பெரும்வரவு;தரவு,
சிக்கவாசிக்க என்கண்கள் பனித்துவிட்டன.போற்றுதலுக்குரியது              உங்கள்பணி,

ஐயா! வாழ்த்துகள்.
 - சித்தமருத்துவர்டாக்டர் கு. சிவராமன், சென்னை


சிறுதானியத் தாவரங்கள் (2015)
இந்தநூலில்சிறுதானியங்களைப்பயிரிடும் முறைகள், அவற்றின் உணவுமற்றும்மருத்துவப்பயன்பாடுகள்,தமிழிலக்கியங்களில்இடம்பெற்றுள்ளசிறுதானியங்கள்பற்றியகுறிப்புகள்,சிறுதானியங்களைக் கொண்டு செய்யப்படும் உணவுவகைகள்–போன்றஎண்ணற்றதகவல்கள்வண்ணப்படங்களுடன் தரப்பட்டுள்ளன.
 - தினத்தந்தி, 02-12-2015
சிறுதானியங்களும் உணவுவகைகளும் (2015)
நார்ச்சத்துகள்நிறைந்ததும்,இதயப்பாதுகாப்பிற்குஏற்றதுமானசிறுதானியவகைகள்உலகில் தலைசிறந்த உணவாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. இதயச் செயலிழப்பைத் தடுப்பதற்கும், உடலின் திசுக்களைப் புதுப்பிப்பதற்கும், நீரிழிவு நோயின் ஆபத்தைக் குறைப்பதற்கும், பித்தக்கற்கள்உருவாவதைத்தடுப்பதற்கும் சிறுதானிய வகைகள் உதவுகின்றன. இந்த நூலில் இவை பற்றிய விரிவான விளக்கங்களைத் தொடர்ந்து, இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் அவல், இடியாப்பம், சேமியா, போன்றவற்றின் செய்முறைகள் மற்றும்அவற்றைப்பயன்படுத்தும்விதங்கள்,சிறுதானியங்களிலிருந்து செய்யப்படும் இருநூற்றுக்கும் மேற்பட்ட சமையற்குறிப்புகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆந்திரா, கர்நாடக மற்றும் சிங்கள மக்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்திவரும் உணவுவகைகளின் செய்முறை விளக்கமும் இந்நூலில் தரப்பட்டுள்ளன. இந்நூல் சிறுதானிய வகைகளைப் பற்றிய  ஒரு சிறந்த கையேடு எனலாம்.
 - தி மெயில், (ஹிக்கின்பாதம்ஸ்)மார்ச் – 2016
வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள்(2016)
அருட்பிரகாச வள்ளலாரின் அருட்பாவில் காணப்படும் தாவரங்கள் பற்றித் தனித்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட முதல் ஆய்வு இது. வள்ளலாரின் அருட்பாவில் காணப்படும் 71 தாவரங்கள் பற்றிய அறிவியற்செய்திகள், தாவரச்செய்திகள், மருத்துவச்செய்திகள் போல்வன விரிவாகவும் விளக்கமாகவும் வண்ணப்படங்களுடன் இந்நூலில் சிறப்பாகத் தரப்பட்டுள்ளன. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய அருளுள்ளம் கொண்ட வள்ளலாருக்கு இந்த நூல் சிறந்த காணிக்கையாக அமையுமெனில் அது மிகையாகாது.
பேராசிரியர், முனைவர் ஒப்பிலா மதிவாணன்,
தலைவர் தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.
திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள்(2018)
திருக்குறளில்இடம்பெறும்தாவரங்களானஎள்,அமை,தாமரை, அனிச்சம், உள்ளி, குன்றிமணி, தினை, நெருஞ்சில், கரும்பு, நச்சுமரம் முதலிய தாவரங்கள் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், இந்தி, சம்ஸ்கிருதம் முதலிய மொழியில் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதையும், அந்தந்த தாவரத்தின் வகைப்பாடுகளையும், அவற்றின் பண்புகளையும், அவற்றிற்குத் "தாவரத் தகவல் மையம்' தரும் பெயர்களையும் குறிப்பிட்டிருப்பது நூலின் சிறப்பு.
எடுத்துக்காட்டுக்கு ஒன்று: பொருட்பாலில் "சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார்உள்ளி'எனவரும்1231-ஆவதுகுறளில்,"உள்ளி'என்ற பூத்தாவரத்தைவள்ளுவர்குறிக்கிறார்.உள்ளிமலர்,தலைசாய்ந்து பூத்திருப்பதைப்பெண்களின்கண்கள்நாணமுற்றுதலைசாய்வதற்கு ஒப்பிட்டுள்ளார். உள்ளி என்பது வெங்காயம், பூண்டு, காட்டு வெங்காயம், நரி வெங்காயம் என்று அழைக்கப்படும் தாவரங்களின் பொதுப்பெயர் என்றும்; இதில் பயன்பாட்டிலுள்ள வெங்காயமும், பூண்டின் மலரும் நிமிர்ந்த தன்மை கொண்டவை. ஆனால், காட்டுவெங்காயமலரும்,நரிவெங்காயமலரும்தலைசாய்ந்து காணப்படுவதால்,அந்தக்காலத்தில்பயன்பாட்டிலிருந்தகாட்டு வெங்காயத்தையே வள்ளுவர் குறித்ததாகக் கருதி, "உள்ளி' என்பது "காட்டு வெங்காயம்' என்கிறார் நூலாசிரியர்
திருவள்ளுவர், புல், கனி, தளிர், பூ, மலர், மடல், மரம், அரும்பு, வித்து, குழை, பழம், வள்ளி முதலிய 20 க்கும் மேற்பட்ட தாவரவியல் தொடர்பானவற்றைக் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதால், தாவரவியலிலும் மிகுந்த புலமை பெற்றிருந்தார் திருவள்ளுவர் என்பதை இந்நூல் உறுதிப்படுத்துகிறது.
                                      - தினமணி, 09-07-2018
கலந்துகொண்ட கருத்தரங்குகள்
à  Integrity India Campaign பெங்களூரில் நடத்திய கருத்தரங்கில் மின்னாளுகை பற்றிய ஆய்வுக்கட்டுரை (டிசம்பர், 2005)
à  அண்ணா மேலாண்மைக்கழகம் (Anna Institute of management) சென்னையில்நடத்திய பயிற்சி முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித்தலைவர்களுக்கு நிர்வாகம்’ பற்றி அளித்த பயிற்சி (2005)
à  Integrity India Campaign – மாண்பமை A.P.J. அப்துல்காம் தலைமையில் கோவையில் நடத்திய கருத்தரங்கில் மின்னாளுகை பற்றியசொற்பொழிவு (டிசம்பர், 2006)
à  அமெரிக்க வாழ் தமிழர்களின் அறக்கட்டளையான ‘Tamil Nadu Trust’சென்னையில்நடத்திய பயிற்சி முகாமில் நிர்வாகம் பற்றி அளித்த பயிற்சி (2006)
à  S(Japan) Certified Companies’ சென்னையில் நடத்திய கருத்தரங்கில் மின்னாளுகை பற்றிய கருத்துரை (05-09-2006)
à  S(Japan) Certified Companies’ கோவையில்நடத்திய கருத்தரங்கில் மின்னாளுகை பற்றிய கருத்துரை (03-01-2007)
à  CII கோவையில்நடத்தியஉயர்கல்வியின் தரம் பற்றிய கருத்தரங்கில் கல்வி நிலை பற்றிய கருத்துரை (2007)
à  நகர மேலாண்மைக்கழகம் சென்னை வணிக மையத்தில் நடத்திய கருத்தரங்கில் ‘Best Practices in Panruti municipality’ என்னும் தலைப்பில் நிகழ்த்திய உரை (20-03-2015)
à  சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத்துறை, சங்க இலக்கியத் தாவரங்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரை (2015)
à  சென்னைப்பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத்துறை, குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரை (2015)
à  எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்,B.E. இறுதியாண்டு மாணவர்களுக்கு ‘next practice’ என்னும் தலைப்பில் மின்னாளுகை பற்றிய கருத்துரை (2015)
à  சென்னைப்பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத்துறை, சிறுதானியத் தாவரங்கள்’ பற்றிய ஆய்வுக்கட்டுரை.(2015)
à  டாக்டர் ஜானகி– எம்.ஜி.ஆர் மகளிர் கலை – அறிவியல் கல்லூரி, சென்னைஉணவுப்பயன்பாட்டில் சிறுதானியங்கள்– ஆய்வுக்கட்டுரை.
à  உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் – தொல்காப்பியத் தாவரங்கள் – பற்றிய ஆய்வுக்கட்டுரை.
à  சென்னைப் பல்கலைக்கழகம் – தமிழர்களின் மரபுவழி உணவுமுறை – கருத்தரங்கில் சங்க இலக்கியத்தில் சிறுதானியங்கள்ஆய்வுக்கட்டுரை.
à  பரிசும் பாராட்டும்
à  தமிழக அரசு விருது (20-03-2005)
பண்ருட்டி நகராட்சியில் மின்னாளுகையை (e-governance) முதன்முறையாக அறிமுகப்படுத்தி, வெற்றிகரமாகச் செயல்படுத்தியமைக்காகத் தமிழக அரசு வழங்கிய விருது
சிறந்த கணினி நிர்வாகம் மற்றும் மேலாண்மை விருது’(20-03-2005)

à  நகர்மன்றத் தலைவர்கள் பேரவை விருது (10-02-2006)
கணினி மூலம் சிறப்பான மக்கள் நட்பு அணுகுமுறையை நடைமுறைப்படுத்தியதைப் பாராட்டித் தமிழ்நாடு நகர்மன்றத் தலைவர்கள் பேரவை வழங்கிய விருது (award for implementing the user friendly administration throw’ e-governance) (10-02-2006)
à  நகர நிர்வாகம் (City management) விருது (March, 2006)
உள்ளாட்சிநிர்வாகத்தில் மின்னாளுகையை அறிமுகப்படுத்தியமைக்காகதி சிட்டி மேனேஜர்’(The City Manager) வழங்கிய பாராட்டு (March, 2006)
à  நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி நிறுவன விருது (ஜூலை, 2011)
நவரத்னா – பொதுத்துறை நிறுவனமான நெய்வேலிப் பழுப்பு நிலக்கரிநிறுவனத்தால் நடத்தப்படும் புத்தகக்கண்காட்சிக் குழுவினரால் வழங்கப்படும் சிறந்த நூலாசிரியருக்கான விருது – ‘பிரபஞ்சமும் தாவரங்களும்’ – நூலுக்காக (ஜூலை, 2011); 2011 முதல் ஆண்டுதோறும் ஒவ்வொரு புத்தகக்கண்காட்சியிலும் இவருடைய நூலை வெளியிட்டுப் பெருமைப்படுத்தி வருதல்.
à  ஆரோவில் வாழ்நாள் சாதனையாளர் விருது (ஜூன், 2016)
தென்னிந்திய மரம் வளர்ப்போர் சங்கமும், புதுவை ஆரோவில்லும் இணைந்து கேரள மாநிலம், வயநாட்டில் நடத்திய விழாவில் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது’(ஜூன், 2016)
    III.          ஒளிப்படங்களும் இதழ்ச்செய்திகளும்
à  ஒளிப்படங்கள் (சில மட்டும்)
à  EID Parry மூலமாக வருகைதந்து, ஆய்வுசெய்து, பண்ருட்டி நகர்மன்ற மின்னாளுகையைப் பாராட்டிய அமெரிக்கப் பல்கலைக்கழக ஆய்வுக்குழுவினருடன் பண்ருட்டி இரா. பஞ்சவர்ணம் மற்றும் EID நிர்வாகிகள் à  பண்ருட்டி இரா. பஞ்சவர்ணம் அவர்களின் நேர்மை, நிர்வாகத் திறமை, மின்னாளுகை போன்றவற்றை மாண்பமை A.P.J.அப்துல்கலாம் பாராட்டியபோது,

à  குறுஞ்செய்தி (SMS) மூலம் மக்களுக்குத் தகவலளிக்கும் சேவைத் தொடக்கவிழாவின்போது மாவட்ட ஆட்சியர் திரு ககன்தீப் சிங்பேடி அவர்களுடன்

à  பண்ருட்டி நகர்மன்ற நிர்வாகச் சீரமைப்பைப் பாராட்டும் மாஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் திரு சரத் ஜோஷி அவர்களுடன் EID Parry Chairman திரு எம்.வி. சுப்பையா.
à   à  உலக வங்கி (IFA) ஆலோசகர் திரு ஹாரி பாஸ்டுஸ்செக் அவர்கள் பண்ருட்டி நகர்மன்றத்திற்கு வருகைதந்து, பார்வையிட்டுப் பாராட்டியபோது.à  இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தலைமை ஆலோசகர் திரு தரூண்தாஸ் அவர்கள் நகராட்சியைப் பார்வையிட்டுப் பாராட்டியபோது.à  உத்திரப்பிரதேச மாநில மூன்றாவது நிதிக்குழுத்தலைவர் திரு அப்துல் ரிஸ்வா (இ.ஆ.ப.) வருகைதந்து பாராட்டியபோது.


à  ஆரக்கிள் – மைய மேலாளர் திரு ரமேஷ் கைலாசம் அவர்கள் பார்வையிட்டுப் பாராட்டியபோது.


பண்ருட்டி நகர்மன்ற அலுவலகத்திற்கு நேரில் வருகைதந்து, மின்னாளுகையைக் கண்டு வியந்து பாராட்டிய சான்றோர் பெருமக்களுள் சிலர்.
திருவாளர்கள்
திரு கி. தனவேல் IAS
திருமதி நீதியரசர் விமலா வேல்முருகன்
திரு ஹேமன்ந் குமார் சின்ஹா IAS
திரு அம்புஸ் ஷர்மா IAS
திருமதி கரியாலி IAS
திருமதி ஜெயஸ்ரீ ரகுநந்தன் IAS
திருமதி சாந்தா நிர்மலா IAS
திரு ஸ்ரீதரன் IAS
திரு ஸ்ரீபதிIAS
திரு வேங்கடசுப்பிரமணியன் IAS
திரு சம்பத் IAS
விருதுகள்

2)     இதழ்ச்செய்திகள் (சில மட்டும்)
à  தினமலர் (23 – 12 - 2001)
பண்ருட்டிப் பின்பற்றுங்கள்
à  The Hindu 06 – 05 – 2002  - Reporter’s Diary
à  பாக்யா (மார்ச் 28 – ஏப்ரல் 3, 2003)
மூலிகைகளைக் காத்துவரும் முன்மாதிரி நகராட்சி

à  கட்டுமானத்தொழில் (மார்ச், 2005)
மின்னணு நிர்வாகத்தில் பண்ருட்டி நகராட்சி
à  ஜூனியர் விகடன் (08-01-2006)
ஹைடெக் பண்ருட்டி ..... அசத்தும் சேர்மன்!’
à  வளசை மக்கள் மன்றம் (2006)
பஞ்சவர்ணம் திருவிழாவுக்கு வாங்க!’
à  City manager (Jan – march, 2006)
‘Citizen Centered  Governance’
à  ஆனந்த விகடன் (21-05-2006)
இந்த வார விருந்தினர் பஞ்சவர்ணம்’- நிர்வாகம்

à  பவ்டாவின் சங்கமம்’(ஜூலை – ஆகஸ்ட் 2006)
ஒரு கம்ப்யூட்டர் காமராஜர்
à  Economic Times (December 2002)
“A model municipality leads with its planning concepts”


à  தமிழ் இந்து (17-01-2015)
à  குங்குமம் (13-06-2016)
தாவரங்களின் என்சைக்ளோபீடியா

à  
அக்ரி பிஸ்னஸ் (செப்டம்பர் - 2016)
தாவரப் பேரகராதி


à  நெஞ்சமெல்லாம் தாவரமே (27-07-2016)


à  வாழ்நாள் சாதனையாளர் விருது(ஜூன் 03 to 04 2016)

à  மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா (13-10-2016)


அமெரிக்காவிலுள்ள உலகத் தமிழ் பல்கலைக்கழகம்
(International Tamil University USA)
     13-10-2016 அன்று இரா.பஞ்சவர்ணம் அவர்களுக்கு 
    மதிப்புறு முனைவர் பட்டம்(D.Litt) வழங்கியது.
வேந்தர் டாக்டர் S. செல்வின்குமார் M.A., Ph.D.,  
நிறுவனர்,உலகத் தமிழ் பல்கலைக்கழகம் அவர்கள் வழங்கினார். 
உயர்த்திரு V.M. சேவியர் கிரிஷோ நாயகம் IAS ஆணையர் சமுகநலத்துறை  (ஓய்வு).அவர்கள் உடன் இருந்தார்.à  உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தன்வந்திரி விருது (11-02-2018)

11-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று உலக தமிழாராய்ச்சி நிறுவன பழந்தமிழர் வாழ்வியல் ஆய்விருக்கை தொடக்க விழாவில்இரா.பஞ்சவர்ணம்அவர்களுக்கு தன்வந்திரி விருது வழங்கப்பட்டது.
ஆய்விருக்கை பொருப்பாளர் மருத்துவர் சி.ஜெயந்திரன் அவர்கள்,
இந்திய ஆயுஷ் டைரெக்டர் ஜெனரல்பேராசிரியர் டாக்டர் ஆர்.எஸ்.இராமசுவாமி அவர்கள்,
அண்ணா பல்களைக் கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் ஏ.கலாநிதி அவர்கள்
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு நீதியரசர் துரைசாமி ராஜு அவர்கள்,
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் பேரா. முனைவர் கோ. விசயராகவன் அவர்கள்
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன திருமூலர் ஆய்விருக்கை நிறுவனர்
பேராசிரியர் முனைவர்  தி. மகாலட்சுமி அவர்களுடன்
தன்வந்திரி விருது பெரும் இரா. பஞ்சவர்ணம்.


    IV.          தன் விவரக்குறிப்பு (Personal details)
பெயர்               : டாக்டர் இரா. பஞ்சவர்ணம்D.Litt.,
பிறந்த தேதி         : 04-07-1949
குடிமை              :   இந்தியன்
வகித்த பொருப்புகள் : நிறுவனத் தலைவர்,
           நெல்லிக்குப்பம் கரும்பு விவசாயிகள் நிவாரணக்
           குழு 1984-2006

                       நகர்மன்றத்தலைவர்,
                       பண்ருட்டி நகராட்சி,1996-2006

                       உறுப்பினர்,
                       திட்டக்குழு
                       குடிநீர் – வடிகால் வாரியம், தமிழக அரசு, 2006

                       உறுப்பினர்,
                       பாடத்திட்டக்குழு, மேலாண்மையியல் துறை,
                       பாரதியார் பல்கலைக்கழகம், கோவை, 2008
தொடர்புக்கு ...:
இணையதளம்    :                        http://panrutipanchavarnam.blogspot.in                                                               


மின்னஞ்சல்                :              panchavarnam.r@gmail.com

தொலைபேசி              :              04142 – 243123; +91 98423 34123

முகவரி                          :      பண்ருட்டி இரா. பஞ்சவர்ணம்,
                        21, காமராஜர் தெரு, பண்ருட்டி – 607 106

                        கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.


No comments:

Post a Comment