காந்தள்,தோன்றி,கோடல்இம் மூன்றும் ஒன்றா?
காந்தள்,
தோன்றி,
கோடல் .
இவைகளில் காந்தள் மற்றும் தோன்றி இரண்டும் ஒரே தாவரம் எனவும் தற்போது காண முடியாத காந்தள் மலர் போன்ற தோற்றத்தில் வெண்மையாக தோன்றும் கோடல் என்பது வெண்காந்தள் எனவும் மூன்றும் காந்தளைக் குறிக்கும் (Gloriosa superba ) தாவரம் எனவும் அடையாளம் காட்டி வருகின்றனர். உண்மையில் இம்மூன்றும் ஒரே தாவரமல்ல; அவைகள் வெவ்வேறு தாவரங்கள் என்பதை உணரப்படவே இக்கட்டுரை.
1. காந்தள்
செங்காந்தள் அல்லது காந்தள் ஜிம்பாவ்வே நாட்டின் தேசிய மலராகும். தமிழ்நாட்டின் அரசு மலராகவும் இது ஏற்கப்பட்டுள்ளது.
1. கண்களைப் பறிக்கும் பிரகாசமான வண்ணங்களை இக்கொடியின் மலர்கள் பெற்றிருப்பதால் இத்தாவரத்தை ‘கண்வலிப்பூ’ என அழைக்கின்றனர்.
2. மேலும் இக்கொடியின் வேர்ப் பாகம் கலப்பையைப் போன்றிருப்பதால் இதை ‘கலப்பைக் கிழங்கு’ எனவும் அழைக்கின்றனர்..
3. இத்தாவரத்தின் கிழங்கினை கார்த்திகை மாதங்களில் தோன்டி எடுப்பதால் இதனை ‘கார்த்திகைக் கிழங்கு’ எனவும் அழைப்பார்கள்.
இலக்கியத்தில் காந்தளை அடையாளம் காட்ட கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது :
Ø வளை உடைந்தன்ன வள் இதழ்க் காந்தள்
Ø தீயின் அன்ன ஒண் செங் காந்தள்
Ø செழுங் குலைக் காந்தள் கை விரல் பூப்பவும்
Ø பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள்
Ø கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள்
Ø உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்
சங்க இலக்கிய ஆசிரியர்கள் காந்தள் தாவரத்தை அடைமொழியுடன் இருசொல் பெயரில் பதிவு செய்துள்ள பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
ஒண்செங் காந்தள் கபிலர்
போது அவிழ் காந்தள் மருதனார்.
அலங்குகுலைக் காந்தள் தங்காற் பொற் கொல்லனார்
சினைஒண் காந்தள் மதுரைக் கணக்காயனார்
நாறுகுலைக் காந்தள் கபிலர்
சுடர்ப்பூங் காந்தள் நக்கீரர்
கமழ்பூங் காந்தள் கபிலர்
நறவுகுலை காந்தள் கபிலர்.
முகைஅவிழ்ந்த காந்தள் கம்பூர் கிழான்
வள்இதழ்க் காந்தள் பெருங்கௌசிகனார்
தண்நறுங் காந்தள் பரணர்
சங்க இலக்கியங்களில் காந்தள் பெயர் உள்ள பாடல் அடிகள்
பத்துப்பாட்டு
குறிஞ்சிப் பாட்டு
Ø ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம் - 62
Ø விண் பொரும் சென்னிக் கிளைஇய காந்தள் - 196
பட்டினப்பாலை
Ø காந்தள் அம் துடுப்பின் கவிகுலை அன்ன - 153
மலைபடுகடாம்
Ø தீயின் அன்ன ஒண் செங் காந்தள் - 145
Ø காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஒச்சி - 336
Ø வளை உடைந்தன்ன வள் இதழ்க் காந்தள் – 519
பெரும்பாணாற்றுப்படை
Ø நாடு பல கழிந்த பின்றை நீடுகுலைக்
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்குப் - 371,371
திருமுருகாற்றுப்படை
Ø சுரும்பும் மூசாச் சுடர்பூங் காந்தட் – 143
சிறுபாணாற்றுப்படை
Ø செழுங் குலைக் காந்தள் கை விரல் பூப்பவும் – 167
பொருநராற்றுப்படை
Ø நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல் - 33
Ø கொழுங் காந்தள் மலர் நாகத்து - 209
எட்டுத்தொகை
அகநானூறு
Ø நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தள் -4-15
Ø பழம் தூங்கு நளிப்பின் காந்தள்அம் பொதும்பில் -18-15
Ø முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள் -78-8
Ø ஒண் செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண் -92-9
Ø வேங்கை விரிஇணர் ஊதி காந்தள் -132:11
Ø பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள் - 108:15
Ø திருமணி உமிழ்ந்த நாகம் காந்தட் -138-17
Ø கடவுட் காந்தளுள்ளும், பலஉடன் -152-17
Ø போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள் -238-17
Ø காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது -312-5
Ø சினையொண் காந்தள் நாறும் நறு நுதல்- 338:7
Ø உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலைக் - 368:8
ஐங்குறுநூறு
Ø நறுந்தண் சிலம்பின் நாறுகுலைக் காந்தள் - 226:2
Ø நறும்புகை சூழ்ந்து காந்தள் நாறும் -25:2
Ø மலர்ந்த காந்தள் நாறிக் -259:5
Ø சிலம்பு கமழ் காந்தள் நறுங்குலை அன்ன - 293:1
கலித்தொகை
Ø காந்தள் கடி கமழும், கண் வாங்கு, இருஞ் சிலம்பின் -39(3):15
Ø எடுத்த நறவின் குலை அலங்காந்தள் - 40(4):11
Ø தகையவர் கைச் செறித்த தாள்போல் காந்தள் - 43(7):8
Ø கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை- 45(9):2
Ø உயர் முகை நறுங் காந்தள் நாள்தோறும் புதிது ஈன - 53(17):5
Ø அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் - 59(23):3
குறுந்தொகை
Ø குருதிப் பூவின் குலைக் காந்தட்டே - 1.-4
Ø காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச் - 76-1
Ø வேங்கையும் காந்தளும் நாறி - 84-4
Ø காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தெனக் - 100-3
Ø முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் - 167:1
Ø கொண்டலின் தொலைந்த ஒண் செங் காந்தள் - 185:6
Ø சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள் - 239:3
Ø அருவி ஆர்ந்த தண் நறுங் காந்தள் - 259:2
Ø காந்தள்அம் கொழு முகை, காவல்செல்லாது - 265:1
Ø ஒண் செங் காந்தள் அவிழும் நாடன் - 284:3
Ø காலை வந்த முழுமுதற் காந்தள் - 361:4
Ø காந்தள் அம் சிறுகுடிக் கமழும் - 373:7
நற்றிணை
Ø மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல் - 14:7
Ø காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி - 17:10
Ø நின்ற வேனில் உலந்த காந்தள் - 29:1
Ø பறியாக் குவளை மலரொடு காந்தள் 34-2
Ø காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும் - 85:10
Ø காந்தள் வள் இதழ் கவிகுளம்பு அறுப்ப - 161-7
Ø மலைச் செங் காந்தட் கண்ணி தந்தும் - 173:2
Ø போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள் - 176:6
Ø அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து - 185:8
Ø மெல் விரல் மோசை போல, காந்தள் - 188 -4
Ø செம் புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள் - 294:7
Ø யாங்கு ஆகுவம்கொல்?-தோழி!-காந்தள்
கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல் - 313:6,7
Ø முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட்
குலைவாய் தோயும் கொழு மடல் வாழை - 355:2,3
Ø அலங்கு குலைக் காந்தள் தீண்டி, தாது உக - 359:2
Ø காந்தள்அம் கொழு முகை போன்றன சிவந்தே - 379:13
Ø குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தன் - 399:2
பதிற்றுப்பத்து
Ø சிவந்த காந்தள் முதல்சிதை மூதில் - 15:11
Ø அலங்கிய காந்தள் இலங்குநீரழுவத்து - 21:36
Ø காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர் - 30:9
Ø மலர்ந்த காந்தள் மாறாதூதிய - 67:19
Ø காந்தளங்கண்ணிச் செழுங்குடிச் செல்வர் - 81:22
பரிபாடல்
Ø மன்றல மலர மலர் காந்தள் வாய் நாற - 8:26
Ø சினை வளர் வேங்கை கணவிரி காந்தள் - 11:20
Ø நீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள் - 14:13
Ø போர் தோற்றுக் கட்டுண்டார் கை போல்வ--கார் தோற்றும்
காந்தள் செறிந்த -18:34-35
Ø கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள் - 19:76
புறநானுறு
Ø உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள் - 90:1
Ø யாம்தன் தொழுதனம் வினவக் காந்தள் - 144:8
Ø கறிவளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் - 168:2
எனக்கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட ‘காந்தள்’ Gloriosa supreba என்னும் தாவரவியல் பெயரைக் கொண்டதாக மிகச் சரியாகக் கண்டறியப் பட்டுள்ளது.
Gloriosa supreba
காந்தள் மலர்
தாவர விளக்கம்
ஆங்கிலத்தில்
|
தமிழில்
| ||
Classification
|
Name
|
வகைபாடு
|
தாவரத் தகவல் மையப் பெயர்
|
Kingdom
|
PLANTAE
|
உலகம்
|
தாவரம்
|
Phyllum
|
ANGIOSPERM
|
இனம்
|
பூக்கும் தாவரம்
|
Order
|
LILIALES
|
தலைக் கட்டு
|
ஈரடுக்கு இதழ்வட்ட மூன்றங்க கீழ்ச்சூலக மலர்த் தாவரம்
|
Family
|
COLCHICACEAE DC. Old Family - LILIACEAE
|
குடி
|
காந்தள் குடி
|
Genus
|
Gloriosa Linn.
Old Genus - Clinostylis, Eugone, Methonica
|
பிறவி
|
காந்தள்
|
Species epithet
|
superba L.
|
பெயர் வழி
|
ஒண்செங்
|
Botanical Name
|
Gloriosa superba L.
|
தாவரவியல் பெயர்
|
ஒண்செங் காந்தள். கபிலர்
|
Synonym
|
Clinostylis speciosa Hochst.
Eugone superb (L.)Salisb.
Methonica gloriosa Salisb
|
வேறு பெயர்கள்
| |
Habit
|
Climber
|
வளரியல்பு
|
கொடி
|
2. தோன்றி
தோன்றிக்கு இலக்கிய தாவர அடைமொழிகள் பின் வருமாறு:
Ø வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு
Ø அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி,
Ø தோன்றி தோன்றுபுதல் விளக்கு உறாஅ
Ø தாய தோன்றி தீயென மலரா
இலக்கியத்தில் தோன்றியை அடையாளம் காட்ட கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது :
சுடர்ப்பூந் தோன்றி கபிலர்
சுடர் புரை தோன்றி பெருங்கண்ணனார்
வண்ண வண் தோன்றி சோழன் நல்லுருத்திரன்
தோடு ஆர் தோன்றி நப்பூதனார்
ஊழுறு தோன்றி கழார்க் கீரன் எயிற்றியார்
எரி மருள் தோன்றி கபிலர்
ஆய்இதழ்த் தோன்றி கழார்க் கீரனெயிற்றியனார்
குவி இணர்த் தோன்றி மதுரைக் கண்ணனார்
ஒண் பூந் தோன்றி இடைக்காடனார்
ஒண்சுடர்த் தோன்றி பேயனார்
மென் தகைத் தோன்றி கேசவனார்
பல் வயின் தோன்றி சேகம் பூதனார்
உருவம் மிகு தோன்றி நப்பண்ணனார்
சங்க இலக்கியங்களின் தோன்றி பெயர் உள்ள பாடல் அடிகள்
பத்துப்பாட்டு
குறிஞ்சிப் பாட்டு
Ø தும்பை, துழாஅய், சுடர்ப்பூந் தோன்றி - 90
முல்லைப்பாட்டு
Ø தோடு ஆர் தோன்றி குருதி பூப்பக் - 96
பெரும்பாணாற்றுப்படை
Ø தாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றிச் - 404
பொருநராற்றுப்படை
Ø அவிழ் தளவின் அகன் தோன்றி - 199
எட்டுத்தொகை
அகநானூறு
Ø அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி, - 11:5
Ø தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ - 94:5
Ø நறுவீ முல்லையொடு தோன்றி தோன்ற - 164:6
Ø ஊழுறு தோன்றி ஒண்பூத் தளைவிட, - 217:10
Ø வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு - 218:20
Ø வாடையொடு நிவந்த ஆய்இதழ்த் தோன்றி - 235:7
Ø சுடர் புரை தோன்றிப் புதல் தலைக் கொளாஅ - 364:6
ஐங்குறுநூறு
Ø தேம்படு காயா மலர்ந்த; தோன்றியொடு - 420:2
Ø ஒண்சுடர்த் தோன்றியும் தளவமும் உடைத்தே! - 440:3
கலித்தொகை
Ø வண்ண வண் தோன்றியும், வயங்கு இணர்க் கொன்றையும் -102 (2)3
குறுந்தொகை
Ø குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன- 107:1
நற்றினை
Ø முல்லை முகை வாய் திறப்ப, பல் வயின்
தோன்றி தோன்றுபுதல் விளக்கு உறாஅ - 69:5-6
Ø ஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய, - 221:2
பரிபாடல்
Ø தாய தோன்றி தீயென மலரா - 11:21
Ø விடு கொடிப் பிறந்த மென் தகைத் தோன்றிப் - 14:15
Ø உருவம் மிகு தோன்றி ஊழ் இணர் நறவம் - 19:78
இந்த தோன்றியை, மேற்கண்ட காந்தளோடு சேர்த்து இரண்டும் ஒன்றென்று கொண்டனர் உரையாசிரியர்களும், திறனாய்வாளர்களும், ஆயின் இரண்டும் ஒன்றன்று. காந்தள் பூ இதழ்கள் உடைந்த கை வளையள் போன்றும் மேலும் நுனியில் சிவப்பும் அடியில் மஞ்சளுமாக இருநிறம் பெற்றுத் திகழும். தோன்றிப் பூ ஒரே நிறத்துடன் முழுவதும் சிவப்பாக விளக்குச் சுடர் போல் தோன்றும். முன்னது காந்தள் (Gloriosa superba); பின்னது தோன்றி (Firmiana colorata). எனவே இரண்டும் வெவ்வேறானவை என்பதில் எட்டுணையும் ஐயமில்லை. இரண்டும் தாவரவியல் அடிப்படையில் வெவ்வேறு குடும்பங்களைச் சார்ந்தவை என்பதும் அறியப்பட வேண்டுவதாம்.
Firmiana colorata
தோன்றி மலர்
தாவர விளக்கம்
ஆங்கிலம்
|
தமிழ்
| ||
Classification
|
Name
|
வகைபாடு
|
தாவரத் தகவல் மையப் பெயர்
|
Kingdom
|
PLANTAE
|
உலகம்
|
தாவரம்
|
Phyllum
|
ANGIOSPERM
|
இனம்
|
பூக்கும் தாவரம்
|
Division
|
DICOTYLEDONAE
|
தலை முறை
|
இரு வித்திலை
|
Class
|
POLYPETALAE
|
வகுப்பு
|
இணையா இதழ்த் தாவரம்
|
Sub Class
|
THALAMIFLORAE
|
குலம்
|
மேடைபூவை
|
Order
|
MALVALES
|
தலைக் கட்டு
|
4-6 இதழ்களைக் கொண்ட கணக்கற்ற மகரந்தங்களை உடைய அச்சு சூலம் ஒட்டிய விதைகளை கொண்டத் தாவரம்
|
Family
|
STERCULIACEAE Vent.
|
குடி
|
காவளங்குடி
|
Genus
|
Firmiana Mars. Old Genus - Erythropsis, Karaka, Sterculia
|
பிறவி
|
தோன்றி
|
Species epithet
|
colorata (Roxb.) R.Br.
|
பெயர் வழி
|
சுடற்பூ
|
Botanical Name
|
Firmiana colorata (Roxb.) R.Br.
|
தாவரவியல் பெயர்
|
சுடற்பூந் தோன்றி. கபிலர்
|
Synonym
|
Firmiana rubriflora Kosterm.
Karaka colorata (Roxb.) Raf.
Sterculia colorata Roxb.
| ||
Habit
|
Tree
|
வளரியல்பு
|
மரம்
|
3. கோடல்
கோடலுக்கு இலக்கிய தாவர அடைமொழியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
கோடு (சிப்பி)உடைந்தன்ன கோடல் என்று கந்தரத்தனாரும்
வரிவெண் கோடல் என்று இளங்கண்ணனாரும் அகநானூறில் கூறிஉள்ளனர்
வெஞ்சின அரவின் பைஅணந் தன்ன தண்கமழ் கோடல். என்றும் அகநானூறில் கூறப்பட்டுள்ளது
அரவு உடன்ற வைபோல் விரிந்த குவை என்று பரிபாடலில் கூறப்பட்டுள்ளது.
இலக்கியத்தில் கோடல் அடையாளம் காட்ட கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது :
கோடுஉடைந்தன்ன கோடல் கந்தரத்தனார்
தண்கமழ்க் கோடல் புல்லாளங் கண்ணியார்
புணர் கோடல் கண்ணங்கூத்தனார்
வரிவெண் கோடல் இளங்கண்ணனார்
கொலைவேல் கோடல் இளவெயினி
குவிமுகை கோடல் நப்பூதனார்
ஞெகிழ் இதழ்க் கோடல் நல்லுருத்திரன்
அலங்கு இதழ் கோடல் பெருங்கடுங்கோ
ஊழ்உறு கோடல் கபிலர்
கொழுங் குரல் கோடல் பெருங் கௌசிகனார்
சங்க இலக்கியங்களின் கோடல் பெயர் உள்ள பாடல் அடிகள்
பத்துப்பாட்டு
குறிஞ்சிப் பாட்டு
Ø கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை -.83
முல்லைப்பாட்டு
Ø கோடல் குவி முகை அங்கை அவிழத் - 95
எட்டுத்தொகை
அகநானூறு
Ø கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர் - 23:6
Ø வெஞ்சின அரவின் பை அணந்தன்ன -154:6
Ø தண்கமழ் கோடல் தாது பிணிஅவிழ - 154:7
Ø வரிவெண் கோடல் வாங்குகுலை வான்பூப் - 264:3
ஐங்குறுநூறு
Ø வரையாம் இழியக் கோடல் நீடக் - 223:2
கலித்தொகை
Ø இவட்கே, அலங்கு இதழ்க் கோடல் வீ உகுபவை போல் - 7:15
Ø ஊழ் உறு கோடல் போல, எல் வளை உகுபவால் - 48(12):11
Ø ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ்க் கோடலும் - 101. (1):4
Ø குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும் - 103. (3):3
Ø கமழ் கண் தாது உதிர்ந்து உக, ஊழ் உற்ற கோடல் வீ - 121. (4):3
குறுந்தொகை
Ø கோடல் எதிர் முகைப் பசு வீ முல்லை - 62:1
நற்றிணை
Ø கொழுங் குரல் கோடல் கண்ணி செழும் பல - 44:7
Ø பிடவமும், கொன்றையும், கோடலும் - 99:9
புறநானுறு
Ø கோடல் கண்ணிக் குறவர் பெருமகன் - 157:7
பரிபாடல்
Ø அரவு உடன்ற வைபோல் விரிந்த குவை
குடை விரிந்தவை போலக்கோலும் மலர் - 20:99,100
இந்தக் ‘கோடல்’ மலரை மேலே குறித்த ‘காந்தள்’ மற்றும் ‘தோன்றியோடு’ சேர்த்து மூன்றையும் ஒன்றென்று கொண்டனர் உரையாசிரியர்களும், ஆய்வாளர்களும். ஆனால் கோடல் முற்றிலும் வேறானது என்றுரைப்பதற்கு ஏராளமான தாவரவியில் விளக்கங்கள் உள்ளன.
‘காந்தள்’ மலர் இதழ்களின் நுனியில் சிவப்பும் அடியில் மஞ்சளுமாக இரு நிறமாகக் காட்சிதரும்.
‘தோன்றி’ ஒரே நிறமாக சிவப்பாக காட்சிதரும்;
கோடல் மலர்களோ வெள்ளையாக தலைப்புறத்தில் பசுங் கோட்டுடன் காட்சிதரும்.
‘காந்தளானது’ தீ கொழுந்து விட்டு மேலெழுந்து எரிவது போல் தோன்றும்.
‘தோன்றியோ’ விளக்கில் சுடர் எரிவதுபோல் தோன்றும்.
‘கோடலோ’ வெண்மையான சிப்பி உடைந்தது (பிளந்தது) போன்றும்,
சினம் கொண்ட பாம்பு படம் எடுத்திருப்பது போன்று மேல்நோக்கி வளைவாக உள்வாங்கித் தோன்றுவதாகவும் கூறப்படுகின்றது. ஆகையால் காந்தளோடு தோன்றியையோ, கோடலையோ’ ஒப்பிடுவது பொருத்த மற்றதாகும்.
Ceropegia elegans
கோடல் மலர்
தாவரவிளக்கம்
ஆங்கிலத்தில்
|
தமிழில்
| ||
Classification
|
Name
|
வகைபாடு
|
தாவரத் தகவல் மையப் பெயர்
|
Kingdom
|
PLANTAE
|
உலகம்
|
தாவரம்
|
Family
|
ASCLEPIADACEAE R.Br.
|
குடி
|
எருக்கு குடி
|
Genus
|
Ceropegia Linn.
|
பிறவி
| |
Species epithet
|
elegans Wall.
|
பெயர் வழி
|
பெருங்கொடி
|
Botanical Name
|
Ceropegia elegans Wall.
|
தாவரவியல் பெயர்
|
வரிவெண் கோடல். இளங்கண்ணனார்
|
Synonym
|
Ceropegia elegans (Wight) Trimen var. walkerae
Ceropegia gardneri Hook.
Ceropegia walkerae Wight
|
வேறு பெயர்கள்
| |
Habit
|
Climber
|
வளரியல்பு
|
கொடி
|
இலக்கியங்களில் ‘காந்தள்’ ஒண்செங் காந்தள் என்றும், ‘தோன்றி’ சுடர்பூந் தோன்றி என்றும், ‘கோடல்’ வரிவெண் கோடல் என்றும்
இயல் பெயர்களைப் பெற்றுள்ளதால் இவைகள் வெவ்வேறு குடும்பங்களைச் சார்ந்த வெவ்வேறு தாவரங்கள் ஆகும். எனவே இம்மூன்றும் ஒன்றென்று இதுகாறும் அடையாளம் காணப்பட்டது தவறென்றும். அவைகள் வெவ்வேறானவையே என்பதையும் சந்தேகத்திற்கு இடமின்றி இதன் மூலம் அறிந்து கொண்டு தெளிவடைய வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
மேனால் தலைவர், பண்ருட்டி நகராட்சி,
No comments:
Post a Comment