சங்க இலக்கியத் தாவரங்கள்
3.தோன்றி
காந்தள், கோடல், தோன்றி
மலர்கள் மூன்றையும் உரையாசிரியர்களும், ஆய்வாளர்களும் ஒன்றென்று கொண்டனர். ஆனால் தோன்றி முற்றிலும் வேறானது என்றுரைப்பதற்கு
ஏராளமான சங்க இலக்கிய தாவரவியல் விளக்கங்கள் உள்ளன.
‘காந்தள்’
மலர் இதழ்களின் நுனியில் சிவப்பும்
அடியில் மஞ்சளுமாக இரு நிறமாகக் காட்சிதரும்.
‘தோன்றி’
ஒரே நிறமாக சிவப்பாக காட்சிதரும்;
‘கோடல்’ மலர்களோ வெள்ளையாக தலைப்புறத்தில் பசுங்
கோட்டுடன் காட்சிதரும்.
‘காந்தளானது’
தீ கொழுந்து விட்டு மேலெழுந்து எரிவது
போல் தோன்றும்.
தோன்றியோ
விளக்கில் சுடர் எரிவது போல் தோன்றும்.
கோடலோ வெண்மையான
சிப்பி உடைந்தது (பிளந்தது) போன்றும், சினம் கொண்ட
பாம்பு படம் எடுத்திருப்பது போன்று மேல்நோக்கி வளைவாக உள்வாங்கித் தோன்றுவதாகவும்
கூறப்படுகின்றது.
ஆகையால்
தோன்றியோடு காந்தளையோ, கோடலையோ’
ஒப்பிடுவது பொருத்த மற்றதாகும்.
தோன்றிக்கு இலக்கிய தாவர அடைமொழிகள் பின் வருமாறு:
Ø வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு
Ø அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி,
Ø தோன்றி தோன்றுபுதல் விளக்கு உறாஅ
Ø தாய தோன்றி தீயென மலரா
இலக்கியத்தில் தோன்றியை அடையாளம் காட்ட கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது :
சுடர்ப்பூந் தோன்றி கபிலர்
சுடர் புரை தோன்றி பெருங்கண்ணனார்
வண்ண வண் தோன்றி சோழன் நல்லுருத்திரன்
தோடு ஆர் தோன்றி நப்பூதனார்
ஊழுறு தோன்றி கழார்க் கீரன் எயிற்றியார்
எரி மருள் தோன்றி கபிலர்
ஆய்இதழ்த் தோன்றி கழார்க் கீரனெயிற்றியனார்
குவி இணர்த் தோன்றி மதுரைக் கண்ணனார்
ஒண் பூந் தோன்றி இடைக்காடனார்
ஒண்சுடர்த் தோன்றி பேயனார்
மென் தகைத் தோன்றி கேசவனார்
பல் வயின் தோன்றி சேகம் பூதனார்
உருவம் மிகு தோன்றி நப்பண்ணனார்
சங்க இலக்கியங்களின் தோன்றி பெயர் உள்ள பாடல் அடிகள்
பத்துப்பாட்டு
குறிஞ்சிப் பாட்டு
Ø தும்பை, துழாஅய், சுடர்ப்பூந் தோன்றி - 90
முல்லைப்பாட்டு
Ø தோடு ஆர் தோன்றி குருதி பூப்பக் - 96
பெரும்பாணாற்றுப்படை
Ø தாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றிச் - 404
பொருநராற்றுப்படை
Ø அவிழ் தளவின் அகன் தோன்றி - 199
எட்டுத்தொகை
அகநானூறு
Ø அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி, - 11:5
Ø தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ - 94:5
Ø நறுவீ முல்லையொடு தோன்றி தோன்ற - 164:6
Ø ஊழுறு தோன்றி ஒண்பூத் தளைவிட, - 217:10
Ø வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு - 218:20
Ø வாடையொடு நிவந்த ஆய்இதழ்த் தோன்றி - 235:7
Ø சுடர் புரை தோன்றிப் புதல் தலைக் கொளாஅ - 364:6
ஐங்குறுநூறு
Ø தேம்படு காயா மலர்ந்த; தோன்றியொடு - 420:2
Ø ஒண்சுடர்த் தோன்றியும் தளவமும் உடைத்தே! - 440:3
கலித்தொகை
Ø வண்ண வண் தோன்றியும், வயங்கு இணர்க் கொன்றையும் -102 (2)3
குறுந்தொகை
Ø குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன- 107:1
நற்றினை
Ø முல்லை முகை வாய் திறப்ப, பல் வயின்
தோன்றி தோன்றுபுதல் விளக்கு உறாஅ - 69:5-6
Ø ஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய, - 221:2
பரிபாடல்
Ø தாய தோன்றி தீயென மலரா - 11:21
Ø விடு கொடிப் பிறந்த மென் தகைத் தோன்றிப் - 14:15
Ø உருவம் மிகு தோன்றி ஊழ் இணர் நறவம் - 19:78
இந்த தோன்றியை, மேற்கண்ட காந்தளோடு சேர்த்து இரண்டும் ஒன்றென்று உரையாசிரியர்களும்,
திறனாய்வாளர்களும்,கொண்டனர் ஆயின் இரண்டும்
ஒன்றன்று.
காந்தள் பூ இதழ்கள் கைப்போன்று
குவிந்தும் உடைந்த கை வளையல் போன்றும் மேலும் நுனியில் சிவப்பும் அடியில்
மஞ்சளுமாக இருநிறம் பெற்றுத் திகழும்.
தோன்றிப் பூ ஒரே நிறத்துடன் முழுவதும்
சிவப்பாக விளக்குச் சுடர் போல் என்றும். குருதி போன்ற நிறத்தில் இருக்கும் என்றும்
கூறப்படுகின்றது. ஆகையால்
காந்தள் (Gloriosa superba); தோன்றி (Firmiana colorata). எனவே
இரண்டும் வெவ்வேறானவை என்பதில் எத்துணையும் ஐயமில்லை. இரண்டும் தாவரவியல் அடிப்படையில் வெவ்வேறு குடும்பங்களைச் சார்ந்தவை என்பதும்
அறியப்பட வேண்டுவதாம்.
தோன்றி மலர்
Firmiana colorata
தாவர விளக்கம்
ஆங்கிலம்
|
தமிழ்
| ||
Classification
|
Name
|
வகைபாடு
|
தாவரத் தகவல் மையப் பெயர்
|
Kingdom
|
PLANTAE
|
உலகம்
|
தாவரம்
|
Phyllum
|
ANGIOSPERM
|
இனம்
|
பூக்கும் தாவரம்
|
Division
|
DICOTYLEDONAE
|
தலை முறை
|
இரு வித்திலை
|
Class
|
POLYPETALAE
|
வகுப்பு
|
இணையா இதழ்த் தாவரம்
|
Sub Class
|
THALAMIFLORAE
|
குலம்
|
மேடைபூவை
|
Order
|
MALVALES
|
தலைக் கட்டு
|
4-6 இதழ்களைக் கொண்ட கணக்கற்ற மகரந்தங்களை உடைய அச்சு சூலம் ஒட்டிய விதைகளை கொண்டத் தாவரம்
|
Family
|
STERCULIACEAE Vent.
|
குடி
|
காவளங்குடி
|
Genus
|
Firmiana Mars.
Old Genus - Erythropsis, Karaka, Sterculia |
பிறவி
|
தோன்றி
|
Species epithet
|
colorata (Roxb.) R.Br.
|
பெயர் வழி
|
சுடற்பூ
|
Botanical Name
|
Firmiana colorata (Roxb.) R.Br.
|
தாவரவியல் பெயர்
|
சுடற்பூந் தோன்றி. கபிலர்
|
Synonym
|
Firmiana rubriflora Kosterm.
Karaka colorata (Roxb.) Raf.
Sterculia colorata Roxb.
| ||
Habit
|
Tree
|
வளரியல்பு
|
மரம்
|
No comments:
Post a Comment