செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

Saturday 20 April 2013

4.கோடல்-Kodal



சங்க இலக்கியத் தாவரங்கள்
4.கோடல்

 காந்தள்,கோடல்,தோன்றி மலர்கள்மூன்றையும் ஒன்றென்று கொண்டனர்
உரையாசிரியர்களும்ஆய்வாளர்களும். ஆனால் கோடல்
முற்றிலும் வேறானது என்றுரைப்பதற்கு ஏராளமான 
தாவரவியில் விளக்கங்கள் உள்ளன.
காந்தள் மலர்இதழ்களின் நுனியில் சிவப்பும் அடியில் மஞ்சளுமாக இரு நிறமாகக் காட்சிதரும்.

தோன்றி ஒரே நிறமாக சிவப்பாக காட்சிதரும்;
கோடல் மலர்களோ வெள்ளையாக தலைப்புறத்தில் பசுங் கோட்டுடன் காட்சிதரும்.
‘ 
காந்தளானது தீ கொழுந்து விட்டு மேலெழுந்து எரிவது போல் தோன்றும்.
தோன்றியோ விளக்கில் சுடர் எரிவதுபோல் தோன்றும்.    

கோடலோ வெண்மையான சிப்பி உடைந்தது (பிளந்ததுபோன்றும்,
சினம் கொண்ட பாம்பு படம் எடுத்திருப்பது போன்று மேல்நோக்கி வளைவாக 
உள்வாங்கித் தோன்றுவதாகவும் கூறப்படுகின்றதுஆகையால் கோடலோடுயோ

தோன்றியையோ காந்தளையோ, ஒப்பிடுவது பொருத்த மற்றதாகும்.


கோடலுக்கு இலக்கிய தாவர அடைமொழியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

கோடு (சிப்பி)உடைந்தன்ன கோடல் என்று கந்தரத்தனாரும்

வரிவெண் கோடல் என்று இளங்கண்ணனாரும் அகநானூறில்  கூறிஉள்ளனர்

வெஞ்சின அரவின் பைஅணந் தன்ன தண்கமழ் கோடல்என்றும் அகநானூறில்  கூறப்பட்டுள்ளது

அரவு உடன்ற வைபோல் விரிந்த குவை என்று பரிபாடலில் கூறப்பட்டுள்ளது.

ஆகையால் காந்தளோடு தோன்றியையோ, கோடலையோ ஒப்பிடுவது பொருத்த மற்றதாகும்.

இலக்கியத்தில் கோடல் அடையாளம் காட்ட  கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது :

கோடுஉடைந்தன்ன கோடல்  கந்தரத்தனார்

தண்கமழ்க் கோடல்                   புல்லாளங் கண்ணியார்

புணர் கோடல்                                கண்ணங்கூத்தனார்

வரிவெண் கோடல்                      இளங்கண்ணனார்

கொலைவேல் கோடல்           இளவெயினி

குவிமுகை கோடல்                   நப்பூதனார்

ஞெகிழ் இதழ்க் கோடல்          நல்லுருத்திரன்

அலங்கு இதழ் கோடல்          பெருங்கடுங்கோ

ஊழ்உறு கோடல்                      கபிலர்

கொழுங் குரல் கோடல்         பெருங் கௌசிகனார்

இலக்கியங்களில் 

காந்தள்  ஒண்செங் காந்தள் என்றும்,

தோன்றி சுடர்பூந் தோன்றி என்றும்,

 ‘கோடல் வரிவெண் கோடல் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆகையால் காந்தளோடு தோன்றியையோ, கோடலையோ ஒப்பிடுவது பொருத்த மற்றதாகும்.

சங்க இலக்கியங்களின் கோடல் பெயர் உள்ள பாடல் அடிகள்

பத்துப்பாட்டு

குறிஞ்சிப் பாட்டு

   கோடல்கைதை, கொங்குமுதிர் நறுவழை -.83
  
முல்லைப்பாட்டு

கோடல் குவி முகை அங்கை அவிழத் - 95
எட்டுத்தொகை
          அகநானூறு

Ø கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர் - 23:6
Ø வெஞ்சின அரவின் பை அணந்தன்ன -154:6
Ø தண்கமழ் கோடல் தாது பிணிஅவிழ - 154:7
Ø வரிவெண் கோடல் வாங்குகுலை வான்பூப் - 264:3
    ஐங்குறுநூறு

Ø வரையாம் இழியக் கோடல் நீடக் - 223:2

   கலித்தொகை

Ø   இவட்கே, அலங்கு இதழ்க் கோடல் வீ உகுபவை போல் - 7:15
Ø ஊழ் உறு கோடல் போல, எல் வளை உகுபவால் - 48(12):11
Ø ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ்க் கோடலும் - 101. (1):4
Ø குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும் - 103. (3):3
Ø கமழ் கண் தாது உதிர்ந்து உக, ஊழ் உற்ற கோடல் வீ - 121. (4):3

    குறுந்தொகை

Ø கோடல் எதிர் முகைப் பசு வீ முல்லை - 62:1


     நற்றிணை

Ø கொழுங் குரல் கோடல் கண்ணி செழும் பல - 44:7
Ø பிடவமும், கொன்றையும், கோடலும் - 99:9

புறநானுறு

Ø கோடல் கண்ணிக் குறவர் பெருமகன் - 157:7

பரிபாடல்

Ø அரவு உடன்ற வைபோல் விரிந்த குவை
குடை விரிந்தவை போலக்கோலும் மலர் - 20:99,100
கோடல்


                              Ceropegia elegans

தாவரவிளக்கம் 


ஆங்கிலத்தில்
தமிழில்
Classification
Name
வகைபாடு
தாவரத் தகவல் மையப் பெயர்
Kingdom
PLANTAE
உலகம்
தாவரம்
Family
ASCLEPIADACEAE R.Br. 
குடி
எருக்கு குடி
Genus
Ceropegia Linn.
பிறவி
Species epithet
elegans Wall.
பெயர் வழி
பெருங்கொடி
Botanical Name
Ceropegia elegans Wall.
தாவரவியல் பெயர்
வரிவெண் கோடல். இளங்கண்ணனார்
Synonym
Ceropegia elegans (Wight) Trimen var. walkerae
Ceropegia gardneri Hook.
Ceropegia walkerae Wight
வேறு பெயர்கள்
Habit
Climber
வளரியல்பு
கொடி
கொடிகளின் பண்புகள்
வளரியல்பு : சுழற்கொடி.
இலைகள் : நீள்வட்டம்-ஈட்டி வடிவானவை, கிட்டத்தட்ட 4-6 * 2-2.5 செ.மீ. நீளமானவை.
மலர்கள் : அல்லிகள் பச்சை வண்ணம். மடல்கள் கரும்பச்சை/கருப்பு நிறமானவை, குழல் சுமார் 1.8 செமீ நீளம், மடல்கள் 5, முக்கோணம்-முட்டை வடிவானவை.
மகரந்தம்: மகரந்தத்திரள் கோள வடிவானது, காம்பு நுண்ணியது, தளம் நீண்டு உருண்டு, சிறகு போன்று இருக்கும். வெளி வளரி-மடல்கள் 5, மடல்கள் 5, நீண்ட 2-பிளவானவை, நீண்டுமெலிந்தவை, ஒவ்வொன்றும் 2 மிமீ நீளமானது. உள்வளரி-மடல்கள் 5, நீண்டு மெலிந்தவை, 2 மிமீ நீளமுடையது.
பூக்கும் பருவம் : மலர்கள் டிசம்பரில் பூக்கும்.
வாழ்விடம் : மலைகள் 800-1000 மீட்டர் உயரமானப் பகுதிகளிலும், புதர்கள், சிற்சில இடங்களில் மட்டும் வளரக்கூடியவை.
பரவியிருக்குமிடம் : தீபகற்பம், இலங்கை போன்ற இடங்களில் காண்படும்.

கொடிகளின் பண்புகள்
வளரியல்பு : சுழற்கொடி.
இலைகள் : நீள்வட்டம்-ஈட்டி வடிவானவை, கிட்டத்தட்ட 4-6 * 2-2.5 செ.மீ. நீளமானவை.
மலர்கள் : அல்லிகள் பச்சை வண்ணம். மடல்கள் கரும்பச்சை/கருப்பு நிறமானவை, குழல் சுமார் 1.8 செமீ நீளம், மடல்கள் 5, முக்கோணம்-முட்டை வடிவானவை.
மகரந்தம்: மகரந்தத்திரள் கோள வடிவானது, காம்பு நுண்ணியது, தளம் நீண்டு உருண்டு, சிறகு போன்று இருக்கும். வெளி வளரி-மடல்கள் 5, மடல்கள் 5, நீண்ட 2-பிளவானவை, நீண்டுமெலிந்தவை, ஒவ்வொன்றும் 2 மிமீ நீளமானது. உள்வளரி-மடல்கள் 5, நீண்டு மெலிந்தவை, 2 மிமீ நீளமுடையது.
பூக்கும் பருவம் : மலர்கள் டிசம்பரில் பூக்கும்.
வாழ்விடம் : மலைகள் 800-1000 மீட்டர் உயரமானப் பகுதிகளிலும், புதர்கள், சிற்சில இடங்களில் மட்டும் வளரக்கூடியவை.
பரவியிருக்குமிடம் : தீபகற்பம், இலங்கை போன்ற இடங்களில் காண்படும்.

கொடியின் பண்புகள்

வளரியல்பு : சுழற்கொடி.

இலைகள் : நீள்வட்டம்-ஈட்டி வடிவானவை, கிட்டத்தட்ட 4-6 * 2-2.5 செ.மீ. 

நீளமானவை.

மலர்கள் : அல்லிகள் பச்சை வண்ணம். மடல்கள் கரும்பச்சை/கருப்பு 

நிறமானவை, குழல் சுமார் 1.8 செமீ நீளம், மடல்கள் 5, முக்கோணம்-

முட்டை வடிவானவை.

மகரந்தம்: மகரந்தத்திரள் கோள வடிவானது, காம்பு நுண்ணியது, தளம் 

நீண்டு உருண்டு, சிறகு போன்று இருக்கும். வெளி வளரி-மடல்கள் 5, 

மடல்கள் 5, நீண்ட 2-பிளவானவை, நீண்டுமெலிந்தவை, ஒவ்வொன்றும் 2 

மிமீ நீளமானது. உள்வளரி-மடல்கள் 5, நீண்டு மெலிந்தவை, 2 மிமீ 

நீளமுடையது.

பூக்கும் பருவம் : மலர்கள் டிசம்பரில் பூக்கும்.

வாழ்விடம் :மலைகள் 800-1000 மீட்டர் உயரமானப் பகுதிகளிலும், புதர்கள் 

நிறைந்த, சிற்சில இடங்களில் மட்டும் வளரக்கூடியவை.

பரவியிருக்குமிடம் : தீபகற்பங்களான இந்தியா, இலங்கை போன்ற 

இடங்களில் காண்படும்.

இரா. பஞ்சவர்ணம்,

மேனாள் தலைவர், பண்ருட்டி நகராட்சி,

நிறுவனர்  தாவரத் தகவல் மையம்
பண்ருட்டி



No comments:

Post a Comment