சிறுதானியத் தாவரங்கள் நூல்வெளியீடு
சிறுதானியம் |
24-10-2015 அன்று சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறை சார்பில் நடைபெற்ற இரா.பஞ்சவர்ணம் அவர்களின் "சிறுதானியத் தாவரங்கள்" என்னும் நூல் வெளியீடு.
சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறை தலைவர் பேராசிரியர் ஒப்பிலா மதிவாணன் அவர்கள், நூல் ஆசிரியர் திரு இரா.பஞ்சவர்ணம் அவர்கள் நூலை வெளியிட்ட மாண்பமை நீதியரசர் எஸ்.விமலா வேல்முருகன் அவர்கள், நூலை பெற்றுக்கொண்ட தமிழ்திரு கவிஞர் கி. தனவேல் இ.ஆ.ப (ஓய்வு) அவர்கள், சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதித் திருத்தப்பணித்திட்டம் பதிப்பாசிரியர் பேராசிரியர் பெ. மாதையன் அவர்கள், சென்னை இராஜீவ்காந்தி மருத்தவமனை பேராசிரியர் ஆர்.லட்சுமி நரசிம்மன் DM நரம்பியல் வல்லுநர் அவர்கள்.
இந்த நூலில்
இந்த நூலில்
சிறுதானயத் தாவரங்கள் (நூல் அறிமுகம்)
உணவுப் பொருட்கள் (கூலவகைகள்) - The
cereals,
தானியம் – Grains, சிறுதானியங்கள் - Millet, குறுந் தானியங்கள் - Minor millets, ஒவ்வொரு தானியத்திலும் இந்தியாவில் இருக்கின்ற இரகங்கள், மருத்துவப் பயன்பாட்டில் அரிசி என்றுக் கூறப்படும் தாவரங்கள்,
மருத்துவத் தொகைப்பெயர்களில் தானியங்களை
உள்ளடக்கிய தொகைப்பெயர்கள் பட்டியலுடன், சங்க
இலக்கியத்தில் புல் அரிசிப் பயன்பாடு, சங்க
இலக்கியங்களில் தானியங்களைப் பயன்படுத்திய முறை, இந்திய அளவில் புஞ்சை நிலத்தில் சாகுபடி செய்யும் தானியங்கள்,
எவை அங்ககத் (Organic) தானியங்கள் என்பதற்கு விளக்கம், ஒவ்வொரு தானியத்தை எவ்வளவு காலம் பயன்படுத்தலாம் (Expire
date) என்பதற்கான வழிகாட்டுதல், தானியங்களையும் தானியத்திலிருந்து இதரப் பொருட்கள் தயாரிக்கும்
முறையும், தேர்வு மற்றும் சேமிப்பு முறையும்.
உலக அளவில் தானிய உற்பத்தி, தானியம், சிறு தானியங்களின் உயிர்ச்சத்து
ஒப்பீடு, ஒவ்வொரு சிறுதானியமும் தானியங்களுடன்
ஒப்பீடு, தமிழ்நாடு அளவில் சிறுதானியங்களின்
அபிவிருத்தி பற்றிய விபரங்கள், (இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகம்),
உமியுடன் உள்ள தானியம், உமி நீக்கிய தானியங்களில் உள்ள சத்து மற்றும் ஊட்டச் சத்து விகிதப்
பட்டியல்கள், வகைப்பாட்டியல் மற்றும் உலகளாவிய
வகைப்பாட்டியல், அகில உலக வகைப்பாட்டிற்கு நிகராகத்
தமிழில் வகைப்பாடு, தாவரவியல் பெயரிட்டதற்கான விளக்கங்கள்,
தாவரவியல் ஆங்கிலப் பொதுப்பெயர்களுக்கான
விளக்கங்கள், தமிழ்ப்பெயருக்கான காரண விளக்கங்கள், முழுமையாகத் தமிழில் தாவர விளக்கங்கள், சிறுதானியங்களுக்கான தமிழில் நிகண்டுகளில் கூறப்பட்ட பெயர்கள்.
அகராதிகள் மற்றும் வழக்குப் பெயர்கள், வட்டார வழக்குப்
பெயர்கள், பிராந்திய மொழிப் பெயர், பிற மாநில மொழிப் பெயர்கள் ஆங்கிலத்தில், தாவரத்தின் பெயரில் அழைக்கப்பட்ட இதர தாவரங்கள், மருத்துவப் பயன்பாடு, தலத்தாவரப் பயன்பாடு, தலத்தாவரமாகக் கொண்ட கோயில் விளக்கம், தினையின் பெயரைப் பின்னொட்டாகப் (Suffix) பெற்ற வேறு தாவரங்கள்,
தாவரத்தின் பெயரைக் கொண்ட
ஊர்கள், தாவரத்தின் பெயரை முன்னொட்டாகக் கொண்ட மனிதப்
பெயர்கள், தாவரத்திலிருந்து செய்யப்படும் மருந்து
வகைகள், சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, மலைவாழ் மக்கள் மருத்துவப் பயன்பாடுகள்,
பாரம்பரிய வைத்தியம் என அனைத்து மருத்துவக்
குறிப்புகளுடன்,
சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், பக்தி இலக்கியம், தனிப்பாடல், வாய்மொழி இலக்கியங்களான பழமொழி, விடுகதை, ஒப்பாரி, தாலாட்டு, கும்மிப்பாட்டு, விளையாட்டுப் பாடல்களில் சிறதானியங்கள் இடம்பெற்ற பாடல் அடிகள்,
சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள
தானியங்களின் சிறப்புப் பெயர்கள். பச்சை மற்றும் காய்ந்த வைக்கோல், தட்டு, விதை, உமி, எண்ணெய், இவைகளின் சத்து விகிதங்கள், தானியங்கள்
இடம்பெற்றுள்ள மருத்துவ நூல்கள், மற்றும் Dictionary of the
Economic Products of India வில் கூறப்பட்டுள்ள செய்திகள்,
Wealth of India - வில் கூறப்பட்டுள்ள ஆங்கில
விளக்கங்கள்.
தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் அவல், சேமியா, நூடுல்ஸ், சூப் ஸ்டிக் செய்முறைகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் விதங்கள். சிறுதானியத்தில் இருந்து செய்யபடும் 200-க்கும் மேற்பட்ட சமையற் குறிப்புகளின் மூலம் 1,600-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை தயாரிக்கும் குறிப்புகள், பாரம்பரியமாக சிங்கள மக்கள், ஆந்திர மக்கள், கர்னாடக மக்கள் பயன்படுத்திய உணவு வகைகளின் செய்முறை விளக்கம் போன்ற செய்திகள் அனைத்தும் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment