செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..
Showing posts with label பனைமரம். Show all posts
Showing posts with label பனைமரம். Show all posts

Sunday, 7 October 2018

பனை பாடும் பாடல் - தினமலர் மதிப்புரை




பனைபாடும் பாடல்

பனை

வெப்ப மண்டலங்களின் வறட்சியைத் தாங்கி, இயற்கையில் தானாகவே விதை போட்டு, நீரூற்றி வளர்க்காமல் இயற்கையாக வளர்ந்து அதிக பயன் தருவது பனை மரம்.
‘மண்ணுலகக் கற்பக தரு’ என்று பனை மரத்தைப் போற்றுவர். அதன் பெருமைகள், பயன்கள், பாடல்கள் ஆகியவற்றை, இந்நுால் பனை நுங்கு போல சுவையுடன் வாசகருக்கு தருகிறது.
படிக்க முடியாதவர் பார்த்துப் பயன் பெற, பனை மரத்தின் பல்வேறு சிறப்புகளை பச்சைப் பசேல் என்ற வண்ணப் படத்துடன் தந்துள்ளமை கண்ணைக் கவர்கிறது. பனை நுங்கை யானையின் கால் நகங்களுக்கு, அகநானுாறு உவமை காட்டுவதை படத்துடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளது பாராட்டத்தக்கது.
பனை வெல்லம், கருப்பட்டியின் மருத்துவக் குணங்கள் பலவாறாகத் தரப்பட்டுள்ளன.
திருஞானசம்பந்தர் திருவோத்துாரில் ஆண் பனையை பெண் பனையாக்கிய அற்புதமும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. 
‘பனை மரம் பாடும் பாட்டு’ அதன் பயன்களுக்கு எடுத்துக்காட்டு.
எழுச்சூர், திருப்பனையூர், திருமழபாடி, பேரூர் போன்ற, 15 கோவில்களில், பனை மரமே தல மரமாக உள்ளது.
கொளுத்தும் கோடை வெயிலில் சுவைக்கும் பனை நுங்கும், தமிழைத் தாங்கிய ஓலைச் சுவடிகளும், காற்றாடியும் மட்டுமா... பனையின் பயன்கள் இத்தனையா என்று ஆச்சரியப்பட வைக்கும் அத்தனை பனை மரச் செய்திகளும் உள்ள கற்பனை இல்லா நற்பனை நுால்.

– முனைவர் மா.கி.ரமணன்
         தினமலர் – சென்னை பதிப்பு                                             தேதி: 07-10-2018

Wednesday, 10 January 2018

பனை பாடும் பாடல் நூல் வெளியீடு

பனை

பனை பாடும் பாடல்


எனது நூல் "பனை பாடும் பாடல்" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் 

நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியீடப்படவுள்ளது

Sunday, 11 June 2017

Sunday, 5 March 2017

தினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை



'பனைமரம்' நூலின் மதிப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டது. சிறப்பாக வெளியிடப்பட்ட தினமலர் நாளிதழிற்கும், மதிப்புரை எழுதிய பன்னிரு கைவடிவேலன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


பனைமரம்



Thursday, 16 February 2017

பனைமரம் நூல் மதிப்புரை

டாக்டர் இரா. பஞ்சவர்ணம் அவர்கள் எழுதிய பனைமரம் நூல் மதிப்புரை ஹிக்கிம்பாதம்(HIGGINBOTHAMS) நடத்தும் செய்தி மடலான தி மெயிலில்(The mail)


பனைமரம்

பஞ்சவர்ணம்

Friday, 23 December 2016

பனைமரம் நூல் வெளியீட்டு விழா





பனைமரம்
பனைமரம் - panai maram
மொழி - தமிழ்
ISBN NUMBER - 9788192377193
மொத்த பக்கம் - 756
விலை - ரூ. 800
வெளியீட்டு தேதி - 21-12-16
எடை - 900 கிராம்
நூல் அளவு -  அகலம் 14 செமீ; நீளம் 22 செமீ; மையம்: 3.5 செமீ

பனைமரம்

நூல் வெளியீடு
இலக்கியச் செல்வர் தமிழ்த்திரு குமரி அனந்தன் அவர்கள் வெளியிட
சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
பேராசிரியர் டாக்டர் பொற்கோ அவர்கள் பெற்றுக்கொண்டார்.

உடன் - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர்,
பேராசிரியர் முனைவர் ஒப்பிலா மதிவாணன்,
சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாக இயக்குநர்,
 பேராசிரியர் டாக்டர் அ. பாலு,
சென்னைத் தொலைக்காட்சி இயக்குநர்,
முனைவர் பால. இரமணி இ.ஒ.ப,
கவிஞரேறு தமிழ்த்திரு கி. தனவேல் இ.ஆ.ப,
நூல் ஆசிரியர் டாக்டர் இரா.பஞ்சவர்ணம் மற்றும்
சென்னைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட
ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஸ்ரீ. பாஸ்கரன்.

ஒப்பிலா மதிவாணன்
பேராசிரியர் ஒப்பிலா மதிவாணன் நோக்க உரை

பொற்கோ
பேராசிரியர் டாக்டர் பொற்கோ தலைமை உரை


கி. தனவேல் இ.ஆ.ப
கவிஞரேறு தமித்திரு கி. தனவேல் இ.ஆ.ப நூல் அறிமுக உரை

குமரி அனந்தன்
இலக்கியச் செல்வர் தமிழ்த்திரு குமரி அனந்தன் நூல் வெளியீட்டு உரை

பால. இரமணி 
சென்னை தொலைக்காட்சி இயக்குநர், முனைவர் பால. இரமணி சிறப்புரை


ஸ்ரீ. பாஸ்கரன்
நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஸ்ரீ. பாஸ்கரன் சிறப்புரை

அ. பாலு
மெரின வளாக இயக்குநர் பேராசிரியர் டாக்டர் அ. பாலு சிறப்புரை

பஞ்சவர்ணம்
நூல் ஆசிரியர் டாக்டர் இரா. பஞ்சவர்ணம் எற்புரை

Saturday, 17 December 2016

டாக்டர் இரா.பஞ்சவர்ணம் அவர்களின் 'பனைமரம்' நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்


டாக்டர் இரா.பஞ்சவர்ணம் அவர்களின்  'பனைமரம்' நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் 
21-12-2016 புதன்கிழமை அன்று 2.30 மணியளவில் சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத்துறை மூலம் வெளியிடப்படவுள்ளது.
இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம்
       காமராசர் சாலை (திருவள்ளுவர் சிலை எதிரில்) 



இரா. பஞ்சவர்ணம்

பனை

BOOK NAME - panai maram - பனைமரம்
LANGUAGE - Tamil
ISBN NUMBER - 978-81-923771-9-3
NO OF PAGE - page - 754
PRISRE - RS. 800
PUBLISHED DATE - 21-12-2016
WIGHT - 900

Book size - அகலம் 14; நீளம் 22; center: 3.5

இந்நூல் - ஓர் அறிமுகம்
நூல்
‘தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம்’ என்னும் தலைப்பில் தமிழகத்திலுள்ள ‘ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒரு நூல்’ என்னும் திட்டத்தின் அடிப்படையில், இதுகாறும் ‘அரசமரம்ஜ’, ‘சிறுதானியத் தாவரங்கள்’ ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில்  ‘தமிழ்நாட்டுத் தாவரக்களஞ்சியம் – பனைமரம்’ என்ற இந்நூல் இப்போது வெளியிடப்படுகிறது.

களஞ்சியம்
பனைமரம் பற்றிய அனைத்துத் தகவல்களையும்  உள்ளடக்கிய முழுமையான களஞ்சியமாக இந்நூல் திகழும்.
பெயர்கள்
இந்நூலின்கண் பனைமரத்தின் வகைப்பாட்டியல், தாவர விளக்கம், இதர வகைப்பாடு, ஆங்கிலப்பெயர்கள், தமிழ்ப்பெயர்கள், தாவரவியற் பெயர்கள், வழக்கத்திலுள்ள ஏனைய தமிழ்ப்பெயர்கள், பிறமொழிப்பெயர்கள், இலக்கியங்களில் உள்ள தாவரத்தின் சிறப்புப் பெயர்கள், நிகண்டுகள், சித்தமருத்துவத் தொகைப் பெயர்கள், மருத்துவப் பயன்பாடுகள், போன்றவை கவனத்துடன் தொகுக்கப்பட்டு, நிரல்படத் தரப்பட்டுள்ளன.
பனைமரப் பாகங்களின் பயன்பாடுகள்
பனை ஓலை, மடல், மட்டை, நார் (சோற்றுப்பகுதி நீக்கியது), பாளை, பூந்துணர்ச்சாறு, கள், காடி, பதநீர், பனங்காய், நுங்கு, இதக்கை (முதிர்ந்த நுங்கு), பனம்பழம், பனங்கொட்டை, பனங்கிழங்கு, பன்னாடை, பனையின் தண்டுப்பகுதி (வைரம்), மரத்தின் பயன்பாடு, மரச்சோறு, பனையின் வேர்ப்பகுதி, பனைநீர், கொட்டுப்பனை (காய்ந்த பனை மரம்), பனை புல்லுருவி. பனையில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றம் வேதிப்பொருட்கள், பனங்கள் எடுக்கப் பயன்படுத்திய சிறப்புக் கருவிகள் - போன்ற விவரங்கள் அனைத்தும்  தொகுக்கப்பட்டு இந்நூலில் தரப்பட்டுள்ளன.
மேற்கோள்
தொல்காப்பியம், சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், புராணங்கள், வேதங்கள் - போன்றவற்றில் பனைமரம் இடம்பெற்றுள்ள இடங்கள் பாடலடிகள் இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
வாய்மொழி இலக்கியங்களான பழமொழிகள், விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல் (தாலாட்டு, காதல், தொழில், ஒப்பாரி - போன்றவை), சித்த மருத்துவப் பாடல், மருத்துவப் பாடல்கள்.
ஈழச்செய்திகள்
ஈழச் செய்திகளான புராணம், பழமொழிகள், நாடகப்பாடல்கள், தாலவிலாசம் தமிழ் ஆங்கில பாடல்கள் - போன்றவற்றில் பனைமரம் இடம்பெற்றுள்ள பகுதிகள் தொகுத்து இந்நூலில் தரப்பட்டுள்ளன.
ஆன்மீகம்
பனைமரத்தைக் தலமரமாகக் கொண்ட கோவில்கள், கடவுள் பெயரோடு பனைமரம் இணைந்துள்ள மூர்த்திகள், அக்கோயில்கள் அமைந்துள்ள இடங்கள், பனை மரத்தைத் தம்பெயரோடு இணைத்துக் கொண்ட தமிழக ஊர்கள் மற்றும் பிற மாநில ஊர்களின் பெயர்கள், பனையின் பெயரைப் பின்னொட்டாகப் பெற்ற பிற தாவரங்கள், முன்னொட்டாகப் பெற்ற மாந்தரின் பெயர்கள் - போன்ற விவரங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இந்நூலில் தரப்பட்டுள்ளன.
மருத்துவம்
பனையின் மருத்துவப் பயன்பாடுகள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. அனுபானம், பனையைப் பயன்படுத்திச் செய்யப்படும் மருந்து வகைகள், பயன்படுத்தப்படும் மருத்துவ முறைகளான நாட்டு வைத்தியம் - பாரம்பரிய வைத்தியம், சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனாநி, மருந்துவ உணவு - போன்ற மருத்துவ முறைகளில் பனைமரம் பெறும் இடம் விளக்கப்பட்டுள்ளது.
மனிதர்க்கான மருத்துவம் மட்டுமின்றி, பறவை - விலங்கின மருத்துவத்திலும் பனையின் பங்கு என்ன என்பது இந்நூலில் பேசப்பட்டுள்ளது.
அகத்தியர் வைத்தியச் சதகம், தேரையர் மகா கரிசல், தேரையர் வைத்தியம் 1000, பிரம்மமுனி வைத்திய விளக்கம், குணப்பாடம், போகர் கருக்கிடை நிகண்டு 500, யூகிமுனி வைத்தியக் காவியம், பிரம்மமுனி மருத்துவ விளக்கம், அற்புதச் சிந்தாமணி, அகத்தியர் வைத்தியக் காவியம், அகத்தியர் வைத்தியச் சிந்தாமணி, அகத்தியர் ஆயுர்வேதம் 1200, அகத்தியர் ஆயுர்வேதம் 1500, அகத்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம், சித்தமருத்துவத் தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம், பதார்த்த குணம், வள்ளலார், விலங்கின வைத்தியம் - போன்ற மருத்துவ நூல்களில் பனை பெற்றுள்ள சிறப்பான இடங்கள் கண்டறியப்பட்டு இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
உணவும் பிறவும்
நேரடி உணவாகும் பனையின் பாகங்கள் காட்டப்பட்டுள்ளன; பனையிலிருந்து தயாரித்து உண்ணப்படும் உண்பொருள்களும் சுட்டப்பட்டுள்ளன; மனிதர்களுக்கே மட்டுமல்லாமல், விலங்கினம், கால்நடை, பறவையினம், பூச்சி புழுவினத்திற்கெல்லாம் பனைபடுபொருள்கள் எவ்வாறு உணவாகின்றன என்னும் விவரங்களும் விளக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களிலெல்லாம் ஆங்கிலத்தில் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.
பனைமரத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயன்பாடுகள் விரிவாகவும் தெளிவாகவும் விளக்கமாவும் தயாரிக்கப்பட்டு,  அட்டவணையாக இணைக்கப்பட்டுள்ளன. தேவையான விளக்கமும் தரப்பட்டுள்ளன.
பனைமரத்தின் பாகங்கள் அனைத்தும் வழுவழு தாள்களில், கண்ணைக் கவரும் வண்ணங்களில், எளிதாகப் பாகங்களை அடையாளம் காணும் வகையில் அச்சிடப்பெற்று இணைக்கப்பட்டுள்ளன; சங்க இலக்கிய ஒப்பீடுகளும் காட்டப்பட்டுள்ளன.
மொத்தத்தில்
தாவரப்பெயர்கள், மேற்கோள் இலக்கியங்கள், ஆன்மீக்க குறிப்புகள், மருத்துவப்பயன்கள், உணவுப்பயன்பாடுகள், வாழ்க்கைப் பயன்பாடுகள் - எனப் பனைமரம் பற்றிய முழுமையான தகவல்களைத் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் தருகின்ற களஞ்சியமாக இந்நூல் விளங்கும் என உறுதியாக நம்பலாம்.


Monday, 28 March 2016

ஆலமரத்திற்குள் பனைமரம்

ஆலமரத்திற்குள் பனைமரம்
பனைமரம்
புகைப்படம் cr இளங்கோவன்


விரிந்த ஆலமரத்தின் நடுவிலிருந்து பனைமரம் உயர்ந்து காட்சி  அளிக்கின்றது

இடம் - கடலூர்மாவட்டம் குறிஞ்சிபாடி தொகுதி  பெருமாள் ஏரிக்கரை

ஆலமரம் விரைவாக வளர்ந்து பனைமரத்தின் அடிப்பகுதியை சுற்றி வளைத்து, மூடிமறைத்து, பரந்து விரிந்து காணப்படுவது, வியப்பாக இருக்கின்றது.ஆலம்விதைகள் நேரிடையாக மண்ணில் விழுந்தால் முளைப்பதில்லை. பறவைகள் பழத்தை உட்கொண்டவுடன், விதைகள் உணவுப்பாதையை கடந்து இரப்பையின் உஷ்ணத்தால் பதப்படுத்தப்பட்டு பறவையின் எச்சத்தோடு வெளியே வருகிறது. இவ்வாறு பறவையின் எச்சம் பனைமரத்தின் உள்மடல்களில் விழுந்து, அதிலிருக்கும் விதை முளைத்து வேர்கள் கீழ்நோக்கி வந்து மண்ணைப் பற்றி நிலைப்பெற்று விருட்சமாக வாழ்வது பார்க்கக்கூடியதாகும். ஆனால், இந்த மரத்தின் தண்டுப்பகுதியை பார்க்கமுடியாமல், மட்டையுடன் கூடிய முனைப்பகுதியை மட்டும் பார்க்கும்படி அமைந்துள்ளது. பனை மரத்தின் தண்டும் வேர்களும் ஆலமரத்தின் தண்டுப்பகுதிக்குள் அடங்கியிருக்கின்றது. இந்தப் பதிவை எனது பனைமரப் புத்தகத்தில் துள்ளியமாக பதிவு செய்வதற்கு வான் பார்வை (Ariel view) படமெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.