செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

Monday 28 March 2016

ஆலமரத்திற்குள் பனைமரம்

ஆலமரத்திற்குள் பனைமரம்
பனைமரம்
புகைப்படம் cr இளங்கோவன்


விரிந்த ஆலமரத்தின் நடுவிலிருந்து பனைமரம் உயர்ந்து காட்சி  அளிக்கின்றது

இடம் - கடலூர்மாவட்டம் குறிஞ்சிபாடி தொகுதி  பெருமாள் ஏரிக்கரை

ஆலமரம் விரைவாக வளர்ந்து பனைமரத்தின் அடிப்பகுதியை சுற்றி வளைத்துமூடிமறைத்துபரந்து விரிந்து காணப்படுவதுவியப்பாக இருக்கின்றது.ஆலம்விதைகள் நேரிடையாக மண்ணில் விழுந்தால் முளைப்பதில்லை. பறவைகள் பழத்தை உட்கொண்டவுடன்விதைகள் உணவுப்பாதையை கடந்து இரப்பையின் உஷ்ணத்தால் பதப்படுத்தப்பட்டு பறவையின் எச்சத்தோடு வெளியே வருகிறது. இவ்வாறு பறவையின் எச்சம் பனைமரத்தின் உள்மடல்களில் விழுந்துஅதிலிருக்கும் விதை முளைத்து வேர்கள் கீழ்நோக்கி வந்து மண்ணைப் பற்றி நிலைப்பெற்று விருட்சமாக வாழ்வது பார்க்கக்கூடியதாகும். ஆனால், இந்த மரத்தின் தண்டுப்பகுதியை பார்க்கமுடியாமல், மட்டையுடன் கூடிய முனைப்பகுதியை மட்டும் பார்க்கும்படி அமைந்துள்ளது. பனை மரத்தின் தண்டும் வேர்களும் ஆலமரத்தின் தண்டுப்பகுதிக்குள் அடங்கியிருக்கின்றது. இந்தப் பதிவை எனது பனைமரப் புத்தகத்தில் துள்ளியமாக பதிவு செய்வதற்கு வான் பார்வை (Ariel view) படமெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

No comments:

Post a Comment