செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

Monday, 6 May 2013

7. செயலை-seyalai



ங் இலக்கியத் தாவரங்கள்


7. செயலை


அசோகு, பிண்டி, செயலை இம்மூன்றும் உரையாசிரியர்களும், திறனாய்வாளர்களும், ஒன்றென கொண்டனர். ஆனால் இம்மூன்றும் ஒரே தாவரம் அல்ல.
   
செயலை பற்றி சங்க இலக்கியத்தில் கூறும்போது பூக்களைப் பற்றிக் கூறாமல் வெறும் இளந்தளிர்களை மட்டுமேக் குறப்பட்டுள்ளது. அவை செவ்வரைச் செயலை, ஒண்தளிர்ச் செயலை, அம்தளிர்ச் செயலை, அழல்ஏர் செயலை, அம்குழைச் செயலை, ஒலிக்குழைச் செயலை

ஆகையால் மூன்றும் வெவ்வேறான தாவரங்கள் எனக்கருத இடமுண்டு.

இலக்கியங்கள்
                              சங்க இலக்கியம்
                எட்டுத்தொகை
அகநானூறு
நின்னொடு வினவல் கேளாய்!--பொன்னொடு
புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி
ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல்
ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த
துய்த் தலை வெண் காழ் பெறூஉம்
கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே.  -  7:17-22.
 - களிற்றுயானை நிரை - கயமனார்.
தண் அயத்து அமன்ற கூதளம் குழைய
இன் இசை அருவிப் பாடும் என்னதூஉம்
கேட்டியோ? வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை
ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை
ஓங்கு சினை தொடுத்த ஊசல், பாம்பு என
முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே;  - 68:2-7.
 - களிற்றியானை நிரை  -  ஊட்டியார்.
வந்தனன்ஆயின், அம் தளிர்ச் செயலைத்
தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று
ஊசல் மாறிய மருங்கும், பாய்பு உடன்  - 38:6-8.
- களிற்றியானை நிரை.   - வடம வண்ணக்கண் பேரிசாத்தனார்.
கொன்னே செய்தியோ, அரவம் பொன்என
மலர்ந்த வேங்கை மலிதொடர் அடைச்சி
பொலிந்த ஆயமொடு காண்தக இயலித்
தழலை வாங்கியும், தட்டை ஒப்பியும்
அழல்ஏர் செயலை அம்தழை அசைஇயும்
குறமகள் காக்கும் ஏனல்
புறமும் தருதியோ வாழிய, மழையே! -188:8-14.
                                                 - மணிமிடைப் பவளம் - வீரை வெளியன் தித்தனார்
ஐங்குறுநூறு
அத்தச் செயலைத் துப்புறழ் ஒண்டளிர்
புன்தலை மந்தி வன்பறழ் ஆரும்
நன்மலை நாட! நீ செலின்
நின் நயந்துறைவி என்னினுங் கலிழ்மே.   - 273.
 - குரக்குப் பத்து.  - கபிலர்.

நெய்யொடு மயக்கிய உழுந்தின் நூற்றன்ன
வயலையஞ் சிலம்பின் தலையது
செயலையம் பகைத் தழை வாடும் அன்னாய்.  - 211.
 - அன்னாய்ப் பத்து - கபிலர்

கலித்தொகை
புரிபு நீ புறம் மாறி, போக்கு எண்ணி, புதிது ஈண்டிப்
பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ
செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம்; அந் நலம்
பயலையால் உணப்பட்டுப் பண்டை நீர் ஒழிந்தக்கால் - 15:10-13.
 - பாலைக் கலி - பாலை பாடிய பெருங்கடுங்கோ.

குறுந்தொகை
திருந்து இழை அல்குற்குப் பெருந் தழை உதவிச்
செயலை முழுமுதல் ஒழிய அயலது
அரலை மாலை சூட்டி
ஏமுற்றன்று இவ் அழுங்கல் ஊரே.    - 214:4-7.
 - தோழி கூற்று   - கூடலூர் கிழார்.
பத்துப்பாட்டு
            குறிஞ்சிப் பாட்டு
மெல் இரு முச்சி கவின் பெறக் கட்டி
எரி அவிர் உருவின் அம் குழைச் செயலைத்
தாது படு தண் நிழல் இருந்தனம் ஆக - 104-106  
- கபிலர்.

திருமுருகாற்றுப்படை
செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்தளிர் துயல் வரும் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும் பல்லியத்தன்   -5:206-209 
 - நக்கீரர்.

நற்றிணை
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த
செயலை அம் தளிர் அன்ன, என்
மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே.   - 244:9-11
 - கூற்றங்குமரனார்.
குல்லை, குளவி, கூதளம், குவளை,
இல்லமொடு மிடைந்த ஈர்ந் தண் கண்ணியன்,
சுற்று அமை வில்லன், செயலைத் தோன்றும்
நல் தார் மார்பன், காண்குறின் சிறிய
நற்கு அவற்கு அறிய உரைமின் பிற்றை .    - 376:5-9.
 - கபிலர்.
பரிபாடல்
நினைமின் மாந்தீர் கேண்மின் கமழ் சீர்
சுனையெலாம் நீலம் மலர சுனை சூழ்
சினை யெலாம் செயலை மலர காய் கனி
உறழ நனை வேங்கை ஒள் இணர் மலர
மாயோன் ஒத்த இன் நிலைத்தே
சென்று தொழுகல்லீர் கண்டு பணிமின்மே
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே.   - 15:29-35.
 - இளம்பெருவழுதி
மலைபடுகடாம்
கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து
சேந்த செயலைச் செப்பம் போகி
அலங்கு கழை நரலும் ஆரிப் படுகர்ச்
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி - 159-162.
- பெருங்கௌசிகனார்.

பதினென்கீழ்க்கணக்கு
       திணை மாலை நூற்றைம்பது
சுள்ளி சுனைநீலஞ் சோபா லிகை செயலை
யள்ளி யளகத்தின் மேலாய்ந்து-தெள்ளி
யிதணாற் கடியொடுங்கா வீர்ங்கடா யானை
யுதணாற் கடிந்தா னுளன்.   
 கணிமேதாவியார்

காப்பியங்கள்
                       ஐம்பெருங் காப்பியம்
  சிலப்பதிகாரம்
கயிலை நன் மலைஇறை மகனை! நின் மதிநுதல்
மயில் இயல் மடவரல் மலையர் தம் மகளார்
செயலைய மலர்புரை திருவடி தொழுதேம்,
இயல் மணம் ஒழி, அருள் அவர் மணம் எனவே. -24:16.
 - வஞ்சிக்காண்டம்.

மணிமேகலை
கண்ட கண்ணினும் கேட்ட செவியினும்
உற்றுஉணர் உடம்பினும் வெற்றிச்சிலைக் காமன்
மயிலையும் செயலையும் மாவும் குவளையும்
பயில்இதழ்க் கமலமும் பருவத்து அலர்ந்த
மலர்வாய் அம்பின் வாசம் கமழப் - 24:36-40.
                                         - ஆபுத்திரன் நாடு அடைந்த காதை.

செயலையைப் பற்றிய இலக்கிய அடைமொழிகள்

செவ்வரைச் செயலை          நக்கீரர்
ஒண்தளிர்ச் செயலை          ஊட்டியார்
அம்தளிர்ச் செயலை           பேரிசாத்தனார்
அழல்ஏர் செயலை             வீரைவெளியன் தித்தனார்
அம்குழைச் செயலை          கபிலர்.
ஒலிக்குழைச் செயலை        கயமனார்
அம் தளிர் செயலை            பெருங்கடுங்கோ
மென் மலர்க் கோதை         திருத்தக்க தேவர்

செயலை பற்றி கூறூமிடத்து

முழுக்க முழுக்க இலையைப் பற்றி முக்கியத்துவம் கொடுத்து விவரிக்கப்பட்டுள்ளது.
மலர்களைப் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை.
மேலும் செவ்வரை, ஒண்தளிர், அம் குழை, அம் தளிர், ஒலிக்குழை
அழல் ஏர் என்று  இளம் தளிர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து விவரிக்கப்பட்டுள்ளது.

  •  கொத்து கொத்தாக பளிச்சென்று ஒளி பொருந்திய அசோக  மலர்களைப்பற்றிய குறிப்போ 
  • மாலை போன்று நீண்ட அடுக்கில் அமைந்துள்ள (பிண்டி) மலர்களைப் பற்றிய குறிப்போ   செயலை தாவரத்தில் குறிப்பிடப்படவில்லை.

ஆகையால் செயலை என்பது மேற்கண்ட 2- தாவரங்களுக்கும் பொருந்தாது, மேற்கூறியஇலைப் பண்புகளை கொண்ட
Cynometra cauliflora என்ற தாவரதிற்கு இலைகளை வைத்து
ஒத்துப் போகிறது.மேலும் மேற்சொன்ன மூன்று தாவரங்களும் CAESALPINIACEAE என்ற ஓரே குடியைச் சார்தவை. ஒரே இயற்கைச் சூழலில் வளருபவை. குறிஞ்சி நிலத்தில் மலைப் பிரதேசத்தில் ஆற்று ஓரங்களில் காணப்படுபவை என்பதைத் தவிர வேறு தொடர்பு இல்லை. ஆகையால் இவை மூன்றும் வெவ்வேறு பிறவியை (Genus) சாரந்தத் தாரவரங்கள் என்பதில் சந்தேகமில்லை.

                                                      செயலை
Cynometra cauliflora

தாவர விளக்கம்

Classification
Name
வகைபாடு
தாவரத் தகவல் மையப் பெயர்
Kingdom
PLANTAE
உலகம்
தாவரம்
Division
DICOTYLEDONAE
தலை முறை
இரு வித்திலை
Order
FABALES
தலைக் கட்டு
ஒரு மைய சூலகத் தாவரம்
Family
CAESALPINIACEAE R.Br.
குடி
கொன்றை குடி
Genus
Cynometra
Linn.
பிறவி
செயலை
Species epithet
cauliflora L.
பெயர் வழி
கோதை
Botanical Name
Cynometra cauliflora L.
தாவரவியல் பெயர்
ஒண்தளிர்ச்செயலைஊட்டியார்
Synonym
3 - Synonyms
Cynometra cauliflora Hassk. var. elongatis
Cynometra cauliflora Hassk. var. subsessilis
வேறு பெயர்கள்
Habit
Tree
வளரியல்பு
மரம்

மரத்தின் பன்புகள்
வளரியல்பு : பசுமைமாரா சிறிய மரம் பரவலாகக் காணப்படும், 50 (15) மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.
மரப்பட்டை : பட்டை சாம்பல் மற்றும் பழுப்பு நிறம் போன்றது.
இலைகள் : சிற்றிலைகள் ஒவ்வொரும் இரண்டாகக் காணப்படும் , மற்றும் இரு தனித்த இலைகள் இருக்கும். சிற்றிலைகள் சமற்ற வடிவம் போன்றது , சுமார் 5-15 செ.மீ. நீளமுடையது, மற்றும் 2.5-7.5 செ.மீ. அகலமானது. பளபளப்பானவை மற்றும் வழவழப்புடையது , மேற்புறம் அடர் பச்சை நிறம் மற்றும் வெளிர் பச்சை நிறமுடன் காணப்படும். சிலநேரங்களில் இலைகளில் உரோமங்கள் இருக்கும்.
மலர்கள் : தண்டுகளில் காணப்படும் மற்றும் சிறு கொத்து போன்று இருக்கும். வெள்ளை நிறமுடையது.
அல்லி இதழ் : இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறமுடையதாக இருக்கும்.
புல்லி இதழ்கள் : இதழ்கள் பின்நோக்கி வளைந்தவை போன்றிருக்கும். முதிர்ந்த மலர்கள் சிறுநீரகம் வடிவம் போன்றது.
கனிகள் : இருபுற வெடிகனி, கிட்டத்தட்ட 5-10 செ.மீ. நீளமுடையது , மற்றும் சுமார் 5 செ.மீ. அகலமானது . இருபுற வெடிகனி, பிளவற்றது, இரண்டு வரிகள் காணப்படும். பச்சை அல்லது மஞ்சள் நிறம் மற்றும் பழுப்பு நிறமுடனும் காணப்படும். சொரசொரப்பானவை மற்றும் மடிப்புடையவை, மேற்பரப்பில் சுருக்கங்கள் காணப்படும். சதைப் பற்றானவை, சாறு நிறைந்தவை மற்றும் மஞ்சள் நிறம் போன்றிருக்கும். வாசனை மற்றும் புளிப்பு சுவையுடையது.
விதைகள் : பெரியதாகக் காணப்படும்.
வாழ்வியம் : மலைப் பிரதேசத்தில் ஆற்று ஓரங்களில்



இலக்கியங்களில் அசோகம் மரத்தை அடையாளம் காட்டும் போது கொத்தான மலர் என்றும், வாசனை பொருந்திய மலர் என்றும், ஒளி பொருந்திய மலர் என்றும் கூறப்படுகிறது.
                பிண்டியைப் பற்றிக் கூறும்போது ஒண் தளிர் என்றும், அணி மலர் மாலையைப் போன்று நீண்ட அடுக்கு பல மலர்களைக் கொண்டது எனக் கூறப்படுகிறது.
                  செயலை தாவரத்தை பொருத்தமட்டில் முழுக்க முழுக்க இளந்தளிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செவ்வரை, ஒண் தளிர், அம் குழை, அம் தளிர் எனக் கூறப்பட்டுள்ளது. 
            ஆகையால் இம்மூன்றும் வெவ்வேறான தாவரங்கள் என்ற கண்ணோட்டத்தில் சங்கஇலக்கியம்,,காப்பியங்கள்,பக்திஇலக்கியம்
பிற்காலஇலக்கியங்கள்  ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 
     இதன் அடிப்படையில் இம்மூன்றும் வெவ்வேறானவை எனக்கருத  இடமுண்டு.
                  இம்மூன்றும் ஒன்றென்று இதுகாறும் அடையாளம்  காணப்பட்டது தவறென்றும்அவைகள் வெவ்வேறானவையே என்பதையும் சந்தேகத்திற்கு இடமின்றி இதன் மூலம் அறிந்து கொண்டு தெளிவடைய வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.



மேனாள்  தலைவர், பண்ருட்டி நகராட்சி,
நிறுவனர், தாவரத் தகவல் மையம், பண்ருட்டி.

No comments:

Post a Comment